Home
Gadgets

புதிய 75 இன்ச் Xiaomi ஸ்மார்ட் டிவி அறிமுகம்.. 32ஜிபி மெமரி.. டால்பி ஆடியோ.. HDR.. எந்த மாடல்? என்ன விலை?

சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி டிவி எப் ப்ரோ 2026 (Xiaomi TV F Pro 2026) மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவந்துள்ளன. இப்போது இந்த புதிய ஸ்மார்ட் டிவிகளின் விலை மற்றும் விவரக்குறிப்புகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சியோமி டிவி எப் ப்ரோ 2026 அம்சங்கள் (Xiaomi TV F Pro 2026 Specifications): இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் 32 இன்ச், 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 75 இன்ச் என ஆறு அளவுகளில் வாங்க கிடைக்கும். அதுவும் மெட்டல் பெசல்-லெஸ் டிசைன் மற்றும் ஃபயர் டிவி "இன்டகிரேஷன்" (Fire TV integration) ஆதரவுகளுடன் இந்த புத்தம் புதிய ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன.

புதிய 75 இன்ச் Xiaomi ஸ்மார்ட் டிவி அறிமுகம்.. என்ன விலை?

குறிப்பாக சியோமி டிவி எப் ப்ரோ 2026 மாடல்கள் 4கே கியூஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளன. மேலும் இந்த டிவிகளின் டிஸ்பிளேவில் 3840 × 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 94 சதவீதம் டிசிஐ-பி3 கலர் காமட் சப்போர்ட் (94% DCI-P3 color gamut support) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளன.

அதேபோல் எச்டிஆர் 10 பிளஸ் (HDR10+), எச்எல்ஜி (HLG), ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode) உள்ளிட்ட தனித்துவமான டிஸ்பிளே அம்சங்களும் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகளில் உள்ளன. பின்பு எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) ஆதரவுடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளன.

கேம் பூஸ்ட் மோட் (Game Boost Mode) ஆதரவு கொண்டுள்ளன இந்த புதிய சியோமி ஸ்மார்ட் டிவிகள். மேலும் கேம் பூஸ்ட் மோட்-க்கு தகுந்தபடி 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவும் உள்ளது. அதேபோல் பில்ட் இன் ஃபயர் டிவி(Built-in Fire TV)சப்போர்ட் இந்த டிவிகளில் இருப்பதால் நெட்பிளிக்ஸ், டிஸ்னி+, பிரைம் வீடியோ மற்றும் லைவ் டிவி சேனல்களை இதில் பயன்படுத்த முடியும்.

360° புளூடூத் ரிமோட் உடன் சியோமி டிவி எப் ப்ரோ 2026 மாடல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இந்த ரிமோட்டில் அலெக்சா வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவும் உள்ளது. அதேபோல் பல ஸ்மார்ட் அம்சங்களும் இந்த புதிய டிவிகளில் உள்ளன. பின்பு குவாட்-கோர் ஏ55 (quad-core A55) பிராஸசர் உடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளன. அதுவும் இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதியுடன் சியோமி டிவி எப் ப்ரோ 2026 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த டிவிகளில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். மேலும் டிவி டிசி டிம்மிங் (DC Dimming), லோவ் ப்ளூ லைட் மோட் (low blue light mode) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த டிவிகளில் உள்ளன.

டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ்:எக்ஸ், டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual:X) ஆதரவு கொண்ட டூயல் 10W ஸ்பீக்கர்கள் உடன் இந்த புதிய சியோமி டிவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த டிவிகளில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். பின்பு ஆப்பிள் ஏர்பிளே (Apple AirPlay), மிராகாஸ்ட் ( Miracast) ஆதரவுகளும் இந்த டிவிகளின் உள்ளன. எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட், ஆப்டிகல் ஆடியோ அவுட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டிவிகளில் உள்ளன.

புதிய 75 இன்ச் Xiaomi ஸ்மார்ட் டிவி அறிமுகம்.. என்ன விலை?

ஆனால் இந்த புதிய சியோமி டிவி எப் ப்ரோ 2026 மாடல்கள் தற்போது ஐரோப்பாவில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விரைவில் இந்த டிவிகள் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த டிவிகளின் விலையை இப்போது பார்க்கலாம்.

சியோமி டிவி எப் ப்ரோ 2026 43 இன்ச் மாடலின் விலை €299 (இந்திய மதிப்பில் ரூ.28,611)
சியோமி டிவி எப் ப்ரோ 2026 50 இன்ச் மாடலின் விலை €399 (இந்திய மதிப்பில் ரூ.38,176)
சியோமி டிவி எப் ப்ரோ 2026 55 இன்ச் மாடலின் விலை €449 (இந்திய மதிப்பில் ரூ.42,971)
சியோமி டிவி எப் ப்ரோ 2026 65 இன்ச் மாடலின் விலை €599 (இந்திய மதிப்பில் ரூ.57,318)
சியோமி டிவி எப் ப்ரோ 2026 75 இன்ச் மாடலின் விலை €799 (இந்திய மதிப்பில் ரூ.76,456)

தற்போது வரை இதன் 32 இன்ச் மாடலின் விலை சியோமி நிறுவனம் வெளியிடவில்லை. விரைவில் இந்த 32 இன்ச் மாடலின் விலை வெளியாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi TV F Pro 2026 launched in Europe: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X