Just In
- 14 hrs ago
WhatsApp-இல் தலைகீழாக டைப் செய்வது எப்படி? அட இது தெரியாம போச்சே!
- 18 hrs ago
ஆப்பிள் இலவசமாக AirPods வழங்கும் Back to School ஆஃபர்.. என்ன செய்தால் 'இது' இலவசமாக கிடைக்கும்?
- 23 hrs ago
பழைய பாஸ்போர்ட் செல்லுபடியாகுமா? இ-பாஸ்போர்ட் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
- 1 day ago
10 மாதம் ஆற்றில் கிடந்த ஐபோன்: உரிமையாளரை தேடிச் சென்ற அதிசியம்!
Don't Miss
- Movies
"தாங்க முடியாத அளவுக்கு Stress".. ஒரே எபிசோடில் வாழ்க்கையை மாற்றிய குக் வித் கோமாளி !
- Finance
'திருப்புமுனை’ மனிதர் வி.கிருஷ்ணமூர்த்தி காலமானார்: தொழிலதிபர்கள் இரங்கல்!
- News
ஓபிஎஸ்ஸுடன் சேர்ந்து அதிமுகவை கைப்பற்ற சதியா? ரகசிய சந்திப்பா? டிடிவி தினகரன் விளக்கம்
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பணப்பற்றாக்குறையால் சில சிக்கல்கள் உண்டாகலாம்...
- Automobiles
புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ-என் கார் நாளை விற்பனைக்கு அறிமுகம்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்!
- Sports
ஆரம்பமே இப்படியா??.. கடுப்பான மைதான ஊழியர்கள்.. இந்தியா - அயர்லாந்து முதல் டி20 போட்டியில் சோதனை!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
86-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
சியோமி நிறுவனம் சியோமி டிவி இஎஸ் ப்ரோ 86-இன்ச் (Xiaomi TV ES Pro 86-Inch)மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. வரும் மே 31-ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட் டிவி சீனாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த புதிய 86-இன்ச் ஸ்மார்ட் டிவி விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி டிவி இஎஸ் ப்ரோ 86-இன்ச் மாடல் ஆனது ஐபிஎஸ் டிஸ்பிளே ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் 4கே ரெசல்யூசன், 3,840x2,160 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,120Hz MEMC motion compensation போன்ற பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த 86-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது டால்பி விஷனை ஆதரிக்கிறது. மேலும் 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், குவாட்-கோர் கார்டெக்ஸ்-ஏ73 சிபியு, மாலி-ஜி52 எம்சி1 ஜிபியு ஆதரவு போன்ற அட்டகாசமான வசதிகளுடன் இந்த ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்டிவியை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இப்படி ஒரு ஆங்கிளில் சந்திர கிரகணத்தை யாரும் பார்த்திருக்க முடியாது.. NASA வெளியிட்ட வீடியோ..

புதிய 86-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவியில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

சியோமி டிவி இஎஸ் ப்ரோ 86-இன்ச் மாடலில் மொத்தம் எட்டு ஸ்பீக்கர் யூனிட்கள் உள்ளன. குறிப்பாக இந்த சாதனம் 30W ஆடியோ வெளியீட்டை வழங்கும்என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி தியேட்டர் அனுபவத்தை வழங்கும் என்றே கூறலாம்.

அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட் டிவியில் Dolby Atmos மற்றும் DTS-HDஆதரவும் உள்ளது. பின்பு மற்ற ஸ்மார்ட் டிவிகள் வழங்கும் அனைத்துசிறப்பு அம்சங்களையும் வழங்குகிறது இந்த சியோமி டிவி இஎஸ் ப்ரோ 86-இன்ச் மாடல்.
ஒப்போ ரெனோ 8 ப்ரோ+, ரெனோ 8 ப்ரோ , ரெனோ 8 அறிமுகம்: வெவ்வேறு ரகம், விதவிதமான விலை- ஆரம்ப விலை!

இரண்டு எச்டிஎம்ஐ 2.1 போர்ட், இரண்டு எச்டிஎம்ஐ 2.0 போர்ட், இரண்டு யுஎஸ்பி போர்ட், AVI இன்புட், ஈதர்நெட் போர்ட், டூயல்-பேண்ட் வைஃபை,புளூடூத் v5.0 போன்ற பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சியோமி டிவி இஎஸ் ப்ரோ 86-இன்ச் மாடல்.

சியோமி டிவி இஎஸ் ப்ரோ 86-இன்ச் மாடலின் விலை CNY 8,499(இந்திய மதிப்பில் ரூ.98,900) ஆக உள்ளது. குறிப்பாக இந்த சாதனத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999