Home
Gadgets

Xiaomi அறிமுகம் செய்த புதிய 32 இன்ச் டிவி.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி OS.. என்ன விலை?

சியோமி (Xiaomi) நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகள் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சியோமி நிறுவனம் ஒரு புதிய ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது சியோமி நிறுவனம் தற்போது சியோமி டிவி ஏ ப்ரோ 32 இன்ச் (Xiaomi TV A Pro 32 inch) மாடலை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட் டிவி ஆனது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த புதிய சியோமி டிவியின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

Xiaomi அறிமுகம் செய்த புதிய 32 இன்ச் டிவி.. என்ன விலை?

சியோமி டிவி ஏ ப்ரோ 32 இன்ச் அம்சங்கள் (Xiaomi TV A Pro 32 inch Specifications): க்யூஎல்இடி (QLED) டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த சியோமி 32-இன்ச் ஸ்மார்ட் டிவி. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1366×768 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் 60Hz refresh rate), எச்டிஆர் (HDR10), எச்எல்ஜி (HLG), 90 சதவீதம் 100% டிசிஐ பி3 கலர் காமட் (DCI P3 Colour Gamut) உள்ளிட்ட அம்சங்களும் உள்ளன.

குறிப்பாக கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த சியோமி டிவி இயங்குகிறது. ஆகவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும். மேலும் யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம்.

குவாட்-கோர் கார்டெக்ஸ்-ஏ53 பிராசஸர்(quad-core Cortex-A53 processor) உடன் இந்த சியோமி டிவி ஏ ப்ரோ 32 இன்ச் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் மாலி ஜி31 எம்பி2 (Mali G31 MP2) கிராஃபிக் பிராசஸர் (Graphic Processor) ஆதரவும் இந்த டிவியில் உள்ளன.

1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி ஆதரவும் இந்த டிவியில் உள்ளது. அதுவும் இந்த டிவியில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, ஈதர்நெட் இரண்டு எச்டிஎம்ஐ போர்ட்கள், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன.

Xiaomi அறிமுகம் செய்த புதிய 32 இன்ச் டிவி.. என்ன விலை?

குரோம்காஸ்ட் ஆதரவும் இந்த டிவியில் உள்ளது. அதேபோல் டால்பி ஆடியோ (Dolby audio), டிடிஎஸ்-எக்ஸ் (DTS-X), டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் (DTS Virtual X) உள்ளிட்ட ஆடியோ அம்சங்களைக் கொண்ட டூயல் 10W ஸ்பீக்கர்கள் இந்த சியோமி டிவியில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தைத் தரும்.

மலேசியாவில் இந்த சியோமி டிவி ஏ ப்ரோ 32 இன்ச் மாடலின் விலை $150 (இந்திய மதிப்பில் ரூ.13,493)-ஆக உள்ளது. குறிப்பாக இந்த சியோமி டிவி ஆனது அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi TV A Pro 32 inch launched in the global market: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X