இனி வாங்குனா இந்த Xiaomi டிவிதான்.. 4K டிஸ்பிளே.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி OS.. என்ன விலை?
சியோமி நிறுவனம் தனது சியோமி டிவி ஏ ப்ரோ 2026 சீரிஸை (Xiaomi TV A Pro 2026 series) அறிமுகம் செய்துள்ளது. அதாவது 55 இன்ச், 65 இன்ச், 75 இன்ச் என மூன்று அளவுகளில் இந்த டிவி வாங்க கிடைக்கும். அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த புதிய டிவிகள் வெளிவந்துள்ளன. இப்போது இந்த டிவிகளின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
சியோமி டிவி ஏ ப்ரோ 2026 அம்சங்கள் ( Xiaomi TV A Pro 2026 Specifications): 4கே கியூஎல்இடி (4K QLED) டிஸ்பிளே உடன் இந்த சியோமி டிவி ஏ ப்ரோ 2026 மாடல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 ரெசல்யூஷன் (resolution), எச்டிஆர்10 பிளஸ் (HDR10+), எச்எல்ஜி (HLG)உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. எனவே இந்த டிவிகள் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

அதேபோல் 94% DCI-P3 கவரேஜ், ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode), 1.07 பில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த சியோமி டிவிகளில் உள்ளன. மேலும் 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) ஆதரவு கொண்டுள்ளன இந்த மூன்று சியோமி ஸ்மார்ட் டிவிகள். குறிப்பாக இந்த டிவிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரிக்கும் கேம் பூஸ்ட் மோட் (Game Boost Mode) கொண்டுள்ளன இந்த 55 இன்ச், 65 இன்ச், 75 இன்ச் டிவிகள். எனவே இந்த டிவிகள் சிறந்த கேமிங அனுபவத்தை வழங்கும். மேலும் எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) ஆதரவும் இந்த டிவிகளில் உள்ளன.
குறிப்பாக இந்த புதிய சியோமி டிவிகளில் லோவ் ப்ளூ லைட் மோட் (low blue light mode) மற்றும் டிசி டிம்மிங் (DC Dimming) ஆதரவும் உள்ளது. இவை கண் அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது. குறிப்பாக கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த மூன்று சியோமி டிவிகளும் இயங்குகின்றன.
அதுவும் கூகுள் அசிஸ்டண்ட் (Google Assistant), குரோம்காஸ்ட் ( Chromecast), ஆப்பிள் எர்பிளே (Apple AirPlay), மிராகாஸ்ட் (Miracast) போன்ற பல அம்சங்கள் புதிய சியோமி 55 இன்ச், 65 இன்ச், 75 இன்ச் டிவிகளில் பயன்படுத்த முடியும். மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுகளுடன் இந்த அட்டகாசமான டிவிகள் வெளிவந்துள்ளன.
யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவிகளில் பயன்படுத்தலாம். குவாட்-கோர் கோர்டெக்ஸ்-V55 ( quad-core Cortex A55) பிராசஸர் உடன் சியோமி டிவி ஏ ப்ரோ 2026 சீரிஸ் வெளிவந்துள்ளன. இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
டால்பி ஆடியோ(Dolby Audio), டிடிஎஸ்- எக்ஸ் (DTS:X), டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual: X) உள்ளிட்ட ஆடியோ அம்சங்கள் கொண்ட இரண்டு 10W ஸ்பீக்கர்கள் உடன் சியோமி டிவி ஏ ப்ரோ 2026 மாடல்கள் வெளிவந்துள்ளன. ஆகவே இந்த டிவிகளில் சிறந்த ஆடியோ அவுட்புட் கிடைக்கும். மேலும் மாலி-ஜி52 ஜிபியு (Mali-G52 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த டிவிகளில் உள்ளன.
மூன்று எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி 2.0 போர்ட், ஈதர்நெட், புளூடூத் 5.0, டூயல்-பேண்ட் வைஃபை, ஆப்டிகல் ஆடியோ அவுட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த சியோமி டிவி ஏ ப்ரோ 2026 மாடல்கள் வெளிவந்துள்ளன.

சியோமி டிவி ஏ ப்ரோ 2026 சீரிஸ் தற்போது ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இந்த புதிய சியோமி டிவிகள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த மூன்று ஸ்மார்ட் டிவிகளின் விலையைப் பார்க்கலாம்.
சியோமி டிவி ஏ ப்ரோ 2026 சீரிஸ் விலை
சியோமி டிவி ஏ ப்ரோ 2026 சீரிஸ் 55 இன்ச் மாடலின் விலை €479 (இந்திய மதிப்பில் ரூ.46,618) ஆக உள்ளது.
சியோமி டிவி ஏ ப்ரோ 2026 சீரிஸ் 65 இன்ச் மாடலின் விலை €649 (இந்திய மதிப்பில் ரூ.63,173) ஆக உள்ளது.
சியோமி டிவி ஏ ப்ரோ 2026 சீரிஸ் 65 இன்ச் மாடலின் விலை €849 (இந்திய மதிப்பில் ரூ.82,645) ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








