ஆர்டர் தூள் பறக்க போகுது.. 8ஜிபி மெமரி.. டால்பி ஆடியோ.. புதிய சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.. எந்த மாடல்?
சியோமி நிறுவனம் புதிய சியோமி டிவி ஏ 43 ஃபுல் எச்டி 2025 (Xiaomi TV A 43 FHD 2025) மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய 43-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
சியோமி டிவி ஏ 43 ஃபுல் எச்டி 2025 அம்சங்கள் (Xiaomi TV A 43 FHD 2025 specifications): இந்த புதிய ஸ்மார்ட் டிவி ஆனது 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (60Hz refresh rate), 178 டிகிரி வியூ ஆங்கிள் ( 178-degree viewing angle) உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் 1 பில்லியன் கலர்ஸ் (1 billion colors) கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. எனவே இந்த டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

4கே ரெசல்யூஷன் சப்போர்ட் இதில் இல்லை என்றாலும் நேர்த்தியான வீடியோ குவாலிட்டி வழங்கும் இந்த சியோமி டிவி. அதேபோல் பெசல்-லெஸ் டிசைன் (bezel-less design) மற்றும் மெட்டல் பெசல்ஸ் (metal bezels) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. சுருக்கமாக கூற வேண்டும் என்றால் சியோமி டிவி ஏ 43 ஃபுல் எச்டி 2025 மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.
ஆடியோவை பொறுத்தவரை, இந்த டிவியில் இரண்டு 8 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த இரண்டு ஸ்பீக்கர்களும் சிறந்தத ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ்:எக்ஸ் (DTS:X), டிடிஎஸ்-விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual:X) உள்ளிட்ட ஆடியோ அம்சங்கள் இதில் உள்ளன. குறிப்பாக இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

சியோமி டிவி ஏ 43 ஃபுல் எச்டி 2025 மாடல் ஆனது கூகுள் டிவி இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), யூடியூப் (YouTube) போன்ற பிரபலமான ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கான அணுகலை வழங்குகிறது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல். இதுதவிர பிளே ஸ்டோரில் ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்து இதில் பயன்படுத்தலாம்.
குரோம்காஸ்ட் மற்றும் மிராகாஸ்ட் (Miracast) ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது சியோமி டிவி ஏ 43 ஃபுல் எச்டி 2025 மாடல். எனவே உங்கள் லேப்டாப், ஸ்மார்ட்போன் போன்றவற்றை இதனுடன் இணைத்துப் பயன்படுத்தலாம். அதேபோல் கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட் ஆதரவையும் கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்.

எச்டிஎம்ஐ போர்ட் (HDMI ports), யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட் போர்ட் ( Ethernet port), புளூடூத், ஏவி இன்புட், வைஃபை உள்ளிட்ட பல்வே கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சியோமி டிவி ஏ 43 ஃபுல் எச்டி 2025 மாடலில் உள்ளன. மேலும் CI+ மாட்யூல் ஸ்லாட்டையும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. குறிப்பாக மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது.
ஆனால் சியோமி டிவி ஏ 43 ஃபுல் எச்டி 2025 மாடலின் விலை மற்றும் விற்பனை விவரங்களை வெளியிடவில்லை சியோமி நிறுவனம். தற்போது இந்த 43-இன்ச் டிவி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த டிவியின் விலை மற்றும் விற்பனை தேதி வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








