கருப்பன் இறங்கிட்டான்.. SUV கார், MAX போன், Open-Ear பட்ஸ், Pro பேண்ட்.. மே 21 இல் Xiaomi செய்யும் சம்பவம்!
சிறிய எண்ணிக்கையிலான டீசர்களை வெளியிட்டு மார்க்கெட்டில் பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளை கிளப்பி விட்டிருந்த ஷாவ்மீ நிறுவனம், ஒருவழியாக ஷாவ்மீ 17 மேக்ஸ் (Xiaomi 17 Max), ஷாவ்மீ ஒய்யு7 ஜிடி (Xiaomi YU7 GT), ஷாவ்மீ பேண்ட் 10 ப்ரோ (Xiaomi Band 10 Pro) மற்றும் பல தயாரிப்புகளை எப்போது அறிமுகம் செய்யவுள்ளது என்கிற அதிகாரப்பூர்வ தேதியை அறிவித்துள்ளது
அது மே 21 ஆம் தேதி ஆகும். குறிப்பிட்ட தேதியில், மேற்குறிப்பிட்ட புதிய தயாரிப்புகள் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று Xஷாவ்மீ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் ஷாவ்மீ 17 மேக்ஸ் ஆனது உலகளவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒரு ஸ்மார்ட்போனாக இருக்கும். ஷாவ்மீ ஒய்யு7 ஜிடி ஆனது சீனாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அறிமுகமாக இருக்கும். இது ஒரு எலக்ட்ரிக் எஸ்யுவி கார்ட் ஆகும், சீனாவில் இது இது "பியூர்பிரெட் ஜிடி கார்" (purebred GT car) என்று சந்தைப்படுத்தப்படுகிறது.

ஷாவ்மீ ஒய்யு7 ஜிடி (Xiaomi YU7 GT) காரில் என்னென்ன எதிர்பார்க்கலாம்? ஸ்போர்ட்ஸ் கார் போன்ற டிரைவிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்குவதோடு, நீண்ட தூர பயணங்களுக்கும் ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் செயல்திறன் புள்ளிவிவரங்களும் ஈர்க்கக்கூடியதாக உள்ளன. ஷாவ்மீ ஒய்யு7 ஜிடி ஆனது 1003 ஹார்ஸ்பவர் வரையிலும், மணிக்கு 300 கிமீ டாப் ஸ்பீட் வரையிலும், மற்றும் CLTC-மதிப்பீட்டின்படி 705 கிலோமீட்டர் வரையிலான எலக்ட்ரிக் டிரைவிங் ரேன்ஜ் வரையிலும் வழங்குவதாக கூறப்படுகிறது.
ஷாவ்மீ 17 மேக்ஸ் (Xiaomi 17 Max) ஸ்மார்ட்போனில் என்னென்ன எதிர்பார்க்கலாம்? அடுத்தது, ஷாவ்மீ 17 மேக்ஸ் ஸ்மார்ட்போன் உள்ளது. இது மிக ஸ்லிம் ஆன பெசல்கள் மற்றும் ஒரு பிளாட் பேனல் வடிவமைப்புடன் கூடிய 6.9-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்ட ஒரு பிக் ஸ்க்ரீன் ஸ்மார்ட்போன் ஆகும். இது மிகவும் வட்டமான மூலைகளுடன் கூடிய நான்கு-வளைவு கொண்ட வ்ராப்அரவுண்ட் ஃபிரேமை பயன்படுத்துவதாக ஷாவ்மீ கூறுகிறது.
ஷாவ்மீயின் முதல் லைக்கா பிராண்டட் 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவானது ஷாவ்மீ 17 மேக்ஸில் இடம்பெறும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது, இந்த போனில் 8000mAh பேட்டரி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஷாவ்மீ 17 (Xiaomi 17), ஷாவ்மீ 17 அல்ட்ரா (Xiaomi 17 Ultra) ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவும் இங்கே அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாவ்மீ பேண்ட் 10 ப்ரோவில் (Xiaomi Band 10 Pro) என்னென்ன எதிர்பார்க்கலாம்? உடற்பயிற்சி ஆர்வலர்களுக்காக, ஷாவ்மீ ஸ்மார்ட் பேண்ட் 10 ப்ரோவும் அறிமுகம் ஆகிறது. இது 9.7மிமீ மெல்லிய பாடி மற்றும் 21.6 கிராம் எடையுள்ள இலகுவான அலுமினியம் அலாய் கட்டமைப்புடன் வரும். இந்த ஃபிட்னஸ் பேண்ட் மேம்பட்ட ஸ்போர்ட்ஸ் கண்காணிப்பு மற்றும் ஹெல்த் மேனேஜ்மென்ட் அம்சங்களை ஆதரிப்பதோடு, 21 நாட்கள் வரை பேட்டரி லைஃப்பையும் வழங்கும் என்று ஷாவ்மீ கூறுகிறது.
ஷாவ்மீயின் முதல் கிளப்-ஆன் இயர்பட்ஸ் (Xiaomi first clip-on earbuds): மே 21 ஆம் தேதி நடக்கும் நிகழ்வில், ஷாவ்மீ தனது முதல் கிளிப்-ஆன் இயர்பட்ஸ் மாடலையும் அறிவிக்கிறது. இது ஓப்பன் இயர் டிசைனை கொண்டுள்ளது மற்றும் ஒரு இயர்பட் வெறும் 5.5 கிராம் எடையை மட்டுமே கொண்டுள்ளது. இந்த இயர்பட்ஸ்கள் மெமரி டைட்டானியம் வயர் மற்றும் மைக்ரோகிரிஸ்டலின் மெட்டல்-கோட்டட் டயாஃப்ரம் உடன் இணைக்கப்பட்ட 11மிமீ டிரைவரை பயன்படுத்துவதாக ஷாவ்மீ நிறுவனம் கூறுகிறது. மேலும் ஷாவ்மீ நிறுவனம், இதற்கான LHDC 5.0 ஆடியோ மற்றும் ஹை-ரெஸ் கோல்ட் சான்றிதழுக்கான ஆதரவையும் விளம்பரப்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications