Home
Gadgets

வீட்டுக்குள்ள தியேட்டர் இல்ல.. தியேட்டர் குள்ள தான் வீடே.. Xiaomi புது 98-இன்ச் ஸ்மார்ட் டிவி.. என்ன மாடல்?

ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் ஒரு முடிவோடு தான் இருக்கிறது போல. இந்நிறுவனத்தின் எக்ஸ் ப்ரோ க்யூஎல்இடி 2025 ஸ்மார்ட் டிவி சீரீஸின் (X Pro QLED 2025 Smart TV Series) கீழ் புதிதாக ஒரு 75-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல், வருகிற பிப்.19 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்ட வேகத்தில் இன்னொரு அறிவிப்பும் வந்துள்ளது.

இந்நிறுவனம் கூடிய விரைவில் அதன் புதிய ஷாவ்மீ எஸ் மினி எல்இடி 2026 (Xiaomi S Mini LED 2026) சீரீஸ் ஸ்மார்ட் டிவிகளை உலகளவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் ஷாவ்மீ அதன் அடுத்த தலைமுறை மினி எல்இடி டிவியை சீனாவிற்கு வெளியே உள்ள சந்தைகளுக்கு கொண்டு வருவது உறுதியாகிறது.

Xiaomi புது 98-இன்ச் ஸ்மார்ட் டிவி.. என்ன மாடல்?

இந்த சீரீஸின் கீழ் 55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச், 85-இன்ச் மற்றும் ஒரு பெரிய 98-இன்ச் ஆப்ஷனும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மாடலுமே 4K UHD ரெசல்யூஷனை (3840 × 2160) வழங்குகிறது, மேலும் Google TV கொண்டு இயங்குகின்றன. இது பயனர்களுக்கு Google Assistant, Google Cast மற்றும் Apple AirPlay போன்ற பெஸ்ட் ஸ்ட்ரீமிங் ஆப்கள் மற்றும் ஸ்மார்ட் அசிஸ்டென்ட்களுக்கான அணுகலையும் வழங்குகிறது.

மேலும் அனைத்து மாடல்களிலும் டூயல் 15W உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர்கள், Wi-Fi மற்றும் Bluetooth போன்ற இணைப்பு விருப்பங்கள் மற்றும் HDMI மற்றும் USB என பரந்த அளவிலான போர்ட் ஆதரவு உள்ளன. முக்கிய வேறுபாடுகளை பொறுத்தவரை 85-இன்ச் மற்றும் 98-இன்ச் வகைகள் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உடன் தனித்து நிற்கின்றன. இது ஆக்ஷன் கேம், திரைப்படங்கள் மற்றும் வீடியோ கேம்களுக்கு ஏற்றதாக அமைகிறது. இதற்கிடையில், சிறிய அளவிலான (55″, 65″, 75″) மாடல்கள் வலுவான HDR ஆதரவுடன் 60Hz ரெஃப்ரெஷ் ரேட்டை வழங்குகின்றன.

முன்னரே குறிப்பிட்டபடி ஷாவ்மீ நிறுவனம் அதன் புதிய ஷாவ்மீ எக்ஸ் ப்ரோ க்யூஎல்இடி 2026 ஸ்மார்ட் டிவி (Xiaomi X Pro QLED 2026 Smart TV) மாடலை வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து வரவிருக்கும் ஸ்மார்ட் டிவிக்கான பிரத்யேக மைக்ரோசைட் இப்போது ஷாவ்மீ இந்தியா (Xiaomi India) ஆன்லைன் ஸ்டோரில் நேரலையில் உள்ளது.

இதன் மூலம் பிப்ரவரி 16 அறிமுகத்திற்கு பின்னர் குறிப்பிட்ட 75 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் ஆனது ஷாவ்மீ நிறுவனத்தின் வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும் என்பது உறுதியாகிறது. என்னென்ன அம்சங்கள்? இந்த புதிய மாடலின்பெரும்பாலான முக்கிய அம்சங்கள் இன்னும் மறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த டிவி சினி மேஜிக்யூ (CineMagiQ) மற்றும் மேக்ஸ் மேஜிக்யூ (MaxMagiQ) அம்சங்களுடன் (இது 2025 மாடல்களிலும் உள்ளது) வரும் என்றும், ஒப்பீட்டளவில் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என்றும் ஷாவ்மீ நிறுவனம் கூறுகிறது.

இது கடந்த ஏப்ரல் 2025 இல் அறிமுகமான ஷாவ்மீ எக்ஸ் ப்ரோ க்யூஎல்இடி 2025 மாடல்களின் அறிமுகத்திற்கு பிறகு வருகிறது. ஆக நிச்சயம் இது 2025 சீரிஸின் 65 இன்ச் மாடலின் விலையை விட அதிகமாகவே இருக்கும். நினைவூட்டும் வண்ணம் ஷாவ்மீ எக்ஸ் ப்ரோ க்யூஎல்இடி 2025 சீரீஸின் 43 இன்ச் மாடல் ரூ.31,999 க்கும், 55 இன்ச் மாடல் ரூ.44,999 க்கும் மற்றும் 65 இன்ச் மாடல் ரூ.64,999 க்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆக புதிய 2026 சீரிஸின் கீழ் வரும் 65 இன்ச் மாடலின் விலை நிச்சயமாக ரூ.70000 க்கு மேலான பட்ஜெட்டில் தான் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi to launch new TV S Mini LED 2026 lineup globally soon Including 98 inch Model
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X