Home
Gadgets

போச்சா.. Nothing-ஐ பார்த்து தம்பி ஓரமா போய் விளையாடு என்ற Xiaomi.. Clip-on Open-ear டிசைனில் புது பட்ஸ்!

டிரான்ஸ்பிரென்ட் டிசைன் என்கிற, அதாவது உள்ளே இருக்கும் ஹார்ட்வேர்களை லேசாக காட்சிப்படுத்தும் வெளிப்படையான வடிவமைப்பு என்கிற "சிங்கிள்" ஸ்பெஷாலிட்டியை கையில் வைத்து கொண்டு இவ்வளவு நாளாக வண்டி ஓடிக்கொண்டிருக்கும் நத்திங் நிறுவனத்தின் தலையில் இடியை இறக்கும் படியாக ஷாவ்மீ ஒரு புதிய பட்ஸ்-ஐ அறிமுகம் செய்யவுள்ளது!

ஷாவ்மீ நிறுவனம் ஒரு புதிய வயர்லெஸ் இயர்பட்ஸை தயாரித்து வருகிறது, ஆனால் இந்த முறை அந்நிறுவனம் சற்று வித்தியாசமான ஒன்றை முயற்சிப்பதாக தெரிகிறது. அதாவது வழக்கமான இன்-இயர் இயர்பட்ஸுக்குப் பதிலாக, வரவிருக்கும் இந்த மாடல், காதுகளில் மாட்டிக்கொள்ளும் கிளிப்-ஆன் ஓபன்-இயர் வடிவமைப்பை பெற்றுள்ளது.

Clip-on Open-ear டிசைனில் புது Xiaomi பட்ஸ்!

இது சௌகரியம் மற்றும் சுற்றுப்புறத்தை பற்றிய விழிப்புணர்வுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. ஷாவ்மீயின் இந்த டிசைன், இதே போன்ற டிசைன் கொண்ட நத்திங் இயர் ஓப்பன் உடன் நேரடியாக மோதுகிறது. கூடவே இது மிகவும் அசாதாரணமான தோற்றத்துடன் கூடிய க்ளாஸி பாடியையும் பெற்றுள்ளது.

இதில் ஒரு வினைல் ரெக்கார்டின் ஃபினிஷிங்கை ஒத்த உலோக அமைப்புகளுடன் இணைந்த, டிரான்ஸ்பிரென்ட் சவுண்ட் எமிட்டிங் பகுதி இருப்பதாகவும் ஷாவ்மீ நிறுவனம் குறிப்பிடுகிறது. ஷாவ்மீ நிறுவனம் வழக்கமாக வெளியிடும் பெரும்பாலான பட்ஜெட் இயர்பட்ஸ்களை விட இது நிச்சயமாக ஸ்டைலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிகிறது.

ஆன்லைனில் லீக்ஸ் ஆன சில படங்கள், இந்த இயர்பட்ஸ் மாடலை பற்றி சில கூடுதல் விவரங்களை வெளிப்படுத்துகின்றன. சார்ஜிங் கேஸில் ஒரு யுஎஸ்பி-சி போர்ட், இண்டிகேட்டர் லைட்கள், ஒரு பிசிக்கல் பட்டன் மற்றும் பில்ட்-இன் ஸ்பீக்கர் கூட இருப்பதாக தெரிகிறது. அந்த ஸ்பீக்கர் இருப்பிடத்தை கண்காணிக்கும் அம்சங்களுக்காக பயன்படுத்தப்படலாம், இருப்பினும் ஷாவ்மீ இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

மேலும் இந்த இயர்பட்ஸ், பிரிட்ஜ் பகுதி உட்பட, அதன் ஃபிரேமின் வெவ்வேறு பகுதிகளில் டச் கெஸ்சர்களை ஆதரிப்பதாக தெரிகிறது. பிளேபேக் கண்ட்ரோல்கள், கால்கள் மற்றும் வால்யூம் அட்ஜெஸ்ட்மென்ட் ஆகியவை அந்த டச் இன்புட்கள் மூலம் கையாளப்பட வாய்ப்புள்ளது.

இது ஷாவ்மீயின் தற்போதைய ஓப்பன்வேர் வரிசையிலிருந்து வேறுபட்ட, முதல் முறையான கிளிப்-ஆன் வகை ஆடியோ தயாரிப்பு ஆகும். காது குழாயை முழுமையாக அடைக்காமல், போக்குவரத்து, உரையாடல்கள் அல்லது உடற்பயிற்சி கூடத்தின் சூழலை கேட்கும் அதே வேளையில் இசையை கேட்க விரும்பும் பயனர்களிடையே, ஓப்பன் இயர் இயர்பட்ஸ் மாடல்கள் சமீபகாலமாக மெதுவாக பிரபலமடைந்து வருகின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஷாவ்மீ நிறுவனம் இன்னும் முழுமையான அம்சங்களை வெளியிடவில்லை, எனவே பேட்டரி திறன், டிரைவர் அளவு, ப்ளூடூத் வெர்ஷன் மற்றும் விலை போன்ற விவரங்கள் தற்போதைக்கு கிடைக்கவில்லை. இந்த மாத இறுதியில், மற்ற ஷாவ்மீ தயாரிப்புகளுடன் (ஷாவ்மீ 17டி சீரீஸ் மற்றும் ஷாவ்மீ 17 மேக்ஸ்) இது அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்பகால டீசர்களை மட்டும் வைத்து பார்க்கும்போது, ​​ஆடியோவைப் போலவே இயர்பட்களின் தோற்றம் மற்றும் வசதிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் பயனர்களை சியோமி குறிவைப்பது போல் தெரிகிறது. இருந்தாலும் வெறுமனே டிசைனை வைத்து மட்டுமே வெற்றியை சுவைக்க முடியாது. சவுண்ட் குவாலிட்டி அதன் வடிவமைப்பிற்கு ஏற்றதாக உள்ளதா என்பதை நாம் அநேகமாக வெளியீட்டிற்கு பிறகே அறிந்துகொள்ள முடியும்.

ஷாவ்மீ 17டி சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இந்த மாத இறுதியில், மே 28 ஆம் தேதி அன்று உலகளவில் அறிமுகமாகிறது என்று செய்திகள் வருகின்றன. டிப்ஸ்டர் யோகேஷ் பிராரின் கூற்றுப்படி, சியோமி 17டி மற்றும் சியோமி 17டி ப்ரோ ஆகியவைகள் மே 28 ஆம் தேதி உலகளவில் அறிமுகமாக உள்ளது.

மேலும் அவர், ஷாவ்மீ 17டி சீரிஸ் உடன் சேர்த்து சியோமி 17 மேக்ஸ் (Xiaomi 17 Max) மாடலை இந்தியா உட்பட உலகச் சந்தைகளுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறி உள்ளார். இது நடந்தால், இந்தியாவில் சியோமியின் டி-சீரிஸ்-க்கு இதுவொரு குறிப்பிடத்தக்க மறுபிரவேசமாக அமையும்.

Best Mobiles in India

English summary
Xiaomi to launch Its First Clip on Open ear Design Earbuds With transparent sound emitting section
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X