Home
Gadgets

நவம்பர் 5: சியோமியின் Mi டிவி 5 சீரிஸ் மற்றும் Mi வாட்ச் அறிமுகம்.!

வரும் நவம்பர் 5-ம் தேதி சீனாவில் சியோமி நிறுவனம் தனது புதிய Mi டிவி 5 சீரிஸ் மற்றும் Miவாட்ச், Mi சிச9 ப்ரோ ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனங்கள் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன்

தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன்

குறிப்பாக சியோமி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் அவர்கள் சியோமி ஸ்மார்ட் வாட்ச்புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது பிளாக் மற்றும் சில்வர் நிறங்களில் உருவாகிஇருப்பது தெளிவாக தெரிகிறது.

AMOLED அம்சம்

AMOLED அம்சம்

மேலும் சியோமி வெளியிடும் இந்த ஸ்மார்ட் வாட்ச் AMOLED அம்சம் கொண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு இது சியோமியின் முதல் வியர் ஒ.எஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வாட்ச் மாடலின் செல்லுலார் வெர்ஷன் இசிம் வசதியுடன் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

குவாண்டம் டாட் தொழில்நுட்பம்

குவாண்டம் டாட் தொழில்நுட்பம்

சியோமி நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்வாட்ச் மாடலும் mi டிவி 5 சீரிஸ் அறிமுகம் செய்யப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய டிவி மாடல்களில் 4கே QLED பேனல் மற்றும் குவாண்டம் டாட் தொழில்நுட்பம் இடம்பெறும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

சியோமி மி சிசி9 ப்ரோ

சியோமி மி சிசி9 ப்ரோ

அதன்பின்பு108எம்பி கேமராவுடன் அட்டகாசமான சியோமி மி சிசி9 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது சியோமி.

சியோமி மி சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் எப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு

இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

108எம்பி( Penta-lens)கேமரா

108எம்பி( Penta-lens)கேமரா

சியோமி மி சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி( Penta-lens)கேமராவுடன் மொத்தம் நான்கு கேமராக்கள்
பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஆடியோ ஜாக்

ஆடியோ ஜாக்

சியோமி மி சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை,ஜபிஎஸ், என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Xiaomi teases Mi TV 5 series, Mi Watch for launch on November 5: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X