Home
Gadgets

Xiaomi Sale.. 8ஜிபி ஸ்டோரேஜ்.. டால்பி ஆடியோ.. ஆஃபரில் ரெட்மி 4கே ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் சியோமி சூப்பர் சேவர் சேல் (Xiaomi Super Saver Sale) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகள், டேப்லெட், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பல சாதனங்களுக்குத் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் ரெட்மி 4கே ஸ்மார்ட் டிவிக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் அமேசானில் 43-இன்ச் ரெட்மி 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஃபயர் டிவி மாடலுக்கு 43 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.24,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது.

Xiaomi Sale.. ஆஃபரில் ரெட்மி 4கே ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

எனவே ரூ.22,499 இருந்தால் போதும் இந்த ரெட்மி 4கே ஸ்மார்ட் டிவியை வாங்கிவிட முடியும். குறிப்பாக தனித்துவமா வடிவமைப்புடன் இந்த ரெட்மி டிவி வெளிவந்துள்ளது. இப்போது 43-இன்ச் ரெட்மி 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஃபயர் டிவி மாடலின் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி அம்சங்கள் (Redmi Smart Fire TV 4K specifications): அதாவது இந்த ரெட்மி டிவி ஆனது 3840 x 2160 பிக்சல்ஸ், ஆட்டோ லோ லேட்டன்சி மோட், 6.5எம்எஸ் ரெஸ்பான்ஸ் டைம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டு வெளிவந்தது. மேலும் இதில் 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே இருப்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Xiaomi Sale.. ஆஃபரில் ரெட்மி 4கே ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவியில் தனித்துவமான விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine)தொழில்நுட்ப வசதி இருக்கிறது. மேலும் மெட்டல் பெசல்-லெஸ் டிசைன் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

மேலும் சக்திவாய்ந்த குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ55 பிராசஸர் (Quad-Core Cortex A55 processor) உடன் இந்த டிவி வெளிவந்தது. இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு மாலி-ஜி52 எம்சி1 ஜிபியு (Mali-G52 MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த டிவி. எனவே அனைத்து கேமிங் ஆப்ஸ்களையும் இந்த டிவியில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

43-இன்ச் கொண்ட ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி ஆனது ஃபயர் ஓஎஸ் 7 மூலம் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த டிவியில் மேம்பட்ட பல புதிய அம்சங்கள் உள்ளன. மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த டிவி. எனவே நீங்கள் நினைத்த ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நெட்ஃபிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், Zee5, சோனிலிவ், யூடியூப் போன்ற தளங்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். இதுதவிர அலெக்ஸா வாய்ஸ் ஆதரவு கொண்ட ஸ்மார்ட் ரிமோட் ஒன்று இந்த டிவியுடன் வருகிறது. அதேபோல் இந்த ரிமோட்டில் அமேசான் ப்ரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் மியூசிக் போன்ற தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் உள்ளன.

Xiaomi Sale.. ஆஃபரில் ரெட்மி 4கே ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?

தரமான 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த டிவி. பின்பு டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ்-எச்டி (DTS-HD) மற்றும் டிடிஎஸ்: விர்ச்சுவல் எக்ஸ் ( DTS: Virtual X) போன்ற ஆடியோ அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன. எனவே இந்த டிவியின் மூலம் சிறந்த ஆடியோ அனுபவத்தைப் பெறமுடியும்.

ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவியின் கனெக்டிவிட்டி பொறுத்தவரை வைஃபை 802.11 ஏசி, ஏர்ப்ளே 2, மிராகாஸ்ட், புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஈதர்நெட், ஆண்டெனா ஆகியவை உள்ளன. அனைத்து சிறப்பான வசதிகளுடன் இந்த டிவி பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Super Saver Sale 43 Percent Discount on Redmi 4K Ultra HD Smart LED Fire TV: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X