சியோமி நிறுவனத்தின் பேராசை; மீண்டும் ஆட்டுமந்தையாவர்களா இந்தியர்கள்.?

|

இந்திய சந்தையில் ஒரு நிலையான இடத்தை ஸ்மார்ட்போன் தயாரிப்புகள் மூலம் ஏற்படுத்திக்கொண்ட சியோமி நிறுவனம், தற்போது இந்திய சந்தையில் அதன் செயல்பாட்டை விரிவாக்குவது சார்ந்த வேலையை செய்து வருகிறது. ஆம், சியோமி நிறுவனம் அதன் இதில் மின்சார வாகனங்கள், பணம் செலுத்தும் வங்கி, மடிக்கணினிகள் மற்றும் பிற பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

சியோமி நிறுவனத்தின் பேராசை; மீண்டும் ஆட்டுமந்தையாவர்களா இந்தியர்கள்.?

தி எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, சியோமி நிறுவனமானது, ரெஜிஸ்ட்ரார் ஆப் கம்பெனியை தாக்கல் செய்துள்ளது. அதில் "மின்சாரம் அல்லது வேறு மின்சார நோக்கம் அல்லது இயந்திர சக்தியை அடிப்படையாகக் கொண்ட, போக்குவரத்து மற்றும் பிற போக்குவரத்து உபகரணங்களுக்கான எல்லா வகையான வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள்" ஆகியவைகளை விற்பனை செய்யலாம் என்ற கூறு காணப்பட்டுள்ளது.

சியோமி நிறுவனத்தின் பேராசை; மீண்டும் ஆட்டுமந்தையாவர்களா இந்தியர்கள்.?

தவிர, சியோமி நிறுவனமானது வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், பேமண்ட்ஸ் பேங்க், குத்தகை மற்றும் நிதி மற்றும் இதர நிதி சார்ந்த தீர்வு அமைப்பு ஆபரேட்டர்கள், மொபைல் மெய்நிகர் நெட்வொர்க் ஆபரேட்டர்கள் மற்றும் பிற நிதி சேவைகளையும் தொடங்கவுள்ளது.

சியோமி நிறுவனத்தின் பேராசை; மீண்டும் ஆட்டுமந்தையாவர்களா இந்தியர்கள்.?

எல்லாவற்றிக்கும் மேலாக இந்த பிராண்ட், இந்தியாவில் அதன் மடிக்கணினிகள், கணினி பாகங்கள், நெட்வொர்க் உபகரணங்கள் மற்றும் லைஃப் ஸ்டைல் ​​தயாரிப்புகளையும் விற்க முடிவு செய்துள்ளது. மேலும்,சியோமி உடைகள், பொம்மைகள், பாக்பேக்ஸ் மற்றும் சூட்கேஸ்கள் போன்ற அனைத்தையும் இந்தியாவில் விற்பனை செய்யும் என்பதையும் வெளியான அறிக்கை உணர்த்துகிறத.

சியோமி நிறுவனத்தின் பேராசை; மீண்டும் ஆட்டுமந்தையாவர்களா இந்தியர்கள்.?

ஏற்கனவே வீட்டு உபயோகப் பொருட்கள், மடிக்கணினிகள், ஸ்மார்ட் லைட்டிங் சொல்யூஷன்ஸ், சுகாதாரப் பொருட்கள், உடைகள், காலணிகள், பைகள், சமையல் அறை மற்றும் உணவளிப்பு பொருட்கள் போன்ற அனைத்து வகையான சியோமி தயாரிப்புகளும் சீனாவில் விற்பனை செய்யப்படுகின்றன. நிறுவனத்தின் புரிந்துணர்வின் கீழ் இந்த தயாரிப்புகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேனல்களின் வழியாக இந்தியாவிலும் விற்கப்படும்.

Best Mobiles in India

English summary
Xiaomi is also looking into non-banking financial companies, payments bank, leasing and financing, other payment gateway, settlement systems operators and more.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X