Home
Gadgets

பழைய டிவியை மாத்த நேரம் வந்தாச்சு.. புதிய 4கே டிவிகளை அறிமுகம் செய்த Xiaomi .! பட்ஜெட் விலை.! விற்பனை எப்போது?

சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன்களை விட ஸ்மார்ட் டிவிகளை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்துகிறது என்றே கூறலாம். குறிப்பாக இந்நிறவனம் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் அட்டகாசமான டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது சியோமி .

அதாவது சியோமி நிறுவனம் தற்போது இந்தியாவில் சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ்-சீரிஸ் (Xiaomi Smart TV X-series) மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ்-சீரிஸ் ஆனது 43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச், 65-இன்ச் ஆகிய அளவுகளில் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகள் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த டிவிகளின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

புதிய 4கே டிவிகளை அறிமுகம் செய்த Xiaomi.! பட்ஜெட் விலை.!

அதாவது சியோமி அறிமுகம் செய்துள்ள நான்கு ஸ்மார்ட் டிவிகளும் 4கே பெசல்-லெஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவம் கொடுக்கும்;. குறிப்பாக 4கே ஆதரவு என்பதால் தனித்துவமான திரை அனுபவம் கிடைக்கும். மேலும் எச்டிஆர் 10 ஆதரவு மற்றும் டால்பி விஷன், விவிட்(Vivid) பிக்சர் என்ஜின், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களடன் இந்த சியோமி ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன.

சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ்-சீரிஸ் மாடல்களில் டால்பி ஆடியோ, டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் ( DTS Virtual:X), டிடிஎஸ்: எக்ஸ்(DTS:X) உள்ளிட்ட ஆடியோ அம்சங்கள் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட் டிவிகள் 30 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஸ்மார்ட் டிவிகள் தரமான ஆயோவை வழங்கும என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ்-சீரிஸ் 43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச், 65-இன்ச் ஆகிய டிவிகளில் தரமான ஏஆர்எம் கார்டெக்ஸ்-ஏ55 பிராசஸர் (ARM Cortex-A55 processor) வசதியுடன் மாலி ஜ52 எம்பி1 ஜிபியு (Mali G52 MP1 GPU) ஆதரவு உள்ளன. எனவே இந்த டிவிகளை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக ஆப்ஸ்களை இந்த டிவிகளில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

கூகுள் டிவி(Google TV) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த நான்கு சியோமி ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. அதேபோல் இந்த டிவிகளில் பேட்ச்வால் (PatchWall) ஆதரவும் உள்ளது. இதுதவிர கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை புதிய சியோமி ஸ்மார்ட் டிவிகளில் பயன்படுத்த முடியும்.

புதிய 4கே டிவிகளை அறிமுகம் செய்த Xiaomi.! பட்ஜெட் விலை.!

அதேபோல் இந்த சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ்-சீரிஸ் மாடல்கள் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளன. அதேபோல் இந்த டிவிகளுக்கு எம்ஐ ஹோம் சப்போர்ட் உள்ளது. குறிப்பாக ஸ்மார்ட் ரிமோட் ஆதரவுடன் இந்த சியோமி ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளது. பின்பு இந்த டிவிகளில் அனைத்து ஆப்ஸ்களையும் பயன்படுத்த முடியும்.

சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ்-சீரிஸ் மாடல்கள் வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆப்டிகல், ஈதர்நெட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளன. மேலும் இந்த நான்கு ஸ்மார்ட் டிவிகளின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 43-இன்ச் விலை ரூ.28,999, 50-இன்ச் விலை ரூ.34,999, 55-இன்ச் விலை ரூ.39,999, 65-இன்ச் விலை 61,999. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவிகள் ஆகஸ்ட் 4-ம் தேதி பிளிப்கார்ட் மற்றும் எம்ஐ.காம் தளங்களில் விற்பனைக்கு வரும். அதேபோல் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவிகளை வாங்கினால் ரூ.3000 தள்ளுபடி கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Smart TV X Series with Dolby Vision, 30W speakers has been launched in India: check specifications, price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X