வாங்குனா இப்படி ஒரு Smart TV தான் வாங்கணும்.! புதிய Xiaomi Smart TV X Series விலை என்ன?

|

Xiaomi Smart TV X Series : தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது, இப்போதே நம்மில் பலர் இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகைக்கு என்ன வாங்குவது என்று ஒரு ஷாப்பிங் லிஸ்ட்டை தயார் செய்திருப்போம். உங்களுடைய ஷாப்பிங் லிஸ்டில் புது ஸ்மார்ட் டிவி என்று எழுதியிருந்தால் இந்த பதிவு உங்களுக்கானது தான். ஒருவேளை உங்கள் லிஸ்டில் ஸ்மார்ட் டிவி இல்லை என்றாலும் இப்போதே ஒன்றை சேர்த்துக்கொள்ளுங்கள். காரணம், Xiaomi இப்போது புதிய X சீரிஸ் ஸ்மார்ட்டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

4K தரத்தில் புது ஸ்மார்ட் டிவி வாங்க இப்போதே பிளான் செய்யுங்கள்

4K தரத்தில் புது ஸ்மார்ட் டிவி வாங்க இப்போதே பிளான் செய்யுங்கள்

ஆம், நீங்கள் நம்பி வாங்கக்கூடிய தரமான புது அம்சங்களுடன் இயங்கும் ஒரு புதிய சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடல்களை சியோமி நிறுவனம் இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதுவும், இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை நிறுவனம் 4K தரத்தில், பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது என்பது தான் சிறப்பே. பண்டிகை காலத்தின் போது இந்த ஸ்மார்ட் டிவிகளை நிச்சயமாக நீங்கள் சலுகையுடன் வாங்க வாய்ப்பு கிடைக்குமென்று நாங்கள் நம்புகிறோம். அதற்கேற்ப இப்போதே பிளான் செய்துகொள்ளுங்கள்.

Xiaomi Smart TV X சீரிஸ் இல் மொத்தம் எத்தனை மாடல்கள்?

Xiaomi Smart TV X சீரிஸ் இல் மொத்தம் எத்தனை மாடல்கள்?

சரி, Xiaomi அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட் டிவி X சீரிஸ் மாடல்களில் என்ன சிறப்பு இருக்கிறது? இதன் விலை என்ன? இதை எப்போதிலிருந்து வாங்கலாம்? என்பது போன்ற விபரங்களை இப்போது பார்க்கலாம். Xiaomi Smart TV X சீரிஸ் மாடலின் கீழ் இப்போது இந்தியாவில் 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த 3 மாடல்களும் 43' இன்ச், 50' இன்ச் மற்றும் 55' இன்ச் என்ற வெவ்வேறு அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Jio 5G Phone அறிமுகத்தை உறுதி செய்தது ரிலையன்ஸ்.! என்ன விலையில் எப்போது வாங்கலாம்?Jio 5G Phone அறிமுகத்தை உறுதி செய்தது ரிலையன்ஸ்.! என்ன விலையில் எப்போது வாங்கலாம்?

ஸ்மார்ட் டிவி-னா இதான்ப்பா? என்ன தரம் என்ன டிசைன்!

ஸ்மார்ட் டிவி-னா இதான்ப்பா? என்ன தரம் என்ன டிசைன்!

மூன்று மாடல்களும் 3840 x 2160 பிக்சல்கள் கொண்ட 4K தீர்மானத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவிகள் 60Hz ரெஃபிரெஷ் ரேட் வீதத்துடன் LED பேக்லிட் LCD பேனலைக் கொண்டுள்ளன என்பது கவனிக்கத்தக்கது. இவை, HDR10, HLG மற்றும் Dolby Vision போன்ற பல HDR தரநிலை அம்சங்களை ஆதரிக்கும் டிஸ்பிளேவுடன் வருகிறது. இது 94% DCI-P3 கலர் காமேட் தொழில்நுட்பத்தை உள்ளடக்கியது. இது MEMC மற்றும் 'விவிட் பிக்சர் என்ஜின்' எனப்படும் Xiaomi யின் தனியுரிம கலர் டியூனிங் அம்சத்துடன் இடம்பெற்றுள்ளது.

Android TV 10 உடன் இயங்கும் அட்டகாசமான புது வரவு

Android TV 10 உடன் இயங்கும் அட்டகாசமான புது வரவு

இது குவாட் கோர் ARM Cortex-A55 CPU மற்றும் ARM Mali G52 MC1 GPU உடன் வருகிறது. இது பெயரிடப்படாத சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் டிவிகள் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகின்றது. இது PatchWall அம்சத்துடன் Android TV 10 இயங்குதளத்தில் இயங்குகிறது. முன்னணி ஸ்ட்ரீமிங் ஆப்ஸ், பிளே ஸ்டோர், கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் குரோம்காஸ்ட் போன்ற சிறப்பான அம்சங்களின் ஆதரவுடன் வருகிறது.

பூமியை விட ஆழமான கடல்கள்..2 சூரியனுடன் NASA கண்டுபிடித்த சூப்பர் எர்த்.! மனிதன் வாழ முடியுமா?பூமியை விட ஆழமான கடல்கள்..2 சூரியனுடன் NASA கண்டுபிடித்த சூப்பர் எர்த்.! மனிதன் வாழ முடியுமா?

தியேட்டருக்கு நிகரான ஆடியோ குவாலிட்டி வேண்டுமா?

தியேட்டருக்கு நிகரான ஆடியோ குவாலிட்டி வேண்டுமா?

இந்த X சீரிஸ் ஸ்மார்ட் டிவிகள் டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, 3 x HDMI 2.1 (ALLM, eARC ஐ ஆதரிக்கிறது), 2 x USB, ஈதர்நெட், AV, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் ஆப்டிகல் போர்ட் ஆகியவற்றுடன் வருகிறது. இது 30W ஸ்பீக்கர்கள் உடன் Dolby Audio, DTS Virtual X மற்றும் DTS-HD போன்ற ஆடியோ ஆதரவுடன் வருகிறது. இந்த Xiaomi Smart TV X சீரிஸ் இன் விலை மற்றும் விற்பனை விபரங்கள் பற்றி இப்போது பார்க்கலாம்.

Xiaomi Smart TV X சீரிஸ் ஸ்மார்ட் டிவி விலை என்ன?

Xiaomi Smart TV X சீரிஸ் ஸ்மார்ட் டிவி விலை என்ன?

Xiaomi Smart TV X சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடல்கள் இந்தியாவில் பின்வரும் விலைக் குறிகளில் விற்பனை செய்யப்படும். இதன்படி, Xiaomi Smart TV X Series 43' இன்ச் மாடல் ரூ.28,999 விலையில் கிடைக்கும். இதன் 50' இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் ரூ. 34,999 என்ற விலையில் வாங்கக் கிடைக்கும். அதேபோல், இதன் 55' இன்ச் கொண்ட ஸ்மார்ட் டிவி மாடல் ரூ.39,999 விலையில் வாங்க கிடைக்கும்.

உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!உறங்கும் போது உங்கள் அருகில் Smartphone-ஐ வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உஷார் மக்களே!

எப்போதிலிருந்து, எங்கிருந்து Xiaomi Smart TV X சீரிஸ் ஸ்மார்ட் டிவியை வாங்கலாம்?

எப்போதிலிருந்து, எங்கிருந்து Xiaomi Smart TV X சீரிஸ் ஸ்மார்ட் டிவியை வாங்கலாம்?

இந்த ஸ்மார்ட் டிவிகள் Mi.com, Mi Home, Flipkart மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் வழியாக செப்டம்பர் 14 அன்று மதியம் 12 மணி முதல் விற்பனைக்குக் கிடைக்கும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிச்சயமாக சியோமி சில சலுகைகளை அறிவிக்கும், அப்போது இந்த ஸ்மார்ட் டிவி மாடலை நீங்கள் இன்னும் குறைவான விலையில் கூட வாங்குவதற்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்பதனால் உங்கள் ஷாப்பிங் திட்டத்தை இப்போதே சரியாக பிளான் செய்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Xiaomi Smart TV X Series with 4K Resolution Launched in India Know Price and Availability

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X