Xiaomi சைலண்ட் சம்பவம்.. டால்பி ஆடியோ.. 8GB மெமரி.. புதிய 4K டிவிகள் அறிமுகம்.. எந்த மாடல்? என்ன விலை?
சியோமி நிறுவனம் இந்தியாவில் சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் 2024 ((Xiaomi Smart TV X Series 2024) 4கே டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அதாவது 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச் என மூன்று அளவுகளில் வாங்க கிடைக்கும். குறிப்பாக இந்த டிவிகள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது இந்த டிவிகளின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.
சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் 2024 அம்சங்கள் (Xiaomi Smart TV X Series 2024 specifications): சியோமி-இன் 43-இன்ச், 50-இன்ச், 65-இன்ச் (3840 × 2160 பிக்சல்ஸ்) டிவி மாடல்கள் 4K டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளன. மேலும் 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) கொண்டுள்ளன இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள்.

இதுதவிர 94 சதவீதம் டிசிபிஐ-3 கலர் காமட் (94% DCPI-3 color gamut), ஏஎல்எல்எம் (ALLM), எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology), விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine), டால்பி விஷன் டைம் (Dolby Vision Time), 6.5எம்எஸ் ரெஸ்பான்சஸ் டைம் (6.5ms Response Time) உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளன சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் 2024 4கே டிவி மாடல்கள்.
தரமான குவாட் கோர் பிராசஸர் (ஏ55) உடன் சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் 2024 4கே டிவி மாடல்கள் வெளிவந்துள்ளன. எனவே இந்த டிவிகளை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதாவது இந்த பிராசஸர் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் மாலி ஜி52 எம்சி1 ஜிபியு (Mali G52 MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளன இந்த புதிய சியோமி டிவிகள்.
2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் உடன் சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் 2024 மாடல்கள் வெளிவந்துள்ளன. எனவே இந்த டிவிகளில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். பின்பு பேட்ச்வால் (PatchWall) மற்றும் கூகுள் டிவி ஒஎஸ் (Google TV OS) மூலம் இந்த புதிய டிவிகள் இயங்குகின்றன. எனவே கூகுளின் அனைத்து சிறப்பான வசதிகளையும் இந்த டிவியில் பயன்படுத்தலாம்.
டால்பி ஆடியோ (Dolby audio), டிடிஎஸ்-எக்ஸ் (DTS-X), டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் (DTS Virtual X) உள்ளிட்ட ஆடியோ அம்சங்களை கொண்ட 30W ஸ்பீகர்கள் உடன் சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் 2024 மாடல்கள் வெளிவந்துள்ளன. எனவே இந்த டிவிகளில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
MI வாய்ஸ் கண்ட்ரோல் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளன புதிய சியோமி டிவிகள். மேலும் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், யூடியூப், சோனி லிவ் உள்ளிட்ட பல்வேறு ஒடிடி ஆப்ஸ்களை இந்த டிவிகளில் பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த டிவிகளின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0,எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், இயர்போன், ஈதர்நெட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளன சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் 2024 மாடல்கள். மேலும் பெசல்-லெஸ் டிசைன் உடன் இந்த சியோமி டிவி மாடல்கள் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம்.
சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் 2024 43 இன்ச் மாடலின் விலை ரூ.24,999-ஆக உள்ளது, 50 இன்ச் மாடலின் விலை ரூ.31,999-ஆக உள்ளது, 55 இன்ச் மாடலின் விலை ரூ.35,999-ஆக உள்ளது. எம்.காம், பிளிப்கார்ட், அமேசான் போன்ற தளங்களில் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி இந்த புதிய சியோமி டிவிகளை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








