Home
Gadgets

மூன்று அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்த Xiaomi.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?

ஒன்பிளஸ், சாம்சங் நிறுவனங்களுக்குப் போட்டியாக இந்தியாவில் மூன்று அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது சியோமி நிறுவனம். அதாவது சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ் ப்ரோ 43-இன்ச்,50-இன்ச், 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது சியோமி நிறுவனம்.

குறிப்பாக இந்த மூன்று ஸ்மார்ட் டிவிகளுக்கும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த டிவிகளின் வடிவமைப்பு கூட மிகவும் அருமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது சியோமி நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட் டிவிகளின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

மூன்று அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்த Xiaomi.!

அதாவது சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ் ப்ரோ 43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச் மாடல்கள் 3840 × 2160 பிக்சல்ஸ் மற்றும் 4கே டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளன. பின்பு டால்பி விஷன், 178-degree viewing angle, எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, எச்எல்சி, அடாப்டிவ் பிரைட்னஸுடன் கூடிய விவிட் பிக்சர் எஞ்சின் 2 உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளன.

அதேபோல் இந்த மூன்று ஸ்மார்ட் டிவிகளில் குவாட்-கோர் (ஏ55) பிராசஸர் உடன் மாலி ஜி52 எம்பி2 ஜிபியு வசதி உள்ளன. எனவே இந்த டிவிகளை இயக்குவதற்கு அருமையாக இருக்கும். குறிப்பாக கேமிங் ஆப்ஸ்களை இந்த டிவிகளில் தடையின்றி இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இவற்றின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

மூன்று அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்த Xiaomi.!

சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ் ப்ரோ 43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச் மாடல்களில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. பின்பு PatchWall மற்றும் கூகுள் டிவி இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புத்தம் புதிய ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. எனவே நீங்கள் நினைத்த செயலிகளை இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.

நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு செயலிகளை இந்த புதிய சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ் ப்ரோ 43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச் மாடல்களில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த மூன்று ஸ்மார்ட் டிவி மாடல்களும் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட 50-இன்ச், 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் 40 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளன. பின்பு 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மட்டும் 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த மூன்று டிவிகளும் டால்பி அட்மோஸ், டிடிஎஸ் ஆதரவைக் கொண்டுள்ளன. எனவே இதன் மூலம் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

சியோமி அறிமுகம் செய்துள்ள இந்த மூன்று டிவிகளுடன் எம்ஐ வாய்ஸ் ரிமோட் வழங்கப்படும். குறிப்பாக வாய்ஸ் கண்ட்ரோல் உடன் இந்த டிவியை இயக்கலாம். மேலும் வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட், ஆப்டிகல் உள்ளிட்ட பல கணெக்டிவிட்டி ஆதரவைக் கொண்டுள்ளன இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள்.

மூன்று அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்த Xiaomi.!

சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ் ப்ரோ 43-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.32,999-ஆக உள்ளது. பின்பு இதன் 50-இன்ச் ஸ்மார்ட் டிவியை ரூ.41,999-விலையில் வாங்க முடியும். அதன்பின்பு இதன் 55-இன்ச் ஸ்மார்ட் டிவியை ரூ.47,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த மூன்று டிவிகளும் ஏப்ரல் 19-ம் தேதி எம்ஐ.காம், பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Smart TV X Pro 43, 50 and 55 models launched in India: Check Price, Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X