Home
Gadgets

8ஜிபி ஸ்டோரேஜ்.. டால்பி ஆடியோ.. கடந்த மாதம் அறிமுகமான Xiaomi டிவிக்கு தள்ளுபடி.. எங்கே வாங்கலாம் தெரியுமா?

கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் சியோமி ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ் 2023 (Xiaomi Smart TV A Series 2023) ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக 32-இன்ச், 40-இன்ச், 43-இன்ச் ஆகிய மூன்று அளவுகளில் சியோமி ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ் 2023 வெளிவந்தன. இந்நிலையில் 32-இன்ச் மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது சியோமி ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ் 32-இன்ச் மாடல் ஆனது முன்பு ரூ.13,999-க்கு விற்பனைக்கு வந்தது. ஆனால் பிளிப்கார்ட் (Flipkart)தளத்தில் இந்த ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவியை இப்போது ரூ.12,999-க்கு வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும்.

கடந்த மாதம் அறிமுகமான Xiaomi டிவிக்கு தள்ளுபடி.. எங்கே வாங்கலாம்?

இப்போது இந்த புதிய 32-இன்ச் ஸ்மார்ட் டிவியின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது மெட்டல் பெசல்-லெஸ் (Bezel-less) வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ் 32-இன்ச் மாடல். மேலும் எச்டி டிஸ்பிளே மற்றும் 1366 x 768 பிக்சல்ஸ் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான 32-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine), 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ் 32-இன்ச் மாடல். எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவம் வழங்கும். அதேபோல் சிறந்த மென்பொருள் வசதியைக் கொண்டுள்ளது இந்த 32-இன்ச் சியோமி டிவி.

அதாவது இந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவியில் குவாட்-கோர் ஏ35 சிப் (Quad Core A35) வசதி உள்ளது. இது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த சியோமி ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ் 32-இன்ச் மாடல் ஆனது கூகுள் டிவி (Google TV) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய 32-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி. அதேபோல் கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு, பிளே ஸ்டோர் போன்ற பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளன இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. மாலி ஜி31 எம்பி2 (Mali G31 MP2) கிராஃபிக் பிராசஸர் (Graphic Processor) ஆதரவு கொண்டுள்ளது இந்த டிவி.

பேட்ச்வால் + (PatchWall +) ஆதரவைக் கொண்டுள்ளது சியோமி ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ் 32-இன்ச் மாடல். அதேபோல் ஆட்டோ லோ லேட்டன்சி மோட் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சியோமி ஸ்மார்ட் டிவி. மேலும் டால்பி ஆடியோவுடன் கூடிய 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ் 32-இன்ச் மாடல். எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

கடந்த மாதம் அறிமுகமான Xiaomi டிவிக்கு தள்ளுபடி.. எங்கே வாங்கலாம்?

புளூடூத் 5.0, வைஃபை 802.11, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட், ஏவி, 3.5எம்எம் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த சியோமி ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ் 32-இன்ச் மாடல் வெளிவந்துள்ளது. பெசல்-லெஸ் டிசைன் கொண்ட இந்த சியோமி டிவி ஒரு பிரீமியம் டிவி போலவே உள்ளது. எனவே கம்மி விலையில் ஒரு நல்ல 32-இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த சியோமி ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ் 32-இன்ச் மாடலை வாங்கலாம்.

அதேபோல் சியோமி நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் டிவிகள் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருவதால் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Smart TV A Series 32-inch model is offered at Rs.1000 off on Flipkart: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X