Xiaomi கெத்து.. 32 இன்ச் Smart TV.. வெறும் ரூ.12,000 விலையிலா? 1 இல்லை 2-ஆ கூட வாங்கலாம்.. எந்த மாடல்?
சியோமி (Xiaomi) நிறுவனம் இந்தியாவில் வெறும் 12,000 ரூபாய் விலை முதல் புதிய ஸ்மார்ட் டிவி (Smart TV) சாதனங்களை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. இந்த புதிய சியோமி ஸ்மார்ட்-டிவி (Xiaomi Smart TV) சாதனங்களை எங்கிருந்து வாங்கலாம் என்பது இங்கே.
சியோமி நிறுவனம், புதிதாக 32" இன்ச் (32 inch TV), 40" இன்ச் (40 inch TV) மற்றும் 43" இன்ச் (43 Inch TV) என்ற மூன்று டிஸ்பிளே அளவு கொண்ட ஸ்மார்ட் டிவி சாதனங்களை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை சியோமி நிறுவனம் அதன் A சீரிஸ் ஸ்மார்ட் டிவி வரிசையில் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி ஸ்மார்ட் டிவி A சீரிஸ் 2024 எடிஷன் (Xiaomi Smart TV A Series 2024 Edition):
கடந்த வருடம் சியோமி நிறுவனம் அறிமுகம் செய்த அதன் சியோமி A சீரிஸ் 2023 ஸ்மார்ட்-டிவி மாடலக்ளை நிறுவனம் இப்போது புதிய சியோமி ஸ்மார்ட் டிவி A சீரிஸ் 2024 எடிஷன் (Xiaomi Smart TV A Series 2024 Edition) மாடல்கள் மூலம் அப்கிரேட் செய்துள்ளது. இந்த புதிய சியோமி ஸ்மார்ட் டிவி A சீரிஸ் 2024 மாடல் வரிசையின் கீழ் நிறுவனம் 3 பட்ஜெட் ஸ்மார்ட் டிவி மாடல்களை வெளியிட்டுள்ளது.
இதன் விபரம் மற்றும் விலை பற்றிய தகவலை இப்போது பார்க்கலாம். இந்த புதிய சியோமி ஸ்மார்ட் டிவி A சீரிஸ் 32" இன்ச் டிஸ்பிளே மாடல் குவாட் கோர் கோர்ட்டெக்ஸ் A35 (quad core Cortex A35) சிப்செட் பிராசஸர் உடன் வருகிறது. மறுபுறம், சியோமியின் புதிய 40" இன்ச் மற்றும் 43" இன்ச் மாடல் டிவிகள் குவாட் கோர் கோர்ட்டெக்ஸ் A55 (Cortex A55) பிராசஸர் உடன் வெளிவந்துள்ளது.
சியோமி அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் சியோமி டிவி பிளஸ் (Xiaomi TV+) அம்சத்தை கொண்டுள்ளது. இது 150 லைவ் சேனல் ஆதரவை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட் டிவியின் 32" இன்ச் டிஸ்பிளே சாதனம் 1366 x 768 ரெசொலூஷன் உடன் வருகிறது. அதேபோல், இதன் 40" இன்ச் மற்றும் 43" இன்ச் மாடல் FHD டிஸ்பிளேவுடன் வருகிறது.

சியோமி ஸ்மார்ட் டிவி A சீரிஸ் 2024 32 இன்ச் விலை (Xiaomi Smart TV A Series 2024 32 Inch Price):
இந்த சியோமி ஸ்மார்ட் டிவி வரிசையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 3 மாடல்களும் 60Hz ரெஃப்ரஷ் ரேட் (60Hz refresh rate) ஆதரவை கொண்டுள்ளது. இது 16.7 மில்லியன் கலர் டெப்த் அம்சம் (16.7 million color depth), 178 டிகிரி வியூவிங் ஆங்கிள் (178 degree viewing angle) மற்றும் விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine) போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
இந்த புதிய சியோமி ஸ்மார்ட் டிவி A சீரிஸ் 2024 இன் 32 இன்ச் மாடல் 1GB ரேம் (RAM) அம்சத்தை வழங்குகிறது. மறுபுறம் 40" இன்ச் மற்றும் 43" இன்ச் மாடல்கள் 1.5GB ரேம் அம்சத்தை வழங்குகிறது. மூன்று மாடல்களும் 8GB ஸ்டோரேஜ் (Storage) உடன் வருகிறது. இந்த டிவி (TV) பேட்ச்வால் பிளஸ் (Patchwall+) ஆதரவை வழங்குகிறது.
கூகுள் டிவி (Google TV) உடன் ஆண்ட்ராய்டு 11 (Android 11) மற்றும் சியோமி டிவி+ (Xiaomi TV+), இது 20W அவுட்போட ஆடியோ மற்றும் டால்பி ஆடியோ (Dolby audio) மற்றும் டிடிஎஸ் எக்ஸ் சப்போர்ட் (DTS X Support) போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது. இதில் ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), HDMI, வைஃபை (WiFi), யூஎஸ்பி 2.0 (USB 2.0) மற்றும் ஈதர்நெட் அம்சமும் உள்ளது.
இந்த புதிய Xiaomi Smart TV A Series 2024 Edition 32" இன்ச் மாடல் அமேசான் தளம் வழியாக ரூ.12,999 என்ற விலையுடன், வாங்க கிடைக்கிறது. இதன் 40" இன்ச் மற்றும் 43" இன்ச் மாடல் முறையே ரூ.22,999 மற்றும் ரூ.24,999 என்ற விலையுடன் வருகிறது.


Click it and Unblock the Notifications








