Home
Gadgets

சீனாக்காரன் சும்மா செதுக்கி வச்சிருக்கான்.. வெறும் ரூ.13,999 க்கு இப்படி ஒரு ஸ்மார்ட் TV-ஆ? இந்தியர்கள் குஷி!

சியோமி நிறுவனம் அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது சியோமி ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ் 2023 (Xiaomi Smart TV A Series 2023) ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த டிவிகள் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

அதாவது சியோமி ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ் 2023 ஆனது 32-இன்ச் (எச்டி), 40-இன்ச்(ஃபுல் எச்டி), 43-இன்ச் (ஃபுல் எச்டி) என்கிற மூன்று அளவுகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது இந்த புதிய ஸ்மார்ட் டிவிகளின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

வெறும் ரூ.13,999 க்கு இப்படி ஒரு ஸ்மார்ட் TV-ஆ? இந்தியர்கள் குஷி!

சியோமி அறிமுகம் செய்துள்ள இந்த மூன்று டிவிகளும் மெட்டல் பெசல்-லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 32-இன்ச் டிவி ஆனது எச்டி டிஸ்பிளே மற்றும் 1366 x 768 பிக்சல்ஸ் ஆதரவைக் கொண்டுள்ளது. அதேபோல் 40-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் ஃபுல் எச்டி டிஸ்பிளே மற்றும் 1920 x 1080 பிக்சல்ஸ் ஆதரவைக் கொண்டுள்ளன.

குறிப்பாக இந்த மூன்று சியோமி ஸ்மார்ட் டிவிகளுக்கும் Vivid பிக்சர் என்ஜின், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட் டிவிகளின் வடிவமைப்புக்கு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

குவாட்-கோர் ஏ35 சிப் உடன் இந்த சியோமி ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ் 2023 மாடல்கள் வெளிவந்துள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவிகளை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த டிவிகளில் கூகுள் டிவி இயங்குதளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த டிவிகள் மேம்பட்ட அம்சங்களை வழங்கும்.

1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டு இந்த புத்தம் புதிய சியோமி ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. எனவே ஆப்ஸ்களை தடையின்றி இயக்க முடியும். மேலும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு, பிளே ஸ்டோர் போன்ற பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளன இந்த மூன்று சியோமி ஸ்மார்ட் டிவிகள்.

PatchWall + (பேட்ச்வால் +) ஆதரவைக் கொண்டுள்ளன சியோமி ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ் 2023 மாடல்கள். எனவே இந்த ஸ்மார்ட் டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் பயன்படுத்த முடியும். பின்பு ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ள இந்த மூன்று ஸ்மர்ர்ட் டிவிகள். அதேபோல் ஆட்டோ லோ லேட்டன்சி மோட் கொண்டு வெளிவந்துள்ளன இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள்.

குறிப்பாக டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ்:எக்ஸ் ஆதரவைக் கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டு 43-இன்ச் மற்றும் 40-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன. ஆனால் 32-இன்ச் ஸ்மார்ட் டிவியில் டால்பி ஆடியோவுடன் கூடிய 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் மட்டுமே உள்ளன. ஆனாலும் இந்த ஸ்மார்ட் டிவிகள் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

வெறும் ரூ.13,999 க்கு இப்படி ஒரு ஸ்மார்ட் TV-ஆ? இந்தியர்கள் குஷி!

புளூடூத் 5.0, வைஃபை 802.11, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட், ஏவி, 3.5எம்எம் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த சியோமி ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ் 2023 மாடல்கள் வெளிவந்துள்ளன. சியோமி ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ் 32-இன்ச் டிவியின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. ஆனால் இதன் அறிமுக சலுகையாக ரூ.13,999-விலையில் வாங்க முடியும்.

சியோமி ஸ்மார்ட் டிவி ஏ சீரிஸ் 40-இன்ச் டிவியின் விலை ரூ.22,999-ஆக உள்ளது. மேலும் இதன் 43-இன்ச் ஸ்மார்ட் டிவியின் ரூ.24,999-ஆக உள்ளது. வரும் ஜூலை 25 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட், எம்ஐ.காம் போன்ற தளங்களில் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகளை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Smart TV A Series 2023 Launched in India: Check specifications, price and availability : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X