Home
Gadgets

இனி AC, ஏர் கூலர்லாம் வேஸ்ட்.. 100 ஸ்பீட் லெவல்.. DC இன்வெர்ட்டர் மோட்டார்.. Xiaomi ஃபேன் அறிமுகம்..

சியோமி நிறுவனம் தொடர்ந்து அசத்தலான சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவருகின்றன. எனவே தான் இந்தியா முழுவதும் இந்நிறுவனத்தின் சாதனங்களுக்கு நல்ல வரேவுற்பு உள்ளது.

இந்நிலையில் சியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஏர் சர்குலேஷன் ஃபேனை (Xiaomi Smart Standing Air Circulation Fan) அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இது டேபிள்டாப் (tabletop) மற்றும் தரையில் நிற்கும் (floor-standing fan) ஃபேனாக வேலை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல ஸ்மார்ட் அம்சங்கள் உடன் இந்த ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஏர் சர்குலேஷன் ஃபேன் வெளிவந்துள்ளது.

இனி AC, ஏர் கூலர்லாம் வேஸ்ட்..100 ஸ்பீட் லெவல்.. Xiaomi ஃபேன் அறிமுகம்

சியோமி ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் அம்சங்கள் (Xiaomi Smart Standing Fan specifications): சியோமி ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஏர் சர்குலேஷன் ஃபேன் ஆனது மணிக்கு 1440m³/h வரை காற்றோட்டத்தை வழங்குகிறது. அதேபோல் இது 13 மீட்டர் தூரம் வரை குளிர்ச்சியான காற்றை வழங்குகிறது இந்த ஃபேன். மேலும் உங்கள் அறைக்கு காற்றோட்டத்தை விரைவாக மேம்படுத்தும்படி இந்த மின்விசிறி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது 2 நிமிடங்களில் ஒரு இடத்திற்கு தேவையான காற்றோட்டத்தை வழங்குகிறது.

DC இன்வெர்ட்டர் மோட்டாரைப் பயன்படுத்தி இந்த சியோமி ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஏர் சர்குலேஷன் ஃபேன் 100 ஸ்பீட் லெவல் (speed levels) வழங்கும். பின்பு சியோமி ஹோம் ஆப் (Xiaomi Home app) மூலம் இந்த மின்விசிறியை கட்டுப்படுத்தலாம். பயனர்கள் இதில் ஷெட்டியூல் (schedules) மற்றும் ஆட்டோமேடிக் (automate) உள்ளிட்ட அம்சங்களைப் பயன்படுத்தலாம். உதாரணமாக இந்த ஆப் பயன்படுத்தி அறையில் வெப்பநிலை 27°C க்கு சென்றால் அதை இயக்கலாம் அல்லது 18°C ​​க்கு கீழே குறைந்தால் அதை ஆஃப் செய்யலாம்.

இது சத்தமில்லாத ஃபேன் அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் இந்த ஃபேன் குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தும். எனவே இதை வாங்கினால் குறைந்த மின் கட்டணம் தான் வரும் என்று சியோமி நிறுவனம் கூறுகிறது. அதேபோல் இந்த சியோமி ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஏர் சர்குலேஷன் ஃபேன் மாடலில் சிறந்த பாதுகாப்பு வசதியும் உள்ளது.

மேலும் இந்த ஃபேனை எளிதாக சுத்தம் செய்ய ஒரு நீக்கக்கூடிய கிரில்( removable grille) கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 5.7lbs எடை, 3D oscillation உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளுடன் இந்த சியோமி ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஏர் சர்குலேஷன் ஃபேன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது.

ஆனால் சியோமி நிறுவனம் இந்த ஃபேன் விலையை தற்போது வெளியிடவில்லை. ஆனால் கோடைக்காலம் வருவதற்கு முன்பு ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஏர் சர்குலேஷன் ஃபேன் அனைத்து நாடுகளிலும் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த சியோமி ஃபேன் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும்.

அதேபோல் சியோமி நிறுவனம் வரும் ஏப்ரல் 4-ம் தேதி சியோமி 15 (Xiaomi 15) போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக 6.36 இன்ச் கிரிஸ்டல்ரெஷ் அமோலெட் (CrystalRes AMOLED) டிஸ்பிளே, 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், 8K வீடியோ ரெக்கார்டிங், டால்பி விஷன் ரெக்கார்டிங், IP68 ரேட்டிங் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட், ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite 3nm) சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும்.

source: 1, 2

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Smart Standing Air Circulation Fan Launched: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X