Xiaomi புரொஜெக்டர் அறிமுகம்.. டால்பி ஆடியோ.. 16ஜிபி மெமரி.. 4கே வீடியோ.. எந்த மாடல்? என்ன விலை?
சியோமி நிறுவனம் தனது இணையதளத்தில் புதிய ஸ்மார்ட் புரொஜெக்டர் எல்1 (Xiaomi Smart Projector L1) மாடலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தில் தனித்துவமான தரமான அம்சங்கள் உள்ளன. அதேபோல் இதன் வடிவமைப்பும் மிகவும் அருமையாக உள்ளது. இப்போது சியோமி ஸ்மார்ட் புரொஜெக்டர் எல்1 மாடலின் அம்சங்கள் மற்றும் இதன் விற்பனை விவரங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
சியோமி ஸ்மார்ட் புரொஜெக்டர் எல்1 அம்சங்கள் (Xiaomi Smart Projector L1 Specifications) : 1080 பிக்சல்ஸ் எச்டி ரெசல்யூஷன் (HD resolution) மற்றும் 4கே வீடியோ பிளேபேக் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் புரொஜெக்டர் எல்1 மாடல். குறிப்பாக துல்லியமான வீடியோ காட்சிகளை இந்த சியோமி புரொஜெக்டர் மூலம் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சியோமி ஸ்மார்ட் புரொஜெக்டர் எல்1 மாடலில் 200 ஐஎஸ்ஒ லுமன்ஸ் (200 ISO Lumens) பிரைட்னஸ் வசதி மற்றும் 1.2:1 த்ரோவ் ரேசியோ (Throw Ratio) உள்ளது. குறிப்பாக இது 40 இன்ச் முதல் 100 இன்ச் வரையிலான கஸ்டமைசபிள் புரொஜெக்சன் சைஸ் (Customizable Projection Size) வழங்குகிறது. எனவே உங்கள் வீட்டில் எங்கு வேண்டும் என்றாலும் இதைப் பயன்படுத்தலாம்.
பல்வேறு ஸ்மார்ட் அம்சங்கள் சியோமி ஸ்மார்ட் புரொஜெக்டர் எல்1 மாடலில் உள்ளன. தெளிவான படங்களுக்கு ஆட்டோபோகஸ் (Auto-focus), ஸ்கிரீன் அலைன்மெண்ட் (Screen Alignment), ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆதரவு கொண்ட அப்ஸ்டகிள்ஸ் அவாய்டன்ஸ் (Obstacles Avoidance) உள்ளிட்ட பல ஸ்மார்ட் அம்சங்கள் இந்த சியோமி புரொஜெக்டர் உள்ளன.
இதில் உள்ள பிலட்-இன் கூகுள் டிவி (Built-in Google TV) அம்சம் ஆனது ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கான அணுகலை வழங்குகிறது. அதேசமயம் கூகுள் அசிஸ்டண்ட் (Google Assistant) மற்றும் போன் காஸ்டிங் (phone casting) ஆகிய அம்சங்களையும் இந்த சியோமி ஸ்மார்ட் புரொஜெக்டர் எல்௧ மாடலில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
360 டிகிர ரேஞ்ச் கொண்ட ஒரு புளூடூத் ரிமோட் சியோமி ஸ்மார்ட் புரொஜெக்டர் எல்1 மாடல் உடன் வருகிறது. மேலும் எம்டி9630 பிராசஸர் (MT9630 processor) மூலம் இந்த சியோமி ஸ்மார்ட் புரொஜெக்டர் இயங்குகிறது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான புரொஜெக்டர்.

தெளிவான ஒலிக்காக டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த புதிய சியோமி ஸ்மார்ட் புரொஜெக்டர் எல்1 மாடல். எனவே இந்த சாதனம் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் வைஃபை, புளூடூத் 5.0, யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.
1.2 கிலோ எடை கொண்டுள்ளது சியோமி ஸ்மார்ட் புரொஜெக்டர் எல்1. ஆனால் இந்த சியோமி ஸ்மார்ட் புரொஜெக்டர் எல்1 மாடலின் விலை மற்றும் விற்பனை விவரங்களை வெளியிடவில்லை சியோமி நிறுவனம். ஆனாலும் கூடிய விரைவில் இந்த சாதனம் உலக சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பட்ஜெட் விலையில் தான் இந்த சியோமி புரொஜெக்டர் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








