Home
Gadgets

இது எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்.. ரூ.19,104 பட்ஜெட்ல 100 இன்ச்.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி.. எந்த மாடல்?

சியோமி ஸ்மார்ட் புரொஜெக்டர் எல்1 (Xiaomi Smart Projector L1) மாடலை உலக சந்தையில் அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது சியோமி நிறுவனம். குறிப்பாக 100 இன்ச் புரொஜெக்சன் சைஸ், 16ஜிபி மெமரி, ஆட்டோபோகஸ் (Auto-focus), ஸ்கிரீன் அலைன்மெண்ட் (Screen Alignment) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புரொஜெக்டர் விற்பனைக்கு வந்துள்ளது. இப்போது இதன் விலை, விற்பனை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

சியோமி ஸ்மார்ட் புரொஜெக்டர் எல்1 மாடல் ஆனது தற்போது நெதர்லாந்து, ஸ்பெயின், ஜெர்மனியில் மற்றும் UK போன்ற நாடுகளில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த புரொஜெக்டரின் விலை £169.99 (இந்திய மதிப்பில் ரூ.19,104) ஆக உள்ளது. விரைவில் இந்த சியோமி சியோமி ஸ்மார்ட் புரொஜெக்டர் அனைத்து நாடுகளிலும் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்.. ரூ.19,104 பட்ஜெட்ல 100 இன்ச்..

சியோமி ஸ்மார்ட் புரொஜெக்டர் எல்1 அம்சங்கள் (Xiaomi Smart Projector L1 Specifications) : 1080P பிக்சல்ஸ் ரெசல்யூஷன் (resolution) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் புரொஜெக்டர் எல்1 மாடல். ஆப்டிகல் எஞ்சின் இந்த புரொஜெக்டர் மாடலில் உள்ளது.

சியோமி ஸ்மார்ட் புரொஜெக்டர் எல்1 மாடலில் 200 ஐஎஸ்ஒ லுமன்ஸ் (200 ISO Lumens) பிரைட்னஸ் வசதி மற்றும் 1.2:1 த்ரோவ் ரேசியோ (Throw Ratio) உள்ளது. குறிப்பாக இது 40 இன்ச் முதல் 100 இன்ச் வரையிலான கஸ்டமைசபிள் புரொஜெக்சன் சைஸ் (Customizable Projection Size) வழங்குகிறது. எனவே உங்கள் வீட்டில் எங்கு வேண்டும் என்றாலும் இதைப் பயன்படுத்தலாம்.

தெளிவான படங்களுக்கு ஆட்டோபோகஸ் (Auto-focus), ஸ்கிரீன் அலைன்மெண்ட் (Screen Alignment), ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆதரவு கொண்ட அப்ஸ்டகிள்ஸ் அவாய்டன்ஸ் (Obstacles Avoidance) உள்ளிட்ட பல ஸ்மார்ட் அம்சங்கள் இந்த சியோமி புரொஜெக்டர் உள்ளன.

ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் (Android TV OS) மற்றும் கூகுள் டிவி (Google TV) மூலம் இந்த புரொஜெக்டர் இயங்குகிறது. அதேசமயம் கூகுள் அசிஸ்டண்ட் (Google Assistant) மற்றும் கூகுள் காஸ்ட் (Google Cast) ஆகிய அம்சங்களையும் இந்த சியோமி ஸ்மார்ட் புரொஜெக்டர் எல்1 மாடலில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்.. ரூ.19,104 பட்ஜெட்ல 100 இன்ச்..

360 டிகிர ரேஞ்ச் கொண்ட ஒரு புளூடூத் ரிமோட் சியோமி ஸ்மார்ட் புரொஜெக்டர் எல்1 மாடல் உடன் வருகிறது. மேலும் எம்டி9630 பிராசஸர் (MT9630 processor) உடன் இந்த சியோமி ஸ்மார்ட் புரொஜெக்டர் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும 16ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான புரொஜெக்டர்.

டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த புதிய சியோமி ஸ்மார்ட் புரொஜெக்டர் எல்1 மாடல். எனவே இந்த சாதனம் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் வைஃபை, புளூடூத் 5.0, யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Smart Projector L1 launched in UK: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X