Home
Gadgets

வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 3K கேமராவுடன் ஸ்மார்ட் டிஸ்பிளேவை அறிமுகம் செய்த Xiaomi.. எந்த மாடல்? என்ன விலை?

சியோமி நிறுவனம் தொடர்ந்து புதிய சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது கூட வீட்டு பாதுகாப்பு என்றே ஸ்மார்ட் டிஸ்பிளே உடன் 3கே ஜிம்பல் கேமராவை அறிமுகம் செய்துள்ளது. அதாவது சியோமி ஸ்மார்ட் ஹோம் டிஸ்பிளே 8 ஜிம்பல் எடிஷன் (Xiaomi Smart Home Display 8 Gimbal Edition) தான் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த சாதனத்தின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

சியோமி ஸ்மார்ட் ஹோம் டிஸ்பிளே 8 ஜிம்பல் எடிஷன் அம்சங்கள் (Xiaomi Smart Home Display 8 Gimbal Edition specifications): 8 இன்ச் எச்டி டச் ஸ்கிரீன் உடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. மேலும் 1280×800 பிக்சல்ஸ் ஆதரவு இதன் ஸ்கிரீனில் உள்ளது. வெவ்வேறு லைட்டிங் நிலைகளில் கூட இதன் ஸ்கிரீன் சிறந்த பிரைட்னஸ் வசதியுடன் தெளிவாகத் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 3K கேமராவுடன் ஸ்மார்ட் டிஸ்பிளேவை அறிமுகம் செய்த Xiaomi.. எந்த மாடல்?

அதேபோல் இதில் 5மெகாபிக்சல் கேமராவும் (எப்/1.6 அபெர்ச்சர் லென்ஸ்) உள்ளது. இது 3K அல்ட்ரா-க்ளியர் வீடியோவை பதிவு செய்யும். குறிப்பாக 360 டிகிரி ஹரிசாண்டல்(360 ° horizontal) ரோடேட்டிங் ஆப்ஷன், 30 டிகிரி மேனுவல் டில்ட் உள்ளிட்ட பல சிறப்பான வசதியைக் கொண்டுள்ளது இந்த கேமரா.

குறைந்த வெளிச்சம் உள்ள பகுதிகளில் கூட இந்த கேமராவுடன் தெளிவான படங்களை பிடிக்க முடியும். அதற்கு தகுந்தபடி இன்ஃபிராரெட் நைட் விஷன் (Infrared night vision) ஆதரவும் இந்த கேமராவில் உள்ளது. அதுவும் இது 10 மீட்டர் வரை விசிபிலிட்டி (visibility) வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி ஸ்மார்ட் ஹோம் டிஸ்பிளே 8 ஜிம்பல் எடிஷன் மாடலில் உள்ள கேமரா ஆனது மேம்பட்ட ஏஐ அம்சங்கள் உடன் வெளிவந்துள்ளது. அதாவது ஏஐ முக அங்கீகாரம் கேமரா (AI face recognition), மோஷன் அலர்ட்ஸ் (motion alerts), மனித கண்காணிப்பு, குழந்தை அழுகை கண்டறிதல் ஆகியவற்றை ஆதரிக்கிறது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இது வீட்டு பாதுகாப்பு மற்றும் குடும்ப கண்காணிப்பு ஆகிய இரண்டிற்கும் ஏற்றது.

தனியுரிமை பாதுகாப்பை மேம்படுத்த Xiaomi EAL5+ சான்றிதழுடன் கூடிய Mijia பாதுகாப்பு சிப்பை பயன்படுத்துகிறது இந்த புதிய சியோமி ஸ்மார்ட் ஹோம் டிஸ்பிளே 8 ஜிம்பல் எடிஷன். அதுவும் ஹைப்பர் ஓஎஸ் (HyperOS) மூலம் இந்த புதிய சாதனம் இயங்குகிறது. பின்பு Super XiaoAi அசிஸ்டண்ட் ஆதரவும் இதில் உள்ளது.

குறிப்பாக இந்த சாதனத்தில் குவாட்-கோர் ஏ53 பிராசஸர் (quad-core Cortex-A53 processor) வசதி உள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது சியோமி ஸ்மார்ட் ஹோம் டிஸ்பிளே 8 ஜிம்பல் மாடல். பின்பு இந்த சாதனத்தின் எடை 780 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

வைஃபை 6, ப்ளூடூத் 5.2 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய சாதனத்தில் உள்ளது. ஆனால் சியோமி ஸ்மார்ட் ஹோம் டிஸ்பிளே 8 ஜிம்பல் எடிஷன் சாதனம் ஆனது தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சாதனம் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு இந்த சாதனத்தின் விலை 699 yuan (இந்திய மதிப்பில் ரூ.8,469) ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Smart Home Display 8 Gimbal Edition launched: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X