Home
Gadgets

Xiaomi வாட்டர் பில்டர்.. தண்ணீரில் உள்ள ஒட்டுமொத்த கிருமிகளும் கிளோஸ்.. வாங்குன இந்த RO பில்டர் தான் வாங்கணும்

சியோமி (Xiaomi) நிறுவனம் அதன் ஸ்மார்ட் ஹோம் தயாரிப்பு (Smart Home Product) சாதனைகளின் வரிசையில், புதிதாக சியோமி ஸ்மார்ட் பில்டர்டு வாட்டர் டிஸ்பென்ஸர் ப்ரோ (Xiaomi Smart Filtered Water Dispenser Pro) என்ற சியோமி டெஸ்க்டாப் வாட்டர் பில்டர் (Xiaomi Desktop Water Filter) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது குட்டி சைஸில், உங்கள் வீட்டில் அதிக இடத்தை எடுத்துக்கொள்ளாமல் கச்சிதமாக பொருந்தும் வகையில் வெளிவந்துள்ளது. அதேபோல், தண்ணீரை வடிகட்டி (Water Filter) மிகவும் சுத்தமானதாக மாற்றுகிறது.

இந்த சியோமி ஸ்மார்ட் பில்டர்டு வாட்டர் டிஸ்பென்ஸர் ப்ரோ (Xiaomi Smart Filtered Water Dispenser Pro) வாட்டர் பில்டர் சாதனம் 99.9% கிருமிகளை அகற்றுகிறது மற்றும் நீரில் இருக்கும் மோசமான உப்பு வகை மற்றும் உலோக துகள்களை பில்டர் செய்கின்றது. இது சிறிய வடிவத்தில் இருந்தாலும், மிகவும் பவர்ஃபுல் அம்சங்களை கொண்டுள்ளது. இந்த வாட்டர் பில்டர் பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம்.

Xiaomi வாட்டர் பில்டர்.. தண்ணீரில் உள்ள ஒட்டுமொத்த கிருமிகளும் கிளோஸ்

சியோமி ஸ்மார்ட் பில்டர்டு வாட்டர் டிஸ்பென்ஸர் ப்ரோ (Xiaomi Smart Filtered Water Dispenser Pro):

சியோமி பிராண்டின் ஸ்மார்ட் ஹோம் தயாரிப்பு வரிசையில் ஒரு புதிய கூடுதலாகும். 2022 இல் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சியோமி மிஜியா டெஸ்க்டாப் டிரிங்க்கிங் மெஷின் ஸ்மார்ட் எடிஷனுடன் (Xiaomi Mijia Desktop Drinking Machine Smart Edition) இந்த மாடல் ஒற்றுமையைக் கொண்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட புதிய எடிஷன் மாடலாக இந்த சாதனம் வருகிறது. இது பாக்டீரியாக்களை அகற்ற வடிவமைக்கப்பட்ட ஆறு-நிலை RO பில்டர் அமைப்பைக் கொண்டுள்ளது.

இந்த சாதனம் யுவி ஸ்டெரிலைசேஷன் (UV Sterilisation) திறன் கொண்ட 4.4லி வாட்டர் டேங்க்கை கொண்டுள்ளது. அதேபோல், இதில் இருந்து வெளிவரும் அசுத்தமான நீரை சேகரிப்புக்கான தனி 1.8லி டேங்க்கையும் இந்த சாதனம் கொண்டுள்ளது. இதன் பயனர்கள், இந்த சாதனத்தை பயன்படுத்தி 1℃ முதல் 40℃ - 95℃ வரையிலான நீரின் வெப்பநிலையை அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம்.

இந்த ஸ்மார்ட் ஃபில்டர்டு வாட்டர் டிஸ்பென்சர் ப்ரோ தண்ணீரை விரைவாக வெப்பப்படுத்துகிறது. ரூம் டெம்ப்ரேச்சர், காபி மற்றும் பாய்லிங் வாட்டர் போன்ற பல மோட்களை கொண்டுள்ளது. இது அதன் TFT டிஸ்ப்ளே மூலமாகவோ அல்லது Mi Home / Xiaomi Home ஆப்ஸ் மூலமாகவோ இயக்கப்படும் படி சியோமி உருவாக்கியுள்ளது. கூடுதலாக, NFC டேக் அம்சத்தையும் இந்த வாட்டர் பில்டர் சாதனம் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தண்ணீரில் உள்ள ஒட்டுமொத்த கிருமிகளும் கிளோஸ்.. புது சியோமி வாட்டர் பில்டர் விலை என்ன?

Xiaomi தண்ணீரை விநியோகிக்கும் போது மேம்பட்ட பயனர் அனுபவத்திற்காக டிஸ்பென்சரில் டூயல் டன் லைட்டிங் அம்சத்தையும் இணைத்துள்ளது. இந்த வாட்டர் பில்டர் சாதனத்தை நகர்த்துவதை எளிதாக்க ஹேண்டில்கள் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த செயல்திறனுக்காக, வருடந்தோறும் பில்டரை மாற்றுமாறு Xiaomi அறிவுறுத்துகிறது.

Xiaomi Smart Filtered Water Dispenser Pro வெளியீட்டு தேதி மற்றும் விலை தொடர்பான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இதன் விலை 1,999 யுவான் என்ற கட்டணத்தை நெருங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை வெறும் ரூ. 22,000 விலையை நெருங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது வழக்கம் போல சீன சந்தையில் முதலில் விற்பனைக்கு கொண்டுவரப்படும். அதனை தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Smart Filtered Water Dispenser Pro with Complete Bacteria Kill Launched Check Price and Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X