Xiaomi ஸ்மார்ட் லாக்.. சாவி இல்லை.. பூட்டு இல்லை.. ஆனா 10,000 செக்யூரிட்டி கார்ட் போட்ட மாதிரி பாதுகாப்பு..
சியோமி (Xiaomi) நிறுவனம் அதன் ஸ்மார்ட் கேட்ஜெட் வரிசையில், புதிதாக சியோமி ஸ்மார்ட் டோர் லாக் 2 பிங்கர் வெய்ன் வெர்ஷன் (Xiaomi Smart Door Lock 2 Finger Vein Version) என்ற ஸ்மார்ட் லாக் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஸ்மார்ட் லாக் (Smart Lock) சாதனம் வழக்கமான ஒரு பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (finger print scanner) கொண்ட சாதனம் என்று தவறாக நினைத்துவிடாதீர்கள். இது உங்கள் கைரேகையை விட பல மடங்கு அதிகமான பாதுகாப்பை வழங்குகிறது. ஏனென்றால், இந்த சியோமியின் புதிய ஸ்மார்ட் டோர் லாக் 2 பிங்கர் வெய்ன் வெர்ஷன் சாதனம் உங்கள் கைவிரலில் உள்ள நரம்புகளை ஸ்கேன் செய்து, கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது.

சியோமி ஸ்மார்ட் டோர் லாக் 2 பிங்கர் வெய்ன் வெர்ஷன் (Xiaomi Smart Door Lock 2 Finger Vein Version):
இதன் பெயரில் குறிப்பிடப்பட்டுள்ள வெய்ன் (Vein) நரம்புகளை குறிக்கிறது. இதுவொரு ஸ்மார்ட் லாக் சாதனம் என்பதனால், இதற்கு சாவி தேவை இல்லை, தனியாக பூட்டு தேவை இல்லை, மற்றவர் யாரும் உங்கள் வீட்டில் திருடிவிடுவார்களோ என்ற சந்தேகம் இருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த ஸ்மார்ட் லாக் சாதனத்தை நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனுடன் இணைத்துக்கொள்ளலாம். இதனால், உங்கள் வீட்டு கதவை யாராவது தொட்டால் கூட உடனே உங்களுக்கு நோட்டிபிகேஷன் அனுப்பப்படும்.
உண்மையை சொல்ல போனால், உங்கள் வீட்டிற்கு 10,000 செக்யூரிட்டி கார்ட் (Security Guard) பாதுகாவலர்களை நீங்கள் நியமித்தது போல, நம்பிக்கையுடனும், நிம்மதியுடனும் இருக்கலாம். இந்த சியோமி ஸ்மார்ட் லாக் (Xiaomi lock) உங்கள் வீட்டில் பொறுத்தப்பட்டால், ஒருபய திருட முடியாது என்பதே உண்மையாகும். சியோமி அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ஸ்மார்ட் டோர் லாக் அம்சங்கள் குறித்து இப்போது பார்க்கலாமா?
சியோமியின் புதிய படைப்பான Xiaomi Smart Door Lock 2 Finger Vein Version சாதனம் நீங்கள் யூகித்து பார்க்க முடியாதளவு பாதுகாப்பை வழங்குகிறது. உதாரணமாக, சியோமியின் மற்ற ஸ்மார்ட் லாக் சாதனங்கள் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனிங் மூலம் இயங்குகிறது. இவை 0.001% எரர் ரேட்டிங்கை (Error rating) கொண்டுள்ளது. அதாவது ஆயிரத்தில் 1 முறை தவறு நடக்க வாய்ப்புள்ளதென்று அர்த்தம். இதுவே அதிக பாதுகாப்பாக கருதப்படுகிறது.

10,000 செக்யூரிட்டி கார்ட் போட்ட மாதிரி பாதுகாப்பா? உண்மையாவா? எப்படி?
இப்போது சியோமி அறிமுகம் செய்துள்ள புதிய, சியோமி ஸ்மார்ட் டோர் லாக் 2 (Xiaomi Smart Door Lock 2) பிங்கர் வெய்ன் வெர்ஷன் சாதனம் விரலில் உள்ள விறல் ரேகையை தாண்டி, விரலில் உள்ள நரம்புகளின் தகவல்களையும் சேர்த்து ஸ்கேன் செய்து கூடுதல் பாதுகாப்பு வழங்குகிறது. இது 0.0001% எரர் ரேட்டிங்கை கொண்டுள்ளது. அதாவது, பத்தாயிரத்தில் 1 முறை தவறு நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் ஸ்மார்ட் லாக்களை விட ஒன்பதாயிரம் முறை அதிக பாதுகாப்பை உறுதி செய்கிறது. 10,000 முறையில் 1 முறை தவறு நடக்க வாய்ப்பிருக்கிறதே, இது எப்படி முழுமையான பாதுகாப்பை வழங்க முடியுமென்று என்ற சந்தேகம் சிலருக்கு எழுந்திருக்க வாய்ப்புள்ளது. இதற்கும் விளக்கம் இருக்கிறது மக்களே. ஒரு சாதாரண பூட்டை கள்ளச்சாவி போட்டு திறக்க எடுக்க எவ்வளவு நேரம் எடுக்கும் என்று உங்களுக்கு தெரியமா?
ஒரு பூட்டை சரியான சாவி கொண்டு திறக்க சுமார் 7 வினாடிகள் எடுத்துக்கொள்கிறதாம். அதுவே, ஒரு பூட்டிற்கு போலியாக சாவி தயார் செய்து, அதை திறக்க வேண்டுமென்றால் 10 நிமிடங்கள் முதல் 25 நிமிடங்கள் அதிகபட்சமாக தேவைப்படும் என்று கூறப்படுகிறது. இப்படி 10,000 முறை ஒரு பூட்டை திறக்க என்ன நேரம் எடுத்துக்கொள்ளப்படுமோ, அந்த நேரத்தை தான் இங்கு எரர் ரேட்டிங் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சாதனத்தில் பிங்கர் வெய்ன் ஸ்கேனர் தவிர, NFC அன்லாக், பாஸ்வோர்ட் அன்லாக் (Password unlock), ப்ளூடூத் (Bluetooth) அன்லாக் மற்றும் பிரத்தியேக சாவி (Physical key) மூலம் அன்லாக் செய்யும் முறை என்று பல அம்சங்களை இந்த சியோமி ஸ்மார்ட் லாக் சாதனம் கொண்டுள்ளது. உங்கள் வீட்டு கதவை யாராவது திறக்க முயன்றால், அபாய அலாரம் மற்றும் ஸ்மார்ட்போன் நோட்டிபிகேஷன் என்று எல்லாமே அனுப்பப்படும்.
இந்த சாதனத்தை உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் கட்டுப்படுத்தலாம். இது ஹைப்பர்ஓஎஸ் (Hyper OS) உடன் இயங்குகிறது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒரு வருடம் முழுக்க இயங்கும்படி இது உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 15,000 ஆகும். இது 10,000 செக்யூரிட்டி பாதுகாவலர்களுக்கு சமமான ஸ்மார்ட் லாக் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








