சியோமி அறிமுகம் செய்த ஸ்மார்ட் ஃபேன்.. 100 ஸ்பீட் லெவல்.. அலெக்சா சப்போர்ட்.. எந்த மாடல்? என்ன விலை?
சியோமி நிறுவனம் கோடைக்காலத்திற்காக ஒரு சிறிய கெஜெட்டை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஸ்மார்ட் டெஸ்க்டாப் ஏர் சர்குலேஷன் ஃபேன் (Xiaomi Smart Desktop Air Circulation Fan) மாடலை ஐரோப்பியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் ஃபேன் ஆனது மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய சாதனத்தின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
சியோமி ஸ்மார்ட் டெஸ்க்டாப் ஏர் சர்குலேஷன் ஃபேன் அம்சங்கள் (Xiaomi Smart Desktop Air Circulation Fan specifications): இந்த புதிய ஸ்மார்ட் டெஸ்க்டாப் ஏர் சர்குலேஷன் ஃபேன் ஆனது 100 ஸ்பீட் லெவல் (speed levels) வழங்கும் என நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல் இதில் குறைந்தபட்சம் 28.4dB சத்தம் மட்டுமே வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது இரவு நேர பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமைகிறது.

குறிப்பாக சியோமி ஸ்மார்ட் டெஸ்க்டாப் ஏர் சர்குலேஷன் ஃபேன் மாடல் அமேசான் அலெக்சா மற்றும் கூகுள் ஹோம் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் 2.4ஜிகாஹெர்ட் வைஃபை ஆதரவும் இதில் உள்ளது. எனேவ இந்த சாதனத்தை மிகவும் எளிமையாக இயக்க முடியும். குறிப்பாக சியோமி ஹோம் ஆப் (Xiaomi Home app) மூலம் இந்த ஸ்மார்ட் டெஸ்க்டாப் ஏர் சர்குலேஷன் ஃபேன் மாடலை கட்டுப்படுத்தலாம்.
அதேபோல் 18W அடாப்டரால் சியோமி ஸ்மார்ட் டெஸ்க்டாப் ஏர் சர்குலேஷன் ஃபேன் மாடல் இயக்கப்படுகிறது. எனவே இதை ஒரு பவர் பேங்க் வழியாகவும் இயக்க முடியும். குறிப்பாக 10,000mAh பவர் பேங்க் உடன் இந்த சிறிய சியோமி ஸ்மார்ட் டெஸ்க்டாப் ஏர் சர்குலேஷன் ஃபேன் மாலை 26 மணி நேரம் வரை இயக்க முடியும் என சியோமி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
120 டிகிரி கிடைமட்டமாகவும், 100 டிகிரி செங்குத்தாகவும் இந்த சியோமி ஸ்மார்ட் ஃபேன் மாடலை பயன்படுத்த முடிகிறது. மேலும் 3டி ஏர் டிஸ்ட்ரிபியூஷன் (3D air distribution) சப்போர்ட் கொண்டுள்ளது டெஸ்க்டாப் ஏர் சர்குலேஷன் ஃபேன். இது ஒரு மேசையில் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு பக்கத்தில் உள்ள படங்கள் இதை வெளிப்புறங்களில் பயன்படுத்தலாம் என்று கூறினாலும், இது உட்புற பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள சியோமி ஸ்மார்ட் டெஸ்க்டாப் ஏர் சர்குலேஷன் ஃபேன் மணிக்கு 1,180 m³/h வரை காற்றோட்டத்தை வழங்குகிறது. குறிப்பாக 3 நிமிடங்களில் ஒரு இடத்திற்குத் தேவையான காற்றோட்டத்தை வழங்குகிறது. மேலும் இந்த சாதனத்தின் எடை 2 கிலோ ஆகும். தற்போது வெள்ளை நிறத்தில் வெளிவந்துள்ளது இந்த புதிய சியோமி ஸ்மார்ட் ஃபேன்.
இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் சியோமி ஸ்மார்ட் டெஸ்க்டாப் ஏர் சர்குலேஷன் ஃபேன் விற்பனைக்கு வந்துள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த ஸ்மார்ட் ஃபேன் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சியோமி ஸ்மார்ட் டெஸ்க்டாப் ஏர் சர்குலேஷன் ஃபேன் மாடலின் விலை €99.99 ( இந்திய மதிப்பில் ரூ.10,027) ஆக உள்ளது.
மேலும் சியோமி நிறுவனம் விரைவில் சியோமி 16 அல்ட்ரா போனை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சியோமி 16 அல்ட்ரா போன் ஆனது 200எம்பி டெலிபோட்டோ கேமரா + 50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா ஆகிய ரியர் கேமரா செட்டப் உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 2 (Snapdragon 8 Elite Gen 2), 6.8-இன்ச் எல்டிபிஒ ஒஎல்இடி டிஸ்பிளே, 7000எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜ் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் சியோமி 16 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இந்த புதிய சியோமி போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








