வீட்டுக்கு 1 வாங்கலாம் போலயே.. 4K HDR.. 8MP சென்சார்.. AI.. Xiaomi செக்யூரிட்டி கேமரா அறிமுகம்.. என்ன விலை?
சியோமி நிறுவனம் இந்தியாவில் அசத்தலான சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் சாதனங்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய செக்யூரிட்டி கேமரா ஒன்றை தற்போது அறிமுகம் செய்துள்ளது சியோமி.
அதாவது சியோமி நிறுவனம் தற்போது சியோமி ஸ்மார்ட் கேமரா சி700 (Xiaomi Smart Camera C700) எனும் செக்யூரிட்டி கேமரா மாடலை தான் அறிமுகம் செய்துள்ளது. தனித்துவமான வடிவமைப்புடன் இந்த சசாதனம் சாதனம் வெளிவந்துள்ளது. இப்போது சியோமி ஸ்மார்ட் கேமரா சி700 மாடலின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

சியோமி ஸ்மார்ட் கேமரா சி700 அம்சங்கள் (Xiaomi Smart Camera C700 specifications): 8எம்பி சென்சார் வசதியுடன் இந்த புதிய செக்யூரிட்டி கேமரா மாடல் வெளிவந்துள்ளது. இதுபோன்ற சென்சார் வசதியுடன் இதுவரை எந்த செக்யூரிட்டி கேமராவும் வெளிவரவில்லை. மேலும் 3840×2160 பிக்சல்ஸ் மற்றும் 4கே எச்டிஆர் ஆதரவைக் கொண்டுள்ளது சியோமி ஸ்மார்ட் கேமரா சி700 மாடல்.
குறிப்பாக சியோமி ஸ்மார்ட் கேமரா சி700 மாடல் உதவியுடன் துல்லியமான வீடியோக்களை பதிவு செய்ய முடியும். மேலும் 5 பெரிய அபெக்சர் ஆப்டிகல் லென்ஸ்கள் கொண்டுள்ளது இந்த சாதனம். குறிப்பாக புதிய செக்யூரிட்டி கேமராவில் டூயல்-மோட்டார் பான்/டில்ட் (dual-motor pan/tilt) செயல்பாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இது முழு 360° வியூவில் நேராகவும் 108° செங்குத்தாகவும் திரும்பக் கூடியது. மேலும் இந்த கேமரா உதவியுடன் ஒரு பெரிய பகுதியைக் கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர குறைந்த வெளிச்சம் உள்ள பகுதிகளில் கூட இதன் மூலம் தெளிவான வீடியோக்களை எடுக்க முடியும்.

புதிய சியோமி ஸ்மார்ட் கேமரா சி700 மாடல் ஆனது ஏஐ (AI) அம்சங்களுடன் வெளிவந்துள்ளன. அதாவது இது மனிதர்களைக் கண்டறியும் திறன் கொண்டது. மேலும் சில வகையான விலங்குகள் அல்லது செல்லப்பிராணிகள், ஏற்கனவே இதில் பதிவு செய்யப்பட்ட முகங்கள் மற்றும் ஒரு குழந்தையின் அழுகை கூட நமது ஸ்மார்ட்போன் மூலம் தெரியப்படுத்தும்
மைக்ரோபோன் ( microphone), BOXஸ்பீக்கர் (BOX speaker), நாய்ஸ் ரிடக்ஷன் (noise-reduction) போன்ற ஆதரவுகளையும் கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் கேமரா சி700 மாடல். குறிப்பாக சியோமி HyperOS கனெக்ட் ஆதரவைக் கொண்டுள்ளது புதிய சியோமி செக்யூரிட்டி கேமரா மாடல். எனவே இதை சியோமி ஸ்மார்ட் ஹோம் சாதனங்களுடன் இணைக்க முடியும்.

அதேபோல் இந்த சியோமி செக்யூரிட்டி கேமராவில் Mi ஹோம் செக்யூரிட்டி சிப் வசதி உள்ளது. மேலும் 256 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு மற்றும் என்ஏஎஸ் (NAS) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சியோமி செக்யூரிட்டி கேமரா. மேலும் டூயல் பேண்ட் வைஃபை 6 ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் கேமரா சி700 மாடல்.
ஆனால் சியோமி ஸ்மார்ட் கேமரா சி700 மாடல் தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் இந்த கேமரா அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த புதிய சியோமி செக்யூரிட்டி கேமராவின் விலை 349 yuan (இந்திய மதிப்பில் ரூ.4,108) ஆக உள்ளது. வரும் மே 10-ம் தேதி சீனாவில் விற்பனைக்கு வருகிறது இந்த சியோமி கேமரா.


Click it and Unblock the Notifications








