இனி காற்று மாசுபாடு பற்றிய கவலை வேண்டாம்.. Xiaomi Smart Air Purifier 4 இருக்கு!
காற்று மாசுபாடு அதிகம் கொண்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சியோமி (Xiaomi) நிறுவனத்தின் அசத்தலான ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபயர் 4 (Xiaomi Smart Air Purifier 4) நல்ல சாய்ஸ்சாக இருக்கும். ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி டிவி (TV), ஏசி (AC), ஏர் ப்யூரிஃபயர் (Air Purifier) தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில் சியோமி ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபயர் 4- ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகமாகி இருக்கும் சியோமி ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபயர் 4, 360 டிகிரியில் மாசுக்காற்றை ஃபில்ட்ர் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏர் ப்யூரிஃபயரின் முழு விவரங்கள் இதோ.

அதிகப்படியான காற்று மாசு காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக் வாகனங்கள் களமிறங்கப்படுகின்றன. இதனால் பெரும் வாகன தயாரிப்பு நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகின்றன.
இதனிடையே மற்ற நிறுவனங்களுக்கும் காற்று மாசை கட்டுப்படுத்தக்கூடிய சாதனங்கள் தயாரிப்பில் முனைப்பு காட்டி வருகின்றன. அந்த வகையில், ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி ஏர் ப்யூரிஃபயர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. முன்பெல்லாம் ஏசி உடனேயே ஏர் ப்யூரிஃபயர்கள் இடம்பெற்றிருக்கும்.
சில கம்பெனிகளின் ஏசியில் ஏர் ப்யூரிஃபயர் வசதி இருப்பதை கவனித்திருப்பீர்கள். ஆனால், அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக தனியாகவே ஏர் ப்யூரிஃபயர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. டெல்லி, சென்னை, மும்பை, மேற்கு வங்கம் போன்ற காற்று மாசு அதிகம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஏர் ப்யூரிஃபயர்கள் உதவியாக இருக்கலாம்.
இது சுவாசக்கோளாறு உள்ளவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்த சியோமி ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபயர் 4 பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரூ. 50,000 விலையில் விற்பனையாகும் டைசன் (Dyson) ஏர் ப்யூரிஃபயருக்கு நிகரான அம்சங்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.
சியோமி ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபயர் 4 அம்சங்கள்: இந்த ஏர் ப்யூரிஃபயர் பாக்ஸி டைப்பில் ஆல்-ஒயிட் நிறத்தில் இருக்கிறது. முன்பக்கத்தில் OLED டிஸ்ப்ளே இண்டிகேட்டர் உள்ளது. இதற்கு கீழ் நான்கு புறத்திலும் டிரிபிள் லேயர் வடிகட்டுதல் (Triple Layer Filtration) வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆன்டி பாக்டீரியா மற்றும் வைரஸ் (anti-bacteria and viral coating) கோட்டிங் செய்யப்பட்டுள்ளது.
இவை அனைத்து வகையான மாசு காற்றை உட்கொண்டு 99.97 சதவிகித தூய்மையான காற்றை வெளியேற்றும் என்று சியோமி நிறுவனம் தெரிவிக்கிறது. ஒட்டுமொத்தமாக 310 சதுர அடி பரப்பளவில் ஏற்படும் காற்றுமாசை சியோமி ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபயர் 4 கட்டுக்குள் வைத்திருக்கும். முக்கியமாக மற்ற ஏர் ப்யூரிஃபயர்களை போலல்லாமல் 360 டிகிரியில் காற்றை உறிஞ்சும் வகையில் சியோமி ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபயர் 4 வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சியோமி ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபயர் 4 -இன் விலை ரூ.13,999 ஆக உள்ளது. அதேபோல சியோமி ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபயர் 4 லைட்டின் (Xiaomi Smart Air Purifier 4 Lite) விலை ரூ.9,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications