கேட்டாலே தலைச்சுற்றும் விலை.. 64GB ஸ்டோரேஜ்.. 4GB ரேம்.. அறிமுகமானது சியோமி டிவி.. எந்த மாடல்?
சியோமி நிறுவனம் நேற்று சியோமி எஸ் ப்ரோ மினி எல்இடி 85-இன்ச் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட் டிவி தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த 85-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது இந்தியா மற்றும் உலக நாடுகளில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் உடன் சியோமி எஸ் ப்ரோ மினி எல்இடி 85-இன்ச் (Xiaomi S Pro Mini LED 85) ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக புதிய சியோமி ஸ்மார்ட் டிவி சற்று உயர்வான விலை தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த சியோமி ஸ்மார்ட் டிவியின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

சியோமி டிவி எஸ் ப்ரோ மினி எல்இடி 85-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,2400 நிட்ஸ் ப்ரைட்னஸ், டிடிஎக்ஸ்-எஸ், 10-பிட் கலர், டால்பி விஷன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் டிஸ்பிளே ஆனது ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம். அதேபோல் கேமிங் மோட் பயன்படுத்தும் போது 240 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவை வழங்குகிறது இந்த டிவி.
அதேபோல் சியோமி டிவி எஸ் ப்ரோ மினி எல்இடி 85-இன்ச் ஸ்மார்ட் டிவியில் சக்திவாய்ந்த குவாட்-கோர்ட் கார்டெக்ஸ் ஏ73 மீடியாடெக் பிராசஸர் (Quad-Core Cortex A73 MediaTek processor) உடன் மாலி - ஜி52 எம்சி1 ஜிபியு (Mali-G52 MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த டிவிக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவியில். எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் பயன்படுத்தலாம். மென்மையான கேமிங் அனுபவத்தை வழங்க இந்த ஸ்மார்ட் டிவியில் MEMC தொழில்நுட்ப வசதி உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட் டிவியை நம்பி வாங்கலாம்.
சியோமி ஹைப்பர்ஓஎஸ் மூலம் இயங்குகிறது சியோமி டிவி எஸ் ப்ரோ மினி எல்இடி 85-இன்ச் ஸ்மார்ட் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவியில் மேம்பட்ட பல புதிய அம்சங்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.
டால்பி அட்மோஸ் மற்றும் டிடிஎஸ்-எக்ஸ் ஆடியோ ஆதரவு கொண்ட 2x15W ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த சியோமி டிவி எஸ் ப்ரோ மினி எல்இடி 85-இன்ச் ஸ்மார்ட் டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். இதுதவிர பல்வேறு ஆடியோ அம்சங்கள் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.2,எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் சியோமி டிவி எஸ் ப்ரோ மினி எல்இடி 85-இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. மேலும் இந்த டிவி உடன் என்எப்சி ரிமோட் கண்ட்ரோல் கொடுக்கப்படும்.
சீனாவில் சியோமி டிவி எஸ் ப்ரோ மினி எல்இடி 85-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை 9999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.1,14,625)-ஆக உள்ளது. ஆனால் அறிமுக சலுகையாக இந்த டிவி 7999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.91,004) விலையில் விற்பனைக்கு வரும் சீனாவில் இந்த டிவியை இன்று முதல் ஆர்டர் செய்யலாம். விரைவில் இந்த டிவி அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








