Home
Gadgets

வீட்டுக்கு வீடு வேணும்.. ஆட்டோமேட்டிக் கிளீன் ஸ்டேஷன்.. மாப் இருக்கு.. வேக்கம் இருக்கு.. எந்த மாடல்?

ஆட்டோமேட்டிக் கிளீன் ஸ்டேஷன் மட்டுமல்லாமல், அட்வான்ஸ்டு எல்டிஎஸ் லேசர் நேவிகேஷன், வேக்கம்/மாப் டிசைன், மொபைல் ஆப் கன்ட்ரோல், 4000Pa சக்சன், 2500 சதுரஅடி கிளீனிங், 5200mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் சியோமி ரோபோட் வேக்கம் கிளீனர் எக்ஸ்10 (Xiaomi Robot Vacuum Cleaner X10) மாடல் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. இந்த சியோமி ரோபோட் வேக்கம் கிளீனரின் முழு பீச்சர்கள்,விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ரோபோட் வேக்கம் கிளீனர் வாங்க திட்டமிட்டிருக்கும் கஸ்டமர்களுக்கு சியோமி ரோபோட் வேக்கம் கிளீனர் எக்ஸ்10 மாடல் பட்ஜெட்டுக்கு ஏற்ப பக்கா ஆப்ஷாக இருக்கும். வேக்கம் மற்றும் மாப் மூலம் செய்யும் கிளீனிங்கை இந்த மாடல் மூலம் செய்து கொள்ளலாம். சென்சார்கள் மூலம் வீடு முழுவதும் மேப்பிங் செய்து ஆட்டோமேட்டிக் கிளீனிங் கொடுக்கும்.

வீட்டுக்கு வீடு வேணும்.. ஆட்டோமேட்டிக் கிளீன் ஸ்டேஷன்.. மாப் இருக்கு!

ரோபோட் வேக்கம் கிளீனர் எக்ஸ்10 அம்சங்கள் (Xiaomi Robot Vacuum Cleaner X10 Specifications): இந்த மாடலானது, ஆட்டோமேட்டிக் டஸ்ட் கலெக்சன் மற்றும் சார்ஜிங் செய்து கொள்ளும்படி டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதேபோல வேக்கம் மற்றும் மாப் ஆகிய 2 முறைகளிலும் கிளீனிங் செய்து கொள்ளும்படி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

4000Pa பவர்ஃபுல் சக்சன் (Powerful Suction) சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதிகபட்சம் 60 நாட்களுக்கு ஆட்டோ-டஸ்ட் டிஸ்போசல் செய்து கொள்ளலாம். இந்த ரோபோட் வேக்கம் கிளீனர் எக்ஸ்10 மாடலின் சென்சார்களை பார்க்கையில், டிஎஸ் லேசர் சென்சார் (DS Laser Sensor), ஐஎம்யு (IMU), வீல் சஸ்பென்சன் டிடெக்சன் (Wheel Suspension Detection) வருகிறது.

இரவு நேரங்களிலும் கிளீன் செய்து கொள்ள இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), மேலும் ஏர் சென்சார் (Air pressure) மற்றும் ஹால் சென்சார் (Hall Sensor) வருகிறது. இந்த ரோபோட் வேக்கம் கிளீனரில் 5200mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி மூலம் 240 நிமிடங்களுக்கு பேக்கப் கிடைக்கிறது. இந்த நேரத்தில் 2500 சதுரஅடி வீட்டை கிளீனிங் செய்து கொள்ளலாம்.

எம்ஜேஏ1 செக்யூரிட்டி சிப் (MJA1 Security Chip) வருகிறது. எம்ஐ ஹோம் ஆப் (Mi Home App) ஆகவே மொபைல் மூலம் கன்ட்ரோல்களை செய்து கொள்ளலாம். கிளீனிங் டைம், டிஸ்போசல் டைம் உள்ளிட்டவற்றை பிளான் செய்துகொள்ள முடியும். வை-பை ஐஈஈஈ 802 (Wi-Fi IEEE 802) மற்றும் ப்ளூடூத் 4.2 (Bluetooth 4.2) கனெக்டிவிட்டி சப்போர்ட் வருகிறது.

வீட்டுக்கு வீடு வேணும்.. ஆட்டோமேட்டிக் கிளீன் ஸ்டேஷன்.. மாப் இருக்கு!

ஸ்மார்ட் பீச்சர்களை பார்க்கையில், மேப் மேனேஜ்மெண்ட் (Map Management), அமேசான் அலெக்சா (Amazon Alexa) மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) வாய்ஸ் அசிஸ்டன்ட் வருகிறது. அதேபோல டிரான்ஸ்பரன்ட் ஏர் டக்ட் டிசைன் (Transparent Air Duct Design) வருகிறது. மேலும், ஓடிஏ (OTA) அப்டேட்கள் உள்ளது.

இந்த ரோபோட் வேக்கம் கிளீனர் எக்ஸ்10 மாடலானது, 3.3 கிலோ எடை வருகிறது. பவர் ஸ்டேஷன் உள்ளிட்டவை உடன் 7.4 கிலோ எடையை எட்டும். ஒயிட் (White) கலரில் விற்பனைக்கு வருகிறது. இந்த ரோபோட் வேக்கம் கிளீனரின் விலை ரூ.34,999ஆக இருக்கிறது. வரும் ஜூலை 15ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது.

அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் எம்ஐ.காம் (mi.com) தளங்களில் இந்த சியோமி ரோபோட் வேக்கம் கிளீனர் எக்ஸ்10 மாடலை ஆர்டர் செய்து கொள்ளலாம். அறிமுக சலுகையில் ரூ.29,999 பட்ஜெட்டில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஆகவே, ரூ.5000 டிஸ்கவுண்ட்டில் ஆர்டர் செய்து கொள்ள முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Robot Vacuum Cleaner X10 Launched Sale From July 15 in Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X