ஒரே நாளில் 11 டிவிகளின் விலைகளை நிரந்தரமாக குறைத்த Xiaomi! இதோ முழு லிஸ்ட்!

|

ரூ.20,000 க்குள் என்றாலும் சரி அல்லது ரூ.35,000 க்குள் என்றாலும் சரி.. இல்லையேல் ரூ.60,000 க்குள் என்றாலும் சரி.. இப்படி உங்கள் பட்ஜெட் எதுவாக இருந்தாலும் சரி.. Xiaomi நிறுவனத்தின் Mi TV மற்றும் Redmi TV மாடல்களை கடந்து சென்று.. வேறொரு நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவியை வாங்குவதென்பது மிக மிக கடினம்!

ஏனெனில் Xiaomi.. எல்லா பட்ஜெட்டிலும் Best TV-களை கொண்டுள்ளது!

ஏனெனில் Xiaomi.. எல்லா பட்ஜெட்டிலும் Best TV-களை கொண்டுள்ளது!

எல்லா வகையான பட்ஜெட்களின் கீழும், பெஸ்ட் ஸ்மார்ட் டிவி மாடல்களை தன்வசம் கொண்டுள்ள நிறுவனங்களில் சியோமியும் ஒன்றாகும்!

இப்படியாக, ஏற்கனவே விற்பனையில் பட்டைய கிளப்பும் எம்ஐ (Mi) மற்றும் ரெட்மி ஸ்மார்ட் டிவிகள் மீது, சியோமி நிறுவனம் திடீரென்று ரூ.1,500 முதல் ரூ.6,000 வரையிலான விலைக் குறைப்புகளை அறிவித்துள்ளது.

டக்குனு ரூ.13,000 தள்ளுபடியை பெற்ற Xiaomi போன்; இன்ப அதிர்ச்சினா இதுதானா!டக்குனு ரூ.13,000 தள்ளுபடியை பெற்ற Xiaomi போன்; இன்ப அதிர்ச்சினா இதுதானா!

ஒன்னு இல்ல.. ரெண்டு இல்ல.. 11 டிவிகள் மீது PRICE CUT!

ஒன்னு இல்ல.. ரெண்டு இல்ல.. 11 டிவிகள் மீது PRICE CUT!

சீன டிவி தயாரிப்பாளர் ஆன Xiaomi அதன் டிவி போர்ட்ஃபோலியோவில் உள்ள பெரும்பாலான மாடல்களின் விலைகளை குறைத்து, புதிய மற்றும் திருத்தப்பட்ட விலை விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பிற்கு பின்னால் உள்ள காரணம் தான் - ஹைலைட்!

சில Mi மற்றும் Redmi ஸ்மார்ட் டிவிகளில் பயன்படுத்தப்படும் பொருட்களின் விலையில் "சேமிப்பை" கண்டதாகவும், அதன் விளைவாகவே குறிப்பிட்ட 11 மாடல்களின் விலைகளை குறைத்து உள்ளதாகவும் சியோமி நிறுவனம் கூறி உள்ளது.

என்னென்ன மாடல்கள் மீது எவ்வளவு விலைக்குறைப்பு?

என்னென்ன மாடல்கள் மீது எவ்வளவு விலைக்குறைப்பு?

விலைக்குறைப்பிற்கு பின்னர், இப்போது பல Xiaomi மற்றும் Redmi TV மாடல்கள் குறைந்த விலையில் வாங்க கிடைக்கின்றன.

இந்த பட்டியலில் உள்ள மிகவும் மலிவான டிவி ரூ.15,499 க்கு வாங்க கிடைக்கிறது, அதே போல மிகவும் விலை உயர்ந்த மாடல் ரூ.61,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பட்ஜெட் விலையில் 10.35-இன்ச் Tablet; அதுவும் பிரபல TV கம்பெனியிடம் இருந்து!பட்ஜெட் விலையில் 10.35-இன்ச் Tablet; அதுவும் பிரபல TV கம்பெனியிடம் இருந்து!

32-inch முதல் 65-inch வரை.. ரூ.1,500 முதல் ரூ.6,000 வரை!

32-inch முதல் 65-inch வரை.. ரூ.1,500 முதல் ரூ.6,000 வரை!

Mi TV 4X சீரீஸின் கீழ் வாங்க கிடைக்கும் மாடல்களின் விலை ரூ.6,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல Mi TV 4A சீரீஸ் மாடல்களின் விலை ரூ.4,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.

Xiaomi Smart TV 5A சீரீஸ் மீது ரூ.1,500 என்கிற விலைக்குறைப்பு கிடைக்கிறது. லேட்டஸ்ட் ஆக அறிமுகமான Redmi Smart TV X65 மாடலின் விலையில் ரூ.2,000 குறைக்கப்பட்டுள்ளது.

அந்த 11 டிவிகளின் பழைய விலை VS புதிய விலை:

அந்த 11 டிவிகளின் பழைய விலை VS புதிய விலை:

Redmi Smart TV X65 மாடல் ரூ,61,999 க்கு பதிலாக இனிமேல் ரூ.59,999 க்கு வாங்க கிடைக்கும்.

Mi TV 4X 55 மாடல் ஆனது ரூ.42,999 க்கு பதிலாக ரூ.36,999 க்கு வாங்க கிடைக்கும்.

இதே போல Mi TV 4X 50 மாடல் ஆனது ரூ.35,999 க்கு பதிலாக ரூ.30,999 க்கு விற்பனை செய்யப்படும்

அதே சீரீஸின் கீழ் உள்ள Mi TV 4X 43 ஆனது ரூ.29,999 க்கு பதிலாக ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கும்.

PF திருட்டு: கோடிக்கணக்கான இந்தியர்கள் சிக்கினர்; அக்கவுண்ட்கள் ஆன்லைனில் அம்பலம்!PF திருட்டு: கோடிக்கணக்கான இந்தியர்கள் சிக்கினர்; அக்கவுண்ட்கள் ஆன்லைனில் அம்பலம்!

Mi TV 4A மாடல்களின் பழைய மற்றும் புதிய விலை:

Mi TV 4A மாடல்களின் பழைய மற்றும் புதிய விலை:

43-இன்ச் Mi TV 4A டிவி மாடல் ஆனது ரூ.26,999 என்கிற பழைய விலைக்கு பதிலாக இனிமேல் ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கும்.

மேலும் 40-இன்ச் Mi TV 4A ,மாடல் ஆனது ரூ.23,999 க்கு பதிலாக இனிமேல் ரூ.20,999 க்கு விற்பனை செய்யப்படும்.

இதே போல Mi TV 4A 43 Horizon மாடல் ஆனது ரூ.26,999 க்கு பதிலாக ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கும்.

Mi TV 5A மாடல்களின் பழைய மற்றும் புதிய விலை:

Mi TV 5A மாடல்களின் பழைய மற்றும் புதிய விலை:

Xiaomi Smart TV 5A 43 மாடல் ஆனது ரூ.25,999 க்கு பதிலாக ரூ.24,999 க்கு விற்பனை செய்யப்படும்.

இதேபோல Xiaomi Smart TV 5A 40 மாடல் ஆனது ரூ.22,999 க்கு பதிலாக ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கும்.

இந்த சீரீஸில் கடைசியாக உள்ள Xiaomi Smart TV 5A 32 மாடல் ஆனது ரூ.15,499 க்கு பதிலாக வெறும் ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கும்.

இந்த விலைக்குறைப்பின் கீழ் Mi LED TV 4C 43 மாடலும் உள்ளது. அது இனிமேல் ரூ.25,999 க்கு பதிலாக ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கும்.

3 மாசத்துக்கு முன்ன அறிமுகமான புது OnePlus Phone மீது ரூ.4000 விலைக்குறைப்பு!3 மாசத்துக்கு முன்ன அறிமுகமான புது OnePlus Phone மீது ரூ.4000 விலைக்குறைப்பு!

"பெருமிதம்" கொள்ளும் சியோமி! ஏன்?

"கடந்த நான்கு ஆண்டுகளில், ஸ்மார்ட் டிவி பிரிவானது பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து உள்ளது. குறிப்பாக இந்தியாவில் ஸ்மார்ட் டிவிகளை மக்கள் ஏற்றுக்கொள்வதில் முக்கிய பங்காற்றியதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்" என்று சியோமி இந்தியாவின் மூத்த தயாரிப்பு மேலாளர் சுதீப் சாஹு கூறி உள்ளார்.

மேலும் "புதுமையான தொழில்நுட்பத்தின் மூலம் அனைவரும் சிறந்த வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும், நேர்மையான விலையில் அற்புதமான தயாரிப்புகளை அணுக வேண்டும் என்கிற நோக்கத்தின் கீழ் தான், இந்த புதிய விலை நிர்ணயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது" என்றும் சுதீப் சாஹு கூறி உள்ளார்.

Photo Courtesy: Mi.com

Best Mobiles in India

English summary
Xiaomi Reduced Many Mi TV Redmi TV Models Prices up to Rs 6000 Check New Price Details in India 2022

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X