85 இன்ச் Redmi டிவி அறிமுகம்.. 64ஜிபி மெமரி.. டால்பி விஷன்.. 4K வீடியோ.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்? என்ன விலை?
சியோமி (Xiaomi) நிறுவனம் புதிய ரெட்மி டிவி எக்ஸ் 2025 எனர்ஜி சேவிங் சீரிஸ்-ஐ (Xiaomi Redmi TV X 2025 Energy-Saving series) அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சீரிஸ் 55 இன்ச், 65 இன்ச், 75 இன்ச், 85 இன்ச் என்கிற நான்கு அளவுகளில் கிடைக்கும். அதுவும் இந்த டிவிகள் தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த டிவிகள் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் அறிமுகமாகும்.
குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் ரெட்மி டிவி எக்ஸ் 2025 எனர்ஜி சேவிங் சீரிஸ் வெளிவந்துள்ளது. மேலும் இப்போது இந்த ரெட்மி டிவிகளின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரெட்மி டிவி எக்ஸ் 2025 எனர்ஜி சேவிங் சீரிஸ் அம்சங்கள் (Xiaomi Redmi TV X 2025 Energy-Saving Specifications): இந்த புதிய 55 இன்ச், 65 இன்ச், 75 இன்ச் 85 இன்ச் டிவிகள் 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளன. மேலும் இந்த டிவிகளின் டிஸ்பிளேவில் 3840 × 2160 பிக்சல்ஸ், 288ர்ண கேமிங் மோட், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன், 94 % டிசிஐ-பி3 கலர் காமட் (DCI-P3 Color Gamut) உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2 (Xiaomi's HyperOS 2) மூலம் இந்த புதிய ரெட்மி டிவிகள் இயங்குகின்றன. எனவே மேம்பட்ட பல புதிய அம்சங்களை இந்த டிவிகளில் பயன்படுத்த முடியும். அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியுடன் இந்த ரெட்மி டிவி எக்ஸ் 2025 எனர்ஜி சேவிங் சீரிஸ் வெளிவந்துள்ளன. குறிப்பாக இந்த டிவிகள் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.
குவாட்-கோர் கோர்டெக்ஸ் ஏ73 பிராசஸர் (quad-core Cortex-A73 processor) உடன் இந்த புதிய ரெட்மி டிவிகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். இதுதவிர மாலி-ஜி52 எம்சி1 ஜிபியு (Mali-G52 MC1 GPU)கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த டிவிகளில் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவிகளை நம்பி வாங்கலாம்.
டால்பி அட்மாஸ் (Dolby Atmos), டிடிஎஸ்:எக்ஸ் (DTS:X), ஃப்ரீசின்க் பிரீமியம் (FreeSync Premium) உள்ளிட்ட பல ஆடியோ அம்சங்களுடன் இந்த டிவிகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக இந்த ரெட்மி டிவிகள் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் VRR, ALLM போன்ற ஆதரவுகள் இந்த ரெட்மி டிவிகளில் உள்ளன.
எச்டிஎம்ஐ 2.0 போர்ட், யுஎஸ்பி 3.0 போர்ட், யுஎஸ்பி 2.0 போர்ட், ஆப்டிகல் ஆடியோ அவுபுட், லேன் (LAN), ஏவி, ஆண்டெனா இன்புட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரெட்மி டிவி எக்ஸ் 2025 எனர்ஜி சேவிங் மாடல்களில் உள்ளன. அதேபோல் வைஃபை 6 மற்றும் புளூடூத் 5.2 ஆதரவுகளும் இந்த டிவிகளில் உள்ளன. Super XiaoAi AI வாய்ஸ் அசிஸ்டண்ட் ஆதரவுடன் இந்த ரெட்மி டிவிகள் வெளிவந்துள்ளன.
ரெட்மி டிவி எக்ஸ் 2025 எனர்ஜி சேவிங் சீரிஸ் விலை
ரெட்மி டிவி எக்ஸ் 2025 எனர்ஜி சேவிங் சீரிஸ் 55 இன்ச் மாடலின் விலை 2,199 yuan (இந்திய மதிப்பில் ரூ.25,642)
ரெட்மி டிவி எக்ஸ் 2025 எனர்ஜி சேவிங் சீரிஸ் 65 இன்ச் மாடலின் விலை 2,799 yuan (இந்திய மதிப்பில் ரூ.32,639)
ரெட்மி டிவி எக்ஸ் 2025 எனர்ஜி சேவிங் சீரிஸ் 75 இன்ச் மாடலின் விலை 3,599 yuan (இந்திய மதிப்பில் ரூ.41,964)
ரெட்மி டிவி எக்ஸ் 2025 எனர்ஜி சேவிங் சீரிஸ் 55 இன்ச் மாடலின் விலை 4,999 yuan (இந்திய மதிப்பில் ரூ.58,313)


Click it and Unblock the Notifications








