Home
Gadgets

மிரண்டுபோன மார்க்கெட்.. டால்பி விஷன்.. 64ஜிபி மெமரி.. அறிமுகமானது புதிய Redmi 4கே டிவிகள்.. எந்த மாடல்?

சியோமி (Xiaomi) நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி தனது புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 2025 சீரிஸ் (Redmi Smart TV X 2025 series) மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அதாவது 55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச் மற்றும் 85-இன்ச் அளவுகளில் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 2025 சீரிஸ் டிவிகள் வாங்க கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது இந்த டிவிகளின் விலை மறறும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 2025 சீரிஸ் அம்சங்கள் (Redmi Smart TV X 2025 series Specifications): 4கே டிஸ்பிளே வசதியுடன் இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 2025 சீரிஸ் மாடல்கள் வெளிவந்துள்ளது. மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3840×2160 பிக்சல்ஸ், எச்டிஆர் மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த புதிய ரெட்மி டிவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மிரண்டுபோன மார்க்கெட்.. அறிமுகமானது புதிய Redmi 4கே டிவிகள்..

அதேபோல் ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 2025 சீரிஸ் 55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச் மற்றும் 85-இன்ச் மாடல்கள் AI-SR சூப்பர் ரெசல்யூஷன் மற்றும் எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) ஆதரவைக் கொண்டுள்ளன. குறிப்பாக இந்த ரெட்மி டிவிகள் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

டிசிஐ - பி3 வைடு கலர் காமட் (DCI-P3 Wide Colour Gamut) ஆதரவு கொண்டுள்ளன இந்த புதிய ரெட்மி டிவிகள். மேலும் கண்களுக்கு சிறந்த பாதுகாப்பு கொடுக்கும் வகையில் Qingshan Eye Care எனும் அம்சத்தைக் கொண்டு வெளிவந்துள்ளன இந்த டிவிகள். குறிப்பாக இந்த டிவிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

சக்திவாய்ந்த மீடியாடெக் எம்டி9655 பிராசஸர் (MediaTek MT9655 processor) மற்றும் குவாட் கோர் கார்டெக்ஸ் ஏ73 சிபியு மூலம் இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 2025 சீரிஸ் மாடல்கள் இயங்குகின்றன. குறிப்பாக இந்த டிவிகளுக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி பல சிறப்பான அம்சங்கள் இந்த டிவிகளில் உள்ளன.

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 2025 சீரிஸ் 55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச் மற்றும் 85-இன்ச் மாடல்கள் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவந்துள்ளன. எனவே இந்த டிவகளில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். மேலும் ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM) கொண்டுள்ளன. இந்த ரெட்மி டிவிகள்.

டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் டிடிஎஸ் ( DTS) ஆதரவுடன் டூயல் 25W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளன ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 2025 சீரிஸ் மாடல்கள். எனவே இந்த டிவிகளை வாங்கும் பயனர்களுக்கு சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். மேலும் HyperOS உடன் இந்த புதிய ரெட்மி டிவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

வாய்ஸ் அசிஸ்டண்ஸ் ஆதரவைக் கொண்டுள்ளன இந்த புதிய ரெட்மி டிவிகள். புளூடூத் 5.2, வைஃபை 6, ஏவி இன்புட், யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டிவிகளில் உள்ளன. மேலும் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவும் கொண்டுள்ளன இந்த புதிய டிவிகள்.

மிரண்டுபோன மார்க்கெட்.. அறிமுகமானது புதிய Redmi 4கே டிவிகள்..

ஆனால் தற்போது ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 2025 சீரிஸ் மாடல்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த டிவிகள் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த டிவிகளின் விலை குறித்த தகவல்களைப் பார்க்கலாம்.

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் 2025 சீரிஸ் 55-இன்ச் மாடலின் விலை 2,199 Yuan (இந்திய மதிப்பில் ரூ.25,980), 65-இன்ச் மாடலின் விலை 2,799 Yuan (இந்திய மதிப்பில் ரூ.33,067), 75-இன்ச் மாடலின் விலை 3,799 Yuan (இந்திய மதிப்பில் ரூ.44,891), 85-இன்ச் மாடலின் விலை 4,799 Yuan (இந்திய மதிப்பில் ரூ.56,708).

photo credit: gizmochina, redmi

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Smart TV X 2025 series launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X