Home
Gadgets

வீட்டுக்குள்ள தியேட்டர்.. 32ஜிபி மெமரி.. 75 இன்ச் 4K டிவியை அறிமுகம் செய்த Redmi.. எந்த மாடல்? என்ன விலை?

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி தனது புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி ஏ75 2025 (Xiaomi Redmi Smart TV A75 2025) மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய 75-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது மேம்பட்ட புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. இப்போது ரெட்மி ஸ்மார்ட் டிவி ஏ75 2025 மாடலின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

சியோமி ரெட்மி ஸ்மார்ட் டிவி ஏ75 2025 அம்சங்கள் (Xiaomi Redmi Smart TV A75 2025 specifications): இந்த புதிய 75-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக துல்லியமான வீடியோ காட்சிகளை இந்த டிவி மூலம் பார்க்க முடியுாம். அதேபோல் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), 10.7 பில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.

வீட்டுக்குள்ள தியேட்டர்.. 5 இன்ச் 4கே டிவியை அறிமுகம் செய்த Redmi..

குறிப்பாக சியோமி ரெட்மி ஸ்மார்ட் டிவி ஏ75 2025 மாடல் ஆனது ஹைப்பர் ஓஎஸ் (HyperOS) மூலம் இயங்குகிறது. மேலும் கண்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஆன்டி-ஃப்ளிக்கர் டெக்னாலஜி (anti-flicker technology) ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் கேமிங் வசதிக்கு தகுந்தபடி இந்த டிவியில் பல அசத்தலான அம்சங்கள் உள்ளன. அதேபோல் 98.67 சதவீதம் ஸ்க்ரீன்-டூ-பாடி ரேஷியோ ((Screen to body ratio)ஆதரவு கொண்டுள்ளது இந்த டிவி.

கார்டெக்ஸ்-ஏ53 குவாட்-கோர் சிபியு (Cortex-A35 quad-core CPU) பிராசஸர் மற்றும் ஜி31 எம்பி2 ஜிபியு(G31 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சியோமி ரெட்மி ஸ்மார்ட் டிவி ஏ75 2025 மாடல். குறிப்பாக இந்த டிவிக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய சியோமி ரெட்மி ஸ்மார்ட் டிவி ஏ75 2025 மாடல். குறிப்பாக இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். மேலும் அனைத்து ஓடிடி ஆப்ஸ்களையும் இந்த ரெட்மி டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

டிடிஎஸ் டிகோடிங்குடன் (DTS decoding) கூடிய டூயல் 10W ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த சியோமி ரெட்மி ஸ்மார்ட் டிவி ஏ75 2025 மாடல். குறிப்பாக இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் சியோமியின் AI அசிஸ்டன்ட் ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி டிவி. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

வீட்டுக்குள்ள தியேட்டர்.. 5 இன்ச் 4கே டிவியை அறிமுகம் செய்த Redmi..

டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, 2 எச்டிஎம்ஐ போர்ட்கள், 2 யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட், ஏவி இன்புட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய சியோமி ரெட்மி ஸ்மார்ட் டிவி ஏ75 2025 மாடலில் உள்ளன. அதேபோல் இந்த டிவி ஸ்மார்ட் ரிமோட் ஆதரவையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த சியோமி ரெட்மி ஸ்மார்ட் டிவி ஏ75 2025 மாடல் சீனாவில் தான் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த புதிய டிவிகள் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த டிவியின் விலை 2,999 yuan (இந்திய மதிப்பில் ரூ.34,947) ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Smart TV A75 2025 Launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X