பிரபல ஸ்மார்ட்போன் & டிவி விலையை ஏற்றியுள்ள சியோமி; ஏன்.? என்ன மாடல்.?
இந்த விலையேற்றம் ஆனது நாளை முதல், அதாவது மே 1, 2018 தொடங்கி அமலுக்கு வருகிறது.
பிரபல சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஆன சியோமி நிறுவனம், ஒரு அசாதாரணமான நடவடிக்கையை நிகழ்த்தி உள்ளது. வழக்கமாக பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து, அதன் விலையை இன்னும் குறைத்து விற்பனை செய்யும் வழக்கம் கொண்ட சியோமி, தற்போது அதன் ரெட்மீ நோட் 5 ப்ரோ மற்றும் சியோமி மி எல்ஈடி ஸ்மார்ட் டிவி 4 55-இன்ச் மீதான விலை ஏற்றத்தை நிகழ்த்தி உள்ளது.

இந்த விலையேற்றம் ஆனது நாளை முதல், அதாவது மே 1, 2018 தொடங்கி அமலுக்கு வருகிறது. ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனை பொறுத்தவரை, அதன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு மாடல் ஆனது அதாவது பேஸிக் மாடல் ஆனது இனி ரூ.14,999/-க்கு விற்பனையாகும். மறுகையில் உள்ள சியோமி மி எல்ஈடி ஸ்மார்ட் டிவி 4 55-இன்ச் மாடல் ஆனது ரூ.44,999/- என்கிற விலைக்கு சில்லறை விற்பனை கடைகளில் வாங்க கிடைக்கும்.

ஏன் இந்த விலை ஏற்றம்.?
இதன் அர்த்தம், ரெட்மீ நோட் 5 ப்ரோ மீது ரூ.1,000 என்றும், மி டிவி மீது ரூ.5,000 என்றும் விலையேற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இது பிசிபிஏ இறக்குமதிகளில் நிகழ்த்தப்பட்ட வரிச்சீர்திருத்தத்தின் விளைவாக நிகழ்த்தப்பட்டுள்ள ஒரு நடவடிக்கை ஆகும். சியோமி நிறுவனத்தை பொறுத்தவரை, இந்த இரண்டு பொருட்களின் மீதான மிகப்பெரும் தேவையை பூர்த்தி செய்யவும், இந்த விலையேற்ற நடவடிக்கை உதவும்.

ரெட்மீ நோட் 5 ப்ரோ அம்சங்கள்
அம்சங்களை பொறுத்தவரை, 'இந்தியாவின் கேமரா பீஸ்ட்' என்று நிறுவனத்தின் மூலம் அழைக்கப்படும் ரெட்மீ நோட் 5 ப்ரோ ஆனது இரட்டை கேமரா அமைப்பை வழங்குகிறது. இது ஆப்பிள் ஐபோன் எக்ஸ் போன்ற வடிவமைப்ப்பையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக, அதன் பின்புற கேமரா தொகுதி அப்படியே ஐபோன் எக்ஸ் போன்றே உள்ளது.

12எம்பி + 5எம்பி
கேமராத்துறையை பொறுத்தமட்டில், ஒரு 12எம்பி முதன்மை சென்சார் உடனான ஒரு 5எம்பி இரண்டாம் நிலை சென்சார் இணைந்திருக்கிறது. இது ஆழமான தகவல்களை சேர்க்கிறது. முன்பக்கம் ஒரு 20எம்பி செல்பீ கேமாராவை கொண்டுள்ளது. இரண்டு கேமராக்களுமே எல்இடி ஃப்ளாஷ் ஆதரவைக் கொண்டு வருகின்றன. விரைவில் மியூஐ 9 ஒடிஏ மேம்படுத்தல் வழியாக பேஸ் அன்லாக் அம்சம் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படும் இக்கருவியானது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி சிப்செட் கொண்டு இயங்குகிறது . சிறப்பம்சமாக 636 எஸ்ஓசி கொண்டு தொடங்கப்படும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்.

ஆண்ட்ராய்டு நௌவ்கட்
3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு மற்றும் ஒரு 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி என்கிற மூன்று சேமிப்பு மாதிரிகளில் கிடைக்கும் இக்கருவி அதே மியூஐ 9 உடனான ஆண்ட்ராய்டு நௌவ்கட் அடிப்படையில் மற்றும் ஒரு 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு இயங்கும். ஒரு 5.99 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளே கொண்டுள்ள ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 3 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு, 4 ஜிபி ரேம்+ 64 ஜிபி சேமிப்பு மற்றும் ஒரு 6 ஜிபி ரேம் + 64 ஜிபி என்கிற மூன்றுசேமிப்பு மாடல்களின் வாங்க கிடைக்கும்.

சியோமி டிவியின் ரிமோட்.!
சியோமி மி எல்இடி டிவி 4 அம்சங்களை பொறுத்தவரை, சியோமி மி எல்இடி டிவி 4 மாடல் பொதுவாக பேட்ச்வால் தொழில்நுட்பம் கொண்டு இயங்குவாதல் செட்-டாப் பாக்ஸ் மற்றும் இண்டர்நெட்டில் கிடைக்கும் தரவுகளை ரிமோட் மூலம் தேர்வு செய்து பல்வேறு வீடியோக்களை பார்க்க முடியும். புதிய சியோமி டிவியின் ரிமோட் பொறுத்தவரை ப்ளூடூத் மற்றும் 11பட்டன் அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் ஸ்மார்ட் டிவி மற்றும் செட்-டாப் பாக்ஸ் அனுபவத்தை ஒற்றை ரிமோட் வழங்குவதால், ஒவ்வொன்றிற்கும் தனிப்பட்ட ரிமோட் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.

பிக்சல் தீர்மானம்.!
குறிப்பாக இந்தியாவில் கிடைக்கும் அனைத்து செட்-டாப் பாக்ஸ்களை இயக்கும் வகையில் இந்த சியோமி மி டிவி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆங்கிலம் தவிர 14 இந்திய மொழிகளில் டிவியை இயக்கும் வசதி இடம்பெற்றுள்ளது. ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட், வூட், சோனி லிவ் போன்ற நிறுவனங்களுடன் இணைந்துள்ளதால் அவற்றின் தரவுகளை மிக எளிமையாக பயன்படுத்த முடியும். இந்த சியோமி மி எல்இடி டிவி 4 பொதுவாக 55-இன்ச் 4கே டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 3840x2160 பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. புதிய சியோமி டிவியில் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஏம்லாஜிக் கார்டெக்ஸ் ஏ53 எஸ்ஒசி அமைப்பு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் 750 மெகாஹெர்ட்ஸ் மாலி-டி830 எம்பி2 ஜிபியு இவற்றுள் அடக்கம்.


சாம்சங், சோனி, எல்ஜி டிவிக்களை விட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.!
2ஜிபி டிடிஆர்4 டூயல்-சேனல் ரேம் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு(இஎம்எம்சி 5.1) ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் ப்ளூடூத் எச்டிஎம் போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். 2x 8Wடால்பி ஆடியோ ஸ்பீக்கர், டிடிஎஸ்-எச்டி இவற்றுள் அடக்கம், மேலும் சாம்சங், சோனி, எல்ஜி டிவிக்களை விட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது சியோமி டிவி.


Click it and Unblock the Notifications