Home
Gadgets

Xiaomi ஜெகஜாலா கில்லாடி தான்.. ரூ.999 விலையில் புது ஸ்பீக்கர் விற்பனை.. யோசிக்காம ஆளுக்கு 1 வாங்கி போடுங்க..

சியோமி (Xiaomi) நிறுவனம் சமீபத்தில் ரெட்மி ப்ளூடூத் ஸ்பீக்கர் (Redmi Bluetooth Speaker) சாதனத்தை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த புதிய ரெட்மி ப்ளூடூத் ஸ்பீக்கர் (Redmi Bluetooth Speaker) சாதனத்தை சியோமி நிறுவனம் பிளாக் (Black), க்ரீன் (Green) மற்றும் ஆரஞ்சு (Orange) நிறங்களில் அறிமுகம் செய்தது. இதில் பிளாக் நிற மாடல் கடந்த மாதம் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இப்போது நிறுவனம் அதன் கிறீன் நிற ரெட்மி ப்ளூடூத் ஸ்பீக்கர் (Redmi Bluetooth Speaker) சாதனத்தை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

சியோமி நிறுவனத்திற்கு சொந்தமான துணை பிராண்ட் ஆன ரெட்மி புதிதாக ஒரு ப்ளூடூத் ஸ்பீக்கர் (Bluetooth speaker) மாடலை தற்போது விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இந்த புதிய ஆடியோ வயர்லெஸ் ஸ்பீக்கர் (Audio wireless speaker) சாதனத்தை ரெட்மி மிகவும் குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது. மிகவும் குறைந்த விலையில் இந்த புதிய ரெட்மி ப்ளூடூத் ஸ்பீக்கர் சாதனத்தை நிறுவனம் IP67 அம்சத்துடன் வழங்கியுள்ளது.

Xiaomi ஜெகஜாலா கில்லாடி தான்.. ரூ.999 விலையில் புது ஸ்பீக்கர் விற்பனை

Xiaomi ஜெகஜாலா கில்லாடி தான்.. புது சியோமி ரெட்மி ப்ளூடூத் ஸ்பீக்கர் (Xiaomi Redmi Bluetooth Speaker):

இந்த புதிய ரெட்மி ப்ளூடூத் ஸ்பீக்கர் (Redmi Bluetooth Speaker) சாதனத்தை ஒரு சாதனமாக பயன்படுத்தினால், ஆடியோ குவாலிட்டி அற்புதமாக இருக்கும். அதேபோல், இதனுடன் வரும் ஒரு பிரத்தியேகமான அம்சத்தின் மூலம் மற்றொரு ரெட்மி ப்ளூடூத் ஸ்பீக்கரை பேர் (pair) செய்து இரண்டையும் ஒரே நேரத்தில் பிளே (paly) செய்தால், ஆடியோ குவாலிட்டி அல்டிமேட்டாக (ultimate) இருக்கும் என்று ரெட்மி விளம்பரம் செய்துள்ளது.

ஆம், இது இரண்டு ஸ்பீக்கர்களுக்கு இடையே பேரிங் செய்யும் (dual pairing device) அம்சத்தையும் கொண்டுள்ளது. அதனால், ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களிலும் லோ-லேடன்சி அம்சத்துடன் மிகவும் துல்லியமான மற்றும் சத்தமான ஆடியோவை உங்களால் அனுபவிக்க முடியும். இந்த ரெட்மி ப்ளூடூத் ஸ்பீக்கர் சாதனம் பார்ப்பதற்கு குட்டியாக இருந்தாலும், இதன் சக்தி இண்டோர் ரூம்களில் (indoor rooms) தெறிக்கவிடுகிறது.

இந்த ஸ்பீக்கர் வெளிப்புறத்தில் ஒரு மென்மையான ரப்பர் பொருள் இணைந்து ஒரு ஃபேப்ரிக் மெஷ் துணி போன்ற தோற்றத்தை பெறுகிறது. இந்த ஸ்பீக்கர் ஐபி67 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் திறன் கொண்டது. இதுஅவுட்டோர் பயன்பாட்டிற்கு ஏற்றது. தெரியாதவர்களுக்கு, IP67 மதிப்பீட்டின்படி, தயாரிப்பு முழுவதுமாக தூசியிலிருந்து பாதுகாக்கப்படும் மற்றும் 100cm ஆழம் வரை 30 நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவாக நீரில் மூழ்கினாலும் செயல்படும் திறன் கொண்டது என்பதை குறிக்கிறது.

சியோமி ரெட்மி ப்ளூடூத் ஸ்பீக்கர் விலை (Xiaomi Redmi Bluetooth Speaker Price):

இந்த சாதனம் 1.5" இன்ச் அளவு கொண்ட மெயின் டிரைவர் உடன் 2 யூனிட் அக்குஸ்டிக் காண்பிகிரேஷன் கொண்ட அம்சங்களை ஆதரிக்கிறது. இது கிரிஸ்டல் கிளியர் ஆடியோ மற்றும் ஸ்ட்ராங் பாஸ் அம்சத்தை கொண்டுள்ளது. இதன் விலை பற்றி பேசுகையில், இது இந்திய மதிப்பில் ரூ. 1100 விலை புள்ளியை பெருகிறது. ஆரம்ப சலுகையுடன், ரூ. 999 விலைக்கு வாங்க கிடைக்கிறது. வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் ஆரஞ்சு நிற ஸ்பீக்கர் விற்பனைக்கு வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Bluetooth Speaker Green Colour IP67 Model Goes On Sale Check Price and Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X