Home
Gadgets

சியோமி அறிமுகம் செய்த 75 இன்ச் ஸ்மார்ட் டிவி.. டால்பி ஆடியோ.. 32ஜிபி மெமரி.. எந்த மாடல்? என்ன விலை?

சியோமி நிறுவனம் இந்தியாவில் புதிய சியோமி கியூஎல்இடி எக்ஸ் ப்ரோ 75 ஸ்மார்ட் டிவி (Xiaomi QLED X Pro 75 Smart TV) மாடலை அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த புதிய சியோமி 75 இன்ச் டிவி வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய சியோமி டிவியின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சியோமி கியூஎல்இடி எக்ஸ் ப்ரோ 75 டிவி அம்சங்கள் (Xiaomi QLED X Pro 75 TV Specifications): தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சியோமி 75 இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. மேலும் 3840 x 2160 பிக்சல்ஸ், 1.07 பில்லியன் கலர்ஸ், டால்பி விஷன், எச்டிஆர் 10 பிளஸ் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.

சியோமி அறிமுகம் செய்த 75 இன்ச் ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்? என்ன விலை?

அதுவும் புதிய சியோமி டிவி பெசல்-லெஸ் டிசைன் (Bezel-Less Design) கொண்டுள்ளது. குறிப்பாக விவிட் பிக்சர் என்ஜின் 2 (Vivid Picture Engine 2), ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode) ஆதரவும் இந்த டிவியில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி ஆனது சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

டூயல் லைன் கேட் (Dual Line Gate) டெக்னாலஜி, MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology), ஆட்டோ லோவ் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode) போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த சியோமி டிவியில் உள்ளன.

தரமான குவாட்-கோர் ஏ55 பிராசஸர் (quad-core A55 processor) உடன் இந்த புதிய சியோமி கியூஎல்இடி எக்ஸ் ப்ரோ 75 டிவி மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் இந்த டிவியில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ் எக்ஸ் (DTS X), டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் சவுண்ட்(DTS Virtual X Sound) ஆதரவு கொண்ட 34W பாக்ஸ் ஸ்பீக்கர்கள் இந்த சியோமி டிவியில் உள்ளன. இதுதவிர பல ஆடியோ அம்சங்கள் இந்த புதிய டிவியில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

கூகுள் டிவி (Google TV) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு சியோமி கியூஎல்இடி எக்ஸ் ப்ரோ 75 டிவி மாடல் வெளிவந்துள்ளது. மேலும் குரோம்காஸ்ட், ஆப்பிள் ஏர்பிளே 2, வாய்ஸ் கண்ட்ரோல், சியோமி டிவி பிளஸ் உள்ளிட் பல சிறப்பான வசதிகள் இந்த டிவியில் உள்ளன.

சியோமி அறிமுகம் செய்த 75 இன்ச் ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்? என்ன விலை?

3 எச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட், ஆப்டிகல் ஆடியோ, ஆப்டிக்கல் ஆடியோ, ஏவி இன்புட், 3.5எம்எம் ஆடியோ, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் புதிய சியோமி கியூஎல்இடி எக்ஸ் ப்ரோ 75 டிவி மாடலில் உள்ளன.

சியோமி கியூஎல்இடி எக்ஸ் ப்ரோ 75 டிவி மாடலின் விலை ரூ.69,999-ஆக உள்ளது. தற்போது இந்த டிவியின் முன்பதிவு தொடங்கி உள்ளது. வரும் பிப்ரவரி 27-ம் தேதி எம்ஐ.காம், அமேசான் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் கடைகளில் இந்த டிவி வாங்க கிடைக்கும். குறிப்பாக ரூ.5000 பேங்க் ஆஃபர் இந்த டிவிக்கு வழங்கப்படுகிறது. எனவே இந்த டிவியை ரூ.64,999 விலையில் வாங்கிவிட முடியும்.

Best Mobiles in India

English summary
Xiaomi QLED X Pro 75 Smart TV launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X