ஏப்ரல் 10 உறுதி.. 4K ரெசல்யூஷன்.. 64ஜிபி மெமரி.. வருகிறது புதிய Xiaomi ஸ்மார்ட் டிவிகள்.. எந்த மாடல்?
சியோமி நிறுவனம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி சியோமி கியூஎல்இடி டிவி எக்ஸ் ப்ரோ சீரிஸ் (Xiaomi QLED TV X Pro series) மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த சியோமி கியூஎல்இடி டிவி எக்ஸ் ப்ரோ சீரிஸ் மாடல்களின் சில அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
சியோமி கியூஎல்இடி டிவி எக்ஸ் ப்ரோ சீரிஸ்
சியோமி கியூஎல்இடி டிவி எக்ஸ் ப்ரோ சீரிஸ் அம்சங்கள்: 4கே ரெசல்யூஷன் (4K resolution) மற்றும் மேம்பட்ட பிரைட்னஸ் வசதியுடன் இந்த புதிய சியோமி ஸ்மார்ட் டிவிகள் வெளிவரும். அதேபோல் கேம் பூஸ்டர் மோட் (Game Booster mode) இந்த புதிய டிவிகளில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவிகளை நம்பி வாங்கலாம்.

64ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் சியோமி கியூஎல்இடி டிவி எக்ஸ் ப்ரோ சீரிஸ் மாடல்கள் வெளிவரும். அதேபோல் ஒகே கூகுள் வாய்ஸ் சர்ச் (Ok Google voice search), கூகுள் டிவி இயங்குதளம், பெசல் லெல் டிசைன் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த டிவிகளில் உள்ளன. தற்போது சியோமி கியூஎல்இடி டிவி எக்ஸ் ப்ரோ சீரிஸ் மாடல்களின் சில அம்சங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது.
கூடிய விரைவில் இந்த டிவிகளின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட சியோமி எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி (Xiaomi X Series 50 inch 4K Smart Google TV) ஆனது தற்போது சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது.
அதாவது சியோமி எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவிக்கு பிளிப்கார்ட் தளத்தில் 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.29,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.27999 விலையில் வாங்கிவிட முடியும்.
சியோமி எக்ஸ் சீரிஸ்
50 இன்ச் சியோமி எக்ஸ் சீரிஸ் அம்சங்கள்: சியோமி எக்ஸ் சீரிஸ் டிவி அல்ட்ரா எச்டி 4K டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 3840 × 2160 பிக்சல்ஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), எச்டிஆர் 10 உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன. எனவே இந்த சியோமி டிவி சிறந்த திரை அனுபவத்தை தரும்.
குவாட் கோர் பிராசஸர் (ஏ55) உடன் சியோமி எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்தது. அதேபோல் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் மாலி ஜி52 எம்சி1 ஜிபியு (Mali G52 MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த டிவி.
94 சதவீதம் டிசிபிஐ-3 கலர் காமட் (94% DCPI-3 color gamut), ஏஎல்எல்எம் (ALLM), எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology), உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களுடன் இந்த சியோமி எக்ஸ் சீரிஸ் டிவி வெளிவந்துள்ளது.

2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் உடன் சியோமி எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. பேட்ச்வால் (PatchWall) மற்றும் கூகுள் டிவி ஒஎஸ் (Google TV OS) மூலம் இந்த டிவி இயங்குகிறது. விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine), டால்பி விஷன் டைம் (Dolby Vision Time), 6.5எம்எஸ் ரெஸ்பான்சஸ் டைம் (6.5ms Response Time) உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்.
அதேபோல் டால்பி ஆடியோ (Dolby audio), டிடிஎஸ்-எக்ஸ் (DTS-X), டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் (DTS Virtual X) உள்ளிட்ட ஆடியோ அம்சங்களைக் கொண்ட 30W ஸ்பீகர்கள் உடன் இந்த 50 இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications