TV-னா இப்படி இருக்கனும்.. பட்ஜெட்ல 55 இன்ச் QLED டிஸ்பிளே.. டால்பி ஆடியோ.. 32GB ஸ்டோரேஜ்.. எந்த மாடல்?
இந்திய டிவி பிரியர்களை மிரளவிடும்படியான பட்ஜெட்டில் 4K ரெசொலூஷன் கொண்ட கியூஎல்இடி டிஸ்பிளே, டிடிஎஸ் எச்டி கொண்ட 34W ஆடியோ அவுட், 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் போன்ற பீச்சர்களுடன் சியோமி கியூஎல்இடி டிவி எப்எக்ஸ் ப்ரோ சீரிஸ் 2025 (Xiaomi QLED TV FX Pro Series 2025) வெளியாகி இருக்கிறது. அமேசான் விற்பனையில் (Amazon Sale) அறிமுக சலுகைகளுடன் கிடைக்கும் இந்த ப்ரோ சீரிஸ் 2025 மாடல்களின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் (Alexa Voice Assistant) மற்றும் ஃபயர் டிவி ஓஎஸ் (Fire TV OS) மாடல்களாக இந்த எப்எக்ஸ் ப்ரோ சீரிஸ் வெளியாகி இருக்கிறது. இருப்பினும், ஆண்ட்ராய்டு ஓஎஸ் மாடல்களில் கிடைக்கும் ஆப்கள் மற்றும் பீச்சர்களை கொடுக்கிறது. இதுபோக 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கிறது. இப்போது, முழு பீச்சர்களை பார்ப்போம்.

சியோமி எப்எக்ஸ் ப்ரோ சீரிஸ் 2025 அம்சங்கள் (Xiaomi FX Pro Series 2025 Specifications): இந்த சியோமி டிவியில் 43 இன்ச் மற்றும் 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி (QLED) டிஸ்பிளே கொண்ட 2 மாடல்கள் கிடைக்கின்றன. இதுதவிர மற்ற பீச்சர்கள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஆகவே, இவற்றில் 4K ரெசொலூஷனில் வீடியோக்களை பார்த்து கொள்ளலாம்.
இந்த டிஸ்பிளேவில் விவிட் பிக்சர் என்ஜின் 2 (Vivid Picture Engine 2) மற்றும் குவாண்டம் டாட் டெக்னாலஜி சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கேமிங் பிரியர்களுக்காக 120Hz கேம் பூஸ்டர் ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. அதேபோல எம்ஈஎம்சி (MEMC) மற்றும் ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode) போன்ற டிஸ்பிளே பீச்சர்களையும் இந்த எப்எக்ஸ் ப்ரோ சீரிஸ் கொடுக்கிறது.
ஃபயர் டிவி ஓஎஸ் மட்டுமல்லாமல், குவாட் கோர் கோர்டெக்ஸ் ஏ55 (Quad Core Cortex A55) சிப்செட் கிடைக்கிறது. மேலும், பிரீமியம் பிக்சர் அவுட்புட் கொடுக்கும்படி மாலி ஜி52 எம்சி1 ஜிபியு (Mali G52 MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஃபயர் டிவி ஓஎஸ் இருந்தாலும், பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி ஆப்களை கொடுக்கிறது.

இதுபோக அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட்டின் அக்சஸ் மற்றும் அதற்காக ரிமோட்டில் பிரத்யேக அலெக்சா பட்டனும் வருகிறது. அதேபோல பிரைம் வீடியோ, இன்டர்நெட் போன்ற ஆப்களுக்கும் குயிக் அக்சஸ் ஹாட்-கீகள் வருகின்றன. சியோமி எப்எக்ஸ் ப்ரோ சீரிஸ் 2025 மாடல்களில் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கிறது. ஆகவே, இன்-பில்ட் ஸ்டோரேஜ் அதிகமாக வருகிறது.
ஆடியோவை பார்க்கையில், 43 இன்ச் மாடலில் 30W ஆடியோ அவுட்புட் மற்றும் 55 இன்ச் மாடலில் 34W ஆடியோ அவுட்புட் கிடைக்கிறது. இந்த மாடல்களில் டால்பி ஆடியோ (Dolby Audio) மட்டுமல்லாமல், டிடிஎஸ் எச்டி (DTS HD) மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual:X) சப்போர்ட் கிடைக்கிறது. வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) கிடைக்கிறது.
மேலும், ஏர்பிளே, மிராகாஸ்ட் சப்போர்ட் உள்ளது. போர்ட்களை பார்க்கையில் வழக்கமான எச்டிஎம்ஐ, யுஎஸ்பி, ஆடியோ ஜேக், ஈதர்நெட் மற்றும் ஏவி சப்போர்ட் கிடைக்கிறது. 43 இன்ச் மாடலின் விலை ரூ.27,999ஆகவும், 55 இன்ச் மாடலின் விலை ரூ.39,999ஆகவும் இருக்கிறது. அமேசான் & எம்ஐ தளங்களில் கிடைக்கிறது. ரூ.2000 அறிமுக சலுகை கொடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








