Home
Gadgets

வாங்குனா இப்படி ஒன்னு வாங்கனும்.. 9720mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. புது Xiaomi பேட்.. எந்த மாடல்?

பெரிய பேட்டரியுடன் கிடைக்கும் டேப்லெட் மாடல்களுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கிறது. அதிலும் பட்ஜெட்டில் கிடைத்தால், விற்பனையிலும் பட்டையை கிளப்பிவிடும். இப்படியான பேட்டரி மற்றும் பட்ஜெட்டில் சியோமி பேட் 9 (Xiaomi Pad 9) மாடலை எதிர்பார்க்கலாம். வெளியீடு கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

இந்திய மார்கெட்டில் சியோமி பேட் 8 (Xiaomi Pad 8) மாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு முன்னதாக சீன மார்கெட்டில் வெளியானது. அதேபோல சீன மார்கெட்டில் சியோமி பேட் 9 மாடல் முதலில் வெளியாக இருக்கிறது. பிறகு குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் கிடைக்க இருக்கிறது.

வாங்குனா இப்படி ஒன்னு வாங்கனும்.. 9720mAh பேட்டரி.. 45W சார்ஜிங்!

இதனால், எதிர்பார்ப்பு சற்று அதிகமாக இருக்கிறது. டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் சிபசெட் விவரங்கள் கசிந்துள்ளன. இது முந்தைய மாடலைவிட பெரிய பேட்டரியை கொடுக்க இருப்பது தெரிகிறது. அதேபோல பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் மாடலாகவும் இருக்கப் போகிறது.

சியோமி பேட் 9 அம்சங்கள் (Xiaomi Pad 9 Specifications): 45W ஃபாஸ்ட் சார்ஜிப் சப்போர்ட் கொண்ட 9720mAh பேட்டரியை இந்த சியோமி பேட் 9 மாடல் கொடுக்க இருக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 சீரிஸ் (Octa Core Snapdragon 8 Series) சிப்செட்டை கொடுக்க இருக்கிறது. இந்த வருடத்துக்குள் சீன மார்கெட்டில் வெளியாக இருக்கிறது.

கடந்த மார்ச் மாதத்தில் சியோமி பேட் 8 மாடல் இந்தியாவில் வெளியாகியது. ஆகவே, அடுத்தாண்டிலேயே இந்த சியோமி பேட் 9 மாடலை இந்தியாவில் எதிர்பார்க்கலாம். இருப்பினும், சீன மார்கெட்டில் முன்கூட்டியே வெளியாகினால், இந்தியாவிலும் முன்னதாகவே வெளியாக வாய்ப்புள்ளது. இப்போது, சியோமி பேட் 8 மாடலின் விவரங்களை பார்க்கலாம்.

சியோமி பேட் 8 அம்சங்கள் (Xiaomi Pad 8 Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Octa Core Snapdragon 8s Gen 4) சிப்செட்டை இந்த சியோமி பேட் 8 மாடல் கொடுக்கிறது. அட்ரினோ ஜிபியு கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஹைப்பர்ஓஎஸ் 3 (HyperOS 3) கிடைக்கிறது. மேலும், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

11.2 இன்ச் (3200 x 2136 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 360Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கிறது. இந்த சியோமி பேட் 8 மாடலுக்கு ஸ்டைலஸ் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, அதில் 240Hz டச் சாம்பிளிங் ரேட் பெற்று கொள்ளலாம். எச்டிஆர் 10 (HDR10), டால்பி விஷன் (Dolby Vision) கொடுக்கப்பட்டு உள்ளது.

இதுபோக டிசிஐ பி3 கலர் காமட் கிடைக்கிறது. மேலும், வெட்-ஹேண்ட் டச் (Wet-hand Touch) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 9200mAh பேட்டரி கிடைக்கிறது. ஆகவே, சியோமி பேட் 9 மாடலில் பெரிய பேட்டரி கிடைக்க இருக்கிறது. ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.

13 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 4 ஸ்பீக்கர்கள், 4 மைக்குகள் மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொடுக்கப்பட்டு உள்ளது. ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) கிடைக்கிறது. 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.33,999ஆக இருக்கிறது. இதைவிட கூடுதல் பட்ஜெட்டில் சியோமி பேட் 9 மாடல் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Pad 9 With 9720mAh Battery Launch Soon in China Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X