Home
Gadgets

Tablet மார்க்கெட்டின் தளபதி வந்துட்டான்.. 9720mAh பேட்டரி உடன் புதிய Xiaomi டேப்லெட்.. எந்த மாடல்?

ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் தனது நெக்ஸ்ட் ஜெனரேஷன் பிளாக்ஷிப் டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. அது ஷாவ்மீ பேட் 9 சீரீஸ் (Xiaomi Pad 9 Series) டேப்லெட்கள் ஆகும். ஆரம்பகட்ட தகவல்களின்படி, இந்த சீரீஸில் ஷாவ்மீ பேட் 9 மற்றும் ஷாவ்மீ பேட் 9 ப்ரோ (Xiaomi Pad 9 Pro) ஆகிய இரண்டு மாடல்கள் இடம்பெறலாம்.

இதற்கிடையில் டிப்ஸ்டர் Kacper Skrzypek வழியாக, ஷாவ்மீ பேட் 9 குறித்த சில முக்கிய விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கிடைத்த தகவல்களின்படி ஸ்டாண்டர்ட் ஷாவ்மீ பேட் 9 மாடலானது M656BA, 26103RP65G மற்றும் 26103RP65I ஆகிய மாடல் எண்களை கொண்டிருக்கிறது. இதில் உள்ள "2610" என்ற எண் குறியீடு, ஷாவ்மீ பேட் 9 சீரிஸ் ஆனது இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என்பதை குறிக்கிறது.

9720mAh பேட்டரி உடன் புதிய Xiaomi டேப்லெட்.. எந்த மாடல்?

மேலும், ஷாவ்மீ பேட் 9 மாடலில் 9720mAh திறன் கொண்ட பேட்டரி இடம்பெறும் என்பதையும் ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) குறியீடு மூலம் Skrzypek வெளிப்படுத்தியுள்ளார். ஒப்பிட்டு பார்க்கையில், முந்தைய ஷாவ்மீ பேட் 8 மாடலில் உள்ள 9200mAh திறன் கொண்ட பேட்டரியை விட இது பெரியது ஆகும்

ஆனாலும் முந்தைய மாடலில் பயன்படுத்தப்பட்ட அதே ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Snapdragon 8s Gen 4) சிப், இந்த டேப்லெட்டிலும் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது. கடந்த கால அறிக்கைகளின் படி, ஷாவ்மீ பேட் 9 ஆனது பரவலான சந்தைகளில் அறிமுகமாகும். ஆனால் ஷாவ்மீ பேட் 9 ப்ரோ மாடல் ஆனது இந்தியாவில் அறிமுகமாகாமல் போகலாம்.

நினைவூட்டும் வண்ணம் கடந்த மார்ச் 2026 இல் ஷாவ்மீ பேட் 8 டேப்லெட் ஆனது ரூ.33,999 என்கிற ஆரம்ப விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. இது "2026 ஆம் ஆண்டில் இந்தியாவில் வாங்க கிடைக்கும் மிகவும் ஸ்லிம் ஆன (5.75மிமீ அல்ட்ரா ஸ்லிம் பாடி) பிளாக்ஷிப் ஆண்ட்ராய்டு டேப்லெட்" (India's Slimmest Flagship Android tablet of 2026) என்றும் கூறப்படுகிறது.

ஷாவ்மீ பேட் 8 முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 11.2-இன்ச் (3200 x 2136) 3:2 எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.. இது 144ஹெர்ட்ஸ் வரையிலான வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட், 345 பிபிஐ, 800 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், எச்டிஆர் 10, டால்பி விஷன், 12-பிட் கலர்ஸ், ஹார்ட்வேர்-லெவல் லோ ப்ளூ லைட்டிற்கான TÜV ரைன்லேண்ட் சான்றிதழ் ஆகியவற்றுடன் வருகிறது.

சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி LPDDR5x ரேம் மற்றும் 12ஜிபி LPDDR5T ரேம் வெர்ஷன்களை 128ஜிபி UFS 3.1 ஸ்டோரேஜ் மற்றும் 256ஜிபி UFS 4.1 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை ஷாவ்மீ பேட் 8 மாடல் ஆனது பேக் பேனலில் எப்/2.2 அபெர்க்ஷர் கொண்ட 13எம்பி ப்ரைமரி சென்சாரையும் மற்றும் முன்பக்கத்தில் 8எம்பி எப்/2.28 செல்பீ சென்சாரையும் கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 45W பாஸ்ட் வயர்டு சார்ஜிங் மற்றும் 22.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் கொண்ட 9200mAh பேட்டரியை கொண்டுள்ளது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், ப்ளூடூத் வி6.0, ஐஆர் பிளாஸ்டர் மற்றும் யுஎஸ்பி டைப்-சி யுஎஸ்பி 3.2 ஜென் 1 போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. இது 4-மைக் அமைப்புடன் இணைக்கப்பட்ட டால்பி அட்மோஸ் கொண்டு இயங்கும் குவாட் ஸ்பீக்கர் அமைப்பையும் பெறுகிறது.

இந்த டேப்லெட் கீபோர்ட் மற்றும் ஸ்டைலஸையும் ஆதரிக்கிறது. கடைசியாக இது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ஹைப்பர் ஓஎஸ் 3.0 (HyperOS 3.0) கொண்டு இயங்குகிறது. முக்கியமாக புதிய ஷாவ்மீ பேட் 8 ஆனது ஷாவ்மீ 7 பேட்டில் இருந்து ஷாவ்மீ போகஸ் பென் மற்றும் ஷாவ்மீ போகஸ் கீபோர்ட் உடனான இணக்கத்தன்மையை பராமரிக்கிறது. ஆக இவைகளை ஏற்கனவே கொண்டுள்ள பயனர்கள் அதை புதிய மாடலிலும் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
Xiaomi Pad 9 Tablet With 9720mAh battery Launching Soon Including Indian Market
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X