Home
Gadgets

Xiaomi ஒரே போடு.. 11000mAh பேட்டரி. 67W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 144Hz டிஸ்பிளே.. 16GB ரேம்.. எந்த மாடல்?

பிரீமியம் பீச்சர்களை விரும்பும் டேப்லெட் பிரியர்களை தட்டித்தூக்கும்படி சியோமி பேட் 9 ப்ரோ (Xiaomi Pad 9 Pro) மாடல் வெளியாகி இருக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், குவாட் ஸ்பீக்கர்கள், 67W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 11000mAh பேட்டரி உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்து இருக்கிறது. இந்த டேப்லெட்டின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை பார்க்கலாம்.

சியோமி பேட் 9 ப்ரோ அம்சங்கள் (Xiaomi Pad 9 Pro Specifications): 12.5 இன்ச் (3200 x 2136 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த சியோமி பேட் 9 ப்ரோ கொடுக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 240Hz ஸ்டைலஸ் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், எச்டிஆர்10 (HDR10), டால்பி விஷன் (Dolby Vision) கொடுக்கப்பட்டு உள்ளது.

Xiaomi ஒரே போடு.. 11000mAh பேட்டரி. 67W ஃபாஸ்ட் சார்ஜிங்.. மாடல்?

டிசிஐ பி3 கலர் காமட் கிடைக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) சிப்செட் கொண்ட மாடலாக இந்த சியோமி பேட் 9 ப்ரோ கிடைக்கிறது. அட்ரினோ 829 ஜிபியு (Adreno 829 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) மற்றும் சியோமி ஹைப்பர்ஓஎஸ் 4 (Xiaomi HyperOS 4) கிடைக்கிறது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. மேலும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் களமிறங்கி இருக்கிறது. 50 எம்பி அல்ட்ரா கிளியர் மெயின் கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.

போட்டோ மோட் (Photo Mode), வீடியோ மோட் (Video Mode) மற்றும் போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) உள்ளிட்ட கேமரா பீச்சர்கள் கிடைக்கின்றன. டிஸ்பிளேவுக்கு ஏற்ப பிரீமியம் ஆடியோ அனுபவத்தை இந்த சியோமி பேட் 9 ப்ரோ கொடுக்கிறது. மொத்தமாக 4 ஸ்பீக்கர்கள் மற்றும் 4 மைக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளது.

ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) மற்றும் நாய்ஸ் ரெடக்சன் (Noise Reduction) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சியோமி பேட் 9 ப்ரோ மாடலில் 67W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 11000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. 22.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 5.8 எம்எம் தடிமன் கொண்டுள்ளது.

கலர் டெப்ம்ரேச்சர் சென்சார், ஆம்பியன்ட் லைட் சென்சார் மற்றும் ஃபிளிக்கர் சென்சார் கிடைக்கிறது. மேலும், சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor), ஜியோமேக்னடிக் சென்சார் (Geomagnetic Sensor), ப்ராக்சிமிடி சென்சார் (Proximity Sensor) உள்ளது. இன்பிராரெட் ரிமோட் கன்ட்ரோல் (Infrared Remote Control) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.54,295 ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.58,582 ஆகவும் இருக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.65,728 ஆகவும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.71,461ஆகவும் இருக்கிறது. சீனாவில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Pad 9 Pro With Snapdragon 8 Gen 5 Chipset Launched in China Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X