Home
Gadgets

ப்பா.. 9200mAh பேட்டரி ஆனால் சின்ன 11.2-இன்ச் டிஸ்பிளே.. முரட்டு காம்பினேஷனில் Xiaomi-யின் புது டேப்லெட்!

எல்லாமே ஒரே நேரத்துலயா.. என்று ஷாக் அடிக்க வைக்கும் அளவிற்கு.. ஏற்கனவே ஷாவ்மீ நிறுவனம் அதன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களையும், என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன்களையும் அடுத்தடுத்து அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. பிளாக்ஷிப் மாடல்கள் - ஷாவ்மீ 17 சீரிஸின் க்ளோபல் லான்ச் ஆகும். என்ட்ரி லெவல் போன்கள் - ரெட்மி ஏ7 சீரீஸின் க்ளோபல் லான்ச் ஆகும்.

இதற்கிடையில் ஷாவ்மீ நிறுவனம் இந்தியாவில் தனது டேப்லெட் மாடல் ஒன்றையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது ஷாவ்மீ பேட் 8 (Xiaomi Pad 8) மாடலாக இருக்கலாம். இந்த டேப்லெட் ஏற்கனவே கடந்த செப்டம்பர் 2025 இல் சீனாவில் அறிமுகமாகி விட்டது. ஆக புதிய ஸ்மார்ட்போன்களின் க்ளோபல் லான்ச்சை தொடர்ந்து, ஷாவ்மீயின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் பிரீமியம் டேப்லெட்டும் உலகளாவிய அறிமுகத்தை காணும் என்பது போல் தெரிகிறது.

9200mAh பேட்டரி, 11.2-இன்ச் டிஸ்பிளே.. Xiaomi-யின் புது டேப்லெட்!

இதுகுறித்த சமூக ஊடக பதிவில், ஷாவ்மீ நிறுவனம் ஆனது ஸ்லிம் ஆன, லைட் ஆன மற்றும் பிளாட் ஆன பிரேம் டிசைனை கொண்ட டேப்லெட்டின் வருகையை டீஸ் செய்துள்ளது. அதே நேரத்தில், ஷாவ்மீ இந்தியாவின் சந்தைப்படுத்தல் மற்றும் பிஆர் இணை இயக்குநர், ஒரு டிவி, ஸ்மார்ட்போன் ஐகான்கள் மற்றும் ஒரு டேப்லெட் உள்ளிட்ட தொடர்ச்சியான எமோஜிகளை பகிர்ந்து கொண்டார். ஆக இந்தியாவில் பல வகையான தயாரிப்புகளின் வெளியீடு நெருக்கமாக உள்ளதை புரிந்துகொள்ள முடிகிறது.

நினைவூட்டும் வண்ணம் சமீபத்தில் தான் இந்த பிராண்ட் - ஷாவ்மீ QLED டிவி எக்ஸ் ப்ரோ 2026 மாடலை அறிமுகம் செய்து இருந்தது. மேலும் முன்னரே குறிப்பிட்டபடி ஷாவ்மீ 17 சீரிஸ் மாடல்களின் உலகளாவிய வெளியீடும் மிக அருகில் உள்ளது. எனவே ஷாவ்மீ வெளியிட்டுள்ள டீஸர் அதன் லேட்டஸ்ட் டேப்லெட்டை குறிக்கலாம்

நேற்று தான் ஷாவ்மீ நிறுவனம் அதன் ஷாவ்மீ 17 சீரீஸின் க்ளோபல் லான்ச் ஆனது பிப்.28 நடக்கும் என்பதை உறுதிப்படுத்தி இருந்தது. ஆக எல்லாம் "மொத்தம்"ஆக அறிமுகம் செய்யப்படுமா அல்லது அடுத்தடுத்து அறிமுகம் செய்யப்படுமா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஷாவ்மீ பேட் 8 மாடலின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 11.2-இன்ச் 3.2K LCD டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது 144Hz ரெஃப்ரெஷ் ரேட், HDR10 மற்றும் டால்பி விஷன் ஆதரவுடன் வரும். மீடியா, கேமிங் மற்றும் ப்ரொடெக்டிவிட்டி பணிகளில் நீண்ட நேர அமர்வுகளுக்கு ஏற்றவாறு இது 9,200mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது Snapdragon 8s Gen 4 சிப்செட் கொண்டு இயக்கப்படலாம். விலையை பொறுத்தவரை சீனாவில் இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.34,500 முதல் என்கிற விலைக்கு தொடங்குகிறது.

ஷாவ்மீ அல்ட்ரா 17 லைக்கா எடிஷன் மாடலும் வருகிறது: ஷாவ்மீ 17 சீரீஸின் கீழ் ஷாவ்மீ அல்ட்ரா லைக்கா எடிஷன் (Xiaomi 17 Ultra Leica Edition) ஸ்மார்ட்போனையும் சேர்த்து, மொத்தம் 3 மாடல்களை உலகளவில் அறிமுகம் செய்யலாம் என்கிற தகவலும் கிடைத்து உள்ளது.

உலகளாவிய அறிமுகத்திற்கு முன்னதாக ஷாவ்மீ 17 அல்ட்ரா லைக்கா எடிஷன் ஸ்மார்ட்போன் கீக்பெஞ்ச்சில் (Geekbench) வெளிவந்து உள்ளது, கூடவே முக்கிய செயல்திறன் மற்றும் ஏஐ தொடர்பான விவரங்களையும் வெளிப்படுத்துகிறது. ஆக ஷாவ்மீ 17 சீரீஸின் கீழ் 3 மாடல்கள் அறிமுகமாவது கிட்டத்தட்ட உறுதி ஆகி விட்டது.

எக்ஸ்பெர்ட்பிக் (XpertPick) வழியாக கிடைத்துள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 25128PNA1G என்கிற மாடல் நம்பரின் கீழ் காணப்பட்டுள்ள லைக்கா எடிஷன் ஆனது, பட செயலாக்கம், குரல் அங்கீகாரம் மற்றும் நிகழ்நேர கணக்கீட்டு புகைப்படம் எடுப்பதற்கான மேம்பாடுகள் போன்ற வலுவான ஏஐ பணிகளுக்காக ட்யூன் செய்யப்பட்டுள்ளது.

இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 ப்ராசஸர் (Snapdragon 8 Elite Gen 5 processor) உடன் அறிமுகம் செய்யப்படலாம், மேலும் இது 16GB ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 16 உடன் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆக இது ஷாவ்மீ நிறுவனத்தின் ஹைப்பர்ஓஎஸ் 3 இன்டர்பேஸை இயக்கலாம்

Best Mobiles in India

English summary
Xiaomi Pad 8 With 9200mAh Battery Launching soon In India What to Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X