Xiaomi நீ சூப்பரு.. 5.75மிமீ ஸ்லிம் பாடியில் 9200mAh பேட்டரி.. பக்காவான விலையில் புது Tablet அறிமுகம்!
ஷாவ்மீ (Xiaomi) நிறுவனமானது நாளை (மார்ச் 11) அதன் ஷாவ்மீ 17 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. அதற்கு முன்னதாக, இந்நிறுவனம் லேட்டஸ்ட் டேப்லெட் ஆன ஷாவ்மீ பேட் 8 (Xiaomi Pad 8) மடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
ஷாவ்மீயின் புதிய பேட் 8 மாடல் ஆனது "2026 ஆம் ஆண்டில் இந்தியாவில் வாங்க கிடைக்கும் மிகவும் ஸ்லிம் ஆன (5.75மிமீ அல்ட்ரா ஸ்லிம் பாடி) பிளாக்ஷிப் ஆண்ட்ராய்டு டேப்லெட்" (India's Slimmest Flagship Android tablet of 2026) என்று கூறப்படுகிறது. இது ஹைஎண்ட் ஸ்னாப்டிராகன் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, கூடவே ஸ்டைலஸ் மற்றும் கீபோர்டுக்கான ஆதரவையும் கொண்டுள்ளது.

ஷாவ்மீ பேட் 8 விலை, விற்பனை மற்றும் சலுகைகள்: இந்த டேப்லெட்டின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.33,999 க்கும், 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.36,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த டேப்லெட்டின் நானோ டெக்ஷ்ர் (Nano Texture) வேரியண்ட்டின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.38,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஷாவ்மீ நிறுவனம் ஒரு கிரியேட்டர்ஸ் எடிஷனையும் (Creator's Edition) அறிமுகம் செய்துள்ளது, இது ஷாவ்மீ போகஸ் பென் ப்ரோ (Xiaomi Focus Pen Pro) உடன் வரும்.
ஸ்டாண்டர்ட் டிஸ்பிளே உடன் வரும் கிரியேட்டர்ஸ் எடிஷன் வேரியண்ட் ஆனது ரூ.41,999 க்கும் மற்றும் நானோ டெக்ஷ்ர் உடன் வரும் கிரியேட்டர்ஸ் எடிஷன் வேரியண்ட் ஆனது ரூ.43,999 க்கும் வாங்க கிடைக்கிறது. இந்த டேப்லெட் டைட்டானியம் ப்ளூ மற்றும் கிராஃபைட் கிரே கலர்களில் விற்பனை செய்யப்படுகிறது
அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ (SBI) வங்கி கிரெடிட் கார்டு இஎம்ஐ (EMI) பரிவர்த்தனைகளில் ரூ.3,000 உடனடி வங்கி தள்ளுபடியை பெறலாம் (முழு ஸ்வைப் செய்தால் ரூ.2,750), இதன் மூலம் ஷாவ்மீ பேட் 8 மாடலின் தொடக்க விலையை ரூ.30,999 ஆக குறைக்க முடியும். இந்த அறிமுக சலுகை மார்ச் 31, 2026 வரை செல்லுபடியாகும்.
ஷாவ்மீ பேட் 8 முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 11.2-இன்ச் (3200 x 2136) 3:2 எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.. இது 144ஹெர்ட்ஸ் வரையிலான வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட், 345 பிபிஐ, 800 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், எச்டிஆர் 10, டால்பி விஷன், 12-பிட் கலர்ஸ், ஹார்ட்வேர்-லெவல் லோ ப்ளூ லைட்டிற்கான TÜV ரைன்லேண்ட் சான்றிதழ் ஆகியவற்றுடன் வருகிறது.
சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி LPDDR5x ரேம் மற்றும் 12ஜிபி LPDDR5T ரேம் வெர்ஷன்களை 128ஜிபி UFS 3.1 ஸ்டோரேஜ் மற்றும் 256ஜிபி UFS 4.1 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை ஷாவ்மீ பேட் 8 மாடல் ஆனது பேக் பேனலில் எப்/2.2 அபெர்க்ஷர் கொண்ட 13எம்பி ப்ரைமரி சென்சாரையும் மற்றும் முன்பக்கத்தில் 8எம்பி எப்/2.28 செல்பீ சென்சாரையும் கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 45W பாஸ்ட் வயர்டு சார்ஜிங் மற்றும் 22.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் கொண்ட 9200mAh பேட்டரியை கொண்டுள்ளது.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், ப்ளூடூத் வி6.0, ஐஆர் பிளாஸ்டர் மற்றும் யுஎஸ்பி டைப்-சி யுஎஸ்பி 3.2 ஜென் 1 போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. இது 4-மைக் அமைப்புடன் இணைக்கப்பட்ட டால்பி அட்மோஸ் கொண்டு இயங்கும் குவாட் ஸ்பீக்கர் அமைப்பையும் பெறுகிறது.
முன்னரே குறிப்பிட்டபடி இந்த டேப்லெட் கீபோர்ட் மற்றும் ஸ்டைலஸையும் ஆதரிக்கிறது. கடைசியாக இது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ஹைப்பர் ஓஎஸ் 3.0 (HyperOS 3.0) கொண்டு இயங்குகிறது. முக்கியமாக புதிய ஷாவ்மீ பேட் 8 ஆனது ஷாவ்மீ 7 பேட்டில் இருந்து ஷாவ்மீ போகஸ் பென் மற்றும் ஷாவ்மீ போகஸ் கீபோர்ட் உடனான இணக்கத்தன்மையை பராமரிக்கிறது. ஆக இவைகளை ஏற்கனவே கொண்டுள்ள பயனர்கள் அதை புதிய மாடலிலும் தொடர்ந்து பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








