Home
Gadgets

எனக்கு வேற வழி தெரியல ஆத்தா.. மொபைலை தொடர்ந்து Xiaomi டேப்லெட்கள் விலை உயர்வு.. புதிய விலை என்ன?

ரேம் மற்றும் ஸ்டோரேஜ் சிப்கள் போன்ற மெமரி பாகங்களுக்கு உலகளவில் நிலவும் பற்றாக்குறையின் காரணமாக, ஷாவ்மீ (Xiaomi) நிறுவனமானது, இந்திய சந்தையில் ஏற்கனேவே அதன் பல ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்தியுள்ள நிலையில், தற்போது அதன் டேப்லெட் மாடல்களின் விலைகளையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

எந்த மாடல்? இந்நிறுவனம் அதன் லேட்டஸ்ட் டேப்லெட்களில் ஒன்றான ஷாவ்மீ பேட் 8 (Xiaomi Pad 8) மாடலின் விலையை அமைதியான முறையில் உயர்த்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டேப்லெட்டின் அனைத்து ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வேரியண்ட்களிலும் ரூ.2,000 விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மொபைலை தொடர்ந்து Xiaomi டேப்லெட்கள் விலை உயர்வு.. புதிய விலை என்ன?

ஷாவ்மீ பேட் 8 டேப்லெட் ஆனது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட்டில் இயங்குகிறது மற்றும் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 11.2-இன்ச் 3.2கே ரெசல்யூஷன் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 9,200mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. பேக் பேனலில் 13-மெகாபிக்சல் ரியர் கேமராவும் உள்ளது.

புதிய விலை என்ன? சமீபத்திய விலை மாற்றத்தின் விளைவாக, ஷாவ்மீ பேட் 8 டேப்லெட் மாடலின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.35,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது அதன் அறிமுக விலையான ரூ.33,999 இல் இருந்து ரூ.2,000 அதிகமாகும்.

ஹை-எண்ட் 12ஜிபி ரேம் + 256ஜிபி மாடலின் விலையானது, அதன் அறிமுக விலையான ரூ.36,999 இல் இருந்து தற்போது ரூ.38,999 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல ஷாவ்மீ போகஸ் பென் ப்ரோ (Xiaomi Focus Pen Pro) உடன் வரும் இந்த மாடலின் விலை, முன்பு ரூ.41,999 ஆக இருந்தது, இப்போது ரூ.43,999 ஆக உள்ளது.

மேலும் ஷாவ்மீ பேட் 8 மாடலின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட நானோ டெக்ஸ்சர் டிஸ்பிளே வேரியண்ட் ஆனது அதன் அறிமுக விலையான ரூ.38,999 இல் இருந்து ரூ.40,999 ஆக உயர்ந்துள்ளது. ஷாவ்மீ போகஸ் பென் ப்ரோ உடன் வரும் நானோ டெக்ஸ்சர் டிஸ்பிளே வேரியண்ட் மாடல் ஆனது, முன்பு ரூ.43,999 ஆக இருந்தது, இப்போது ரூ.45,999 ஆக விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்த திருத்தப்பட்ட விலை விவரங்கள் தற்போது ஷாவ்மீ இந்தியா (Xiaomi India) இணையதளத்தில் பிரதிபலிக்கின்றன. ஸ்மார்ட்போன் சந்தையில் நிகழ்வதை போலவே - அதிகரித்து வரும் உதிரிபாகங்களின் விலை மற்றும் உலகளாவிய சிப் பற்றாக்குறை தான் இந்த விலை மாற்றத்திற்கான காரணங்களாக இருக்கலாம். இப்போதைக்கு இது சரி ஆகாது என்பதால், டேப்லெட் வாங்க திட்டமிட்டு உள்ளவர்கள், இன்னும் விலை உயர்வதற்குள் உடனடியாக செயல்படவும்.

ஷாவ்மீ பேட் 8 முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 11.2-இன்ச் (3200 x 2136) 3:2 எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.. இது 144ஹெர்ட்ஸ் வரையிலான வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட், 345 பிபிஐ, 800 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், எச்டிஆர் 10, டால்பி விஷன், 12-பிட் கலர்ஸ், ஹார்ட்வேர்-லெவல் லோ ப்ளூ லைட்டிற்கான TÜV ரைன்லேண்ட் சான்றிதழ் ஆகியவற்றுடன் வருகிறது.

சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி LPDDR5x ரேம் மற்றும் 12ஜிபி LPDDR5T ரேம் வெர்ஷன்களை 128ஜிபி UFS 3.1 ஸ்டோரேஜ் மற்றும் 256ஜிபி UFS 4.1 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை ஷாவ்மீ பேட் 8 மாடல் ஆனது பேக் பேனலில் எப்/2.2 அபெர்க்ஷர் கொண்ட 13எம்பி ப்ரைமரி சென்சாரையும் மற்றும் முன்பக்கத்தில் 8எம்பி எப்/2.28 செல்பீ சென்சாரையும் கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 45W பாஸ்ட் வயர்டு சார்ஜிங் மற்றும் 22.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் கொண்ட 9200mAh பேட்டரியை கொண்டுள்ளது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், ப்ளூடூத் வி6.0, ஐஆர் பிளாஸ்டர் மற்றும் யுஎஸ்பி டைப்-சி யுஎஸ்பி 3.2 ஜென் 1 போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. இது 4-மைக் அமைப்புடன் இணைக்கப்பட்ட டால்பி அட்மோஸ் கொண்டு இயங்கும் குவாட் ஸ்பீக்கர் அமைப்பையும் பெறுகிறது.

இந்த டேப்லெட் கீபோர்ட் மற்றும் ஸ்டைலஸையும் ஆதரிக்கிறது. கடைசியாக இது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ஹைப்பர் ஓஎஸ் 3.0 (HyperOS 3.0) கொண்டு இயங்குகிறது. முக்கியமாக புதிய ஷாவ்மீ பேட் 8 ஆனது ஷாவ்மீ 7 பேட்டில் இருந்து ஷாவ்மீ போகஸ் பென் மற்றும் ஷாவ்மீ போகஸ் கீபோர்ட் உடனான இணக்கத்தன்மையை பராமரிக்கிறது. ஆக இவைகளை ஏற்கனவே கொண்டுள்ள பயனர்கள் அதை புதிய மாடலிலும் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
Xiaomi Pad 8 All RAM Storage Variants Prices Increased in India See Old Price Vs New Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X