பொளக்குது விற்பனை.. ரூ.24,999 போதும்.. 8850mAh பேட்டரி.. 11.2 இன்ச் டிஸ்பிளே.. 4 ஸ்பீக்கர்கள்.. எந்த மாடல்?
டால்பி விஷன் கொண்ட 11.2 இன்ச் டிஸ்பிளே, டால்பி அட்மோஸ் கொண்ட 4 ஸ்பீக்கர்கள், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 8850mAh பேட்டரி, பிடிஏஎப் போகஸ் கொண்ட 13 எம்பி மெயின் கேமரா போன்ற மிட்-பிரீமியம் பீச்சர்களுடன் வெளியான சியோமி பேட் 7 (Xiaomi Pad 7) இப்போது பட்ஜெட்டில் கிடைக்கிறது. மார்கெட் விலையில் இருந்து விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் போக நல்ல லாபத்தில் கிடைக்கிறது. இந்த சியோமி பேட் 7 டேப்லெட்டின் விவரங்கள் இதோ.
சியோமி பேட் 7 அமேசான் விற்பனை (Xiaomi Pad 7 Amazon Sale): மார்கெட் விலையை பார்க்கையில், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.27,999 ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.30,999ஆகவும் இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் மாடலின் விலை ரூ.32,999ஆக இருக்கிறது.

இப்போது, அமேசான் விற்பனையில் ரூ.1,000 விலை குறைப்பு போக, முறையே ரூ.26,999, ரூ.29,999 மற்றும் ரூ.31,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுபோக ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, விலை குறைப்பு + டிஸ்கவுண்ட் என்று ரூ.3,000 விலை கம்மியாக வாங்க கிடைக்கிறது.
இதன் மூலம், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலை ரூ.24,999 பட்ஜெட்டிலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மாடலை ரூ.27,999 பட்ஜெட்டிலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலை ரூ.29,999 பட்ஜெட்டிலும் ஆர்டர் செய்து கொள்ளலாம். ரூ.28,150 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினாலும் ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் வருகிறது.
இந்த சியோமி பேட் 7 மாடலில் கிராஃபைட் கிரே (Graphite Grey), மிராஜ் பர்பிள் (Mirage Purple) மற்றும் சேஜ் கிரீன் (Sage Green) ஆகிய கலர்கள் வருகின்றன. இதில் 12 ரேம் வேரியண்ட்டானது, நானோ டெக்ச்சர் டிஸ்பிளே எடிஷனில் (Nano Texture Display Edition) ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இப்போது, டிஸ்பிளே, பேட்டரி, சிப்செட், கேமரா போன்ற பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
சியோமி பேட் 7 அம்சங்கள் (Xiaomi Pad 7 Specifications): இந்த சியோமி டேப்லெட்டில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2 (Xiaomi HyperOS 2) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7பிளஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 7+ Gen 3 4nm) சிப்செட் கிடைக்கிறது. ஆகவே, மிட்-பிரீமியம் பர்ஃபாமென்ஸ் மற்றும் அட்ரினோ 732 ஜிபியு (Adreno 732 GPU) உள்ளது.
144Hz டச் சாம்பிளிங் ரேட் கொண்ட 11.2 இன்ச் (3200 x 2136 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 240Hz டச் சாம்பிளிங் ரேட் மட்டுமல்லாமல், ஓடிடி பிரியர்கள் விரும்பும்படி எச்டிஆர்10 (HDR10), ஏஐ எச்டிஆர் (AI HDR), டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கிடைக்கிறது. பிடிஏஎப் (PDAF) போகஸ் கொண்ட 13 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.
ஓம்னிவிஷன் சென்சாருடன் 8 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட 4 ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. அதேபோல 4 மைக்குகள் வருகின்றன. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 8850mAh பேட்டரி கிடைக்கிறது. IP52 ரேட்டிங் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட், வை-பை 6இ, ப்ளூடூத் 5.4 போன்ற கூடுதல் பீச்சர்கள் வருகின்றன.


Click it and Unblock the Notifications