ஆஹா.. ஆஹா.. ஒளி வந்துவிட்டது.. Xiaomi இருக்கும் புதிய மாஸ் டேப்லெட்.. என்ன விலை? எப்போது அறிமுகம்?
சியோமி (Xiaomi) நிறுவனம் அதன் புதிய டேப்லெட் சாதனமான சியோமி பேட் 7 சீரிஸ் (Xiaomi Pad 7 Series) மாடல்களை பற்றிய தகவலை வெளியிட்டு ஏறக்குறைய ஒரு வருடத்திற்கும் மேலாகிறது. சியோமி நிறுவனம் அதன் சியோமி பேட் 6S ப்ரோ (Xiaomi Pad 6S Pro) சாதனத்தை 12.4'' இன்ச் டிஸ்பிளேவுடன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்துவிட்டு சைலன்ட் ஆனது. நீண்ட கால இடைவெளிக்கு பிறகு, இப்போது Xiaomi Pad 7 இன் விவரக்குறிப்புகள் இணையத்தில் லீக் ஆகி வெளிவந்துள்ளன. எதிர்பார்க்கப்படும் புதிய டேப்லெட்டின் கூடுதல் தகவல்கள் இதோ.
சியோமி பேட் 7 (Xiaomi Pad 7 ) சாதனம் 11.16'' இன்ச் அளவு கொண்ட 144Hz LCD 3K டிஸ்பிளேவைக் (Display) கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய சியோமி டேப்லெட்டின் 11'' இன்ச் 2.8K டிஸ்பிளேவை விட சற்று பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. சியோமி பேட் 7 ஆனது ஸ்னாப்டிராகன் 7+ ஜெனரல் 3 சிப்செட் (Snapdragon 7+ Gen 3 SoC) உடன் இயக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஆஹா.. ஆஹா.. ஒளி வந்துவிட்டது.. Xiaomi இருக்கும் புதிய மாஸ் டேப்லெட்:
இதற்கு முந்தைய டேப்லெட் மாடலை சியோமி நிறுவனம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் (Snapdragon 870 Chipset) உடன் வெளியிட்டது என்பது கவனிக்கத்தக்கது. மறுபுறம், சியோமி நிறுவனம் சியோமி பேட் 6 ப்ரோ (Xiaomi Pad 6 Pro) டேப்லெட் சாதனத்தில் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் (Snapdragon 8+ Gen 1 SoC) மாடலை பயன்படுத்தியது.
இத்துடன் ஒப்பிடுகையில், சியோமி பேட் 7 ப்ரோ (Xiaomi Pad 7 Pro) சாதனம் முந்தைய மாடலை விட வேகமான ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 chipest (Snapdragon 8s Gen3 SoC) உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், Xiaomi Pad 6S Pro சாதனம் ஸ்னாப்டிராகன் 8 Gen 2 SoC உடன் சக்தி வாய்ந்த டேப்லெட் ஆக சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது இந்த ஆண்டுக்கான பிளாக்ஷிப் சாதனமாக இருக்கும் என்று டிப்ஸ்டர் கூறினார்.
சியோமி பேட் 7 மற்றும் சியோமி பேட் 7 ப்ரோ (Xiaomi Pad 7 and Pad 7 Pro):
Xiaomi நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு சியோமி பேட் 7 சீரிஸ் மாடல் டேப்லெட்டை உரிய அப்டேட்கள் மூலம் ஆதரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், நீண்ட காலத்திற்கு செயல்திறனில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. Xiaomi Pad 7 ஆனது 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிப்பதாகக் கூறப்படுகிறது. முன்னோடிகளில் 33W உடன் ஒப்பிடும்போது, Pro மாடல் 67W ஃபாஸ்ட் சார்ஜிங்கைத் தக்க வைத்துக் கொள்ளும்.
பேட்டரி திறன் மற்றும் கேமரா விவரக்குறிப்புகள் இன்னும் கிடைக்கவில்லை. Xiaomi Pad 7 தொடர் ஆகஸ்ட் 27 அன்று நெட்வொர்க் சான்றிதழைப் பெற்றுள்ளது. இந்த மாத இறுதியில் Xiaomi 15 தொடருடன் இவை அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் இந்த புதிய டேப்லெட் சாதனத்தை சியோமி நிறுவனம் மிட்-பட்ஜெட் செக்மென்ட்டில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய டேப்லெட் வாங்க ஐடியா இருந்தால், கொஞ்சம் பொறுத்திருந்து சியோமி பேட் 7 மாடல்களை வாங்க திட்டமிடுங்கள்.


Click it and Unblock the Notifications








