வீட்டுக்கு வீடு இருக்கனும்.. பட்ஜெட்ல செக்யூரிட்டி கேமரா.. மழையிலும் தாங்கும்.. பேட்டரி போதும்.. எந்த மாடல்?
ஒரு செக்யூரிட்டி கேமரா வாங்கலாமென்று முடிவு செய்தால், அதற்கு லைன் அடிக்கனும், சன் ஷேட் இருக்கனும், மழையில நனைய கூடாது என்று பலவற்றை பார்க்க வேண்டிருக்கும். ஆனால், இப்போது பார்க்கப்போகும் கேமராவுக்கு மேற்கூறிய எதுவுமே தேவை கிடையாது. இதுகுறித்த விவரம் இதோ.
இப்போதெல்லாம், செக்யூரிட்டி கேமரா (Security Camera) இல்லாத வீடுகளை விரல் விட்டு எண்ணி விடலாம். எங்கு பார்த்தாலும் வீட்டின் முன் ஒரு கேமரா தொங்கி கொண்டிருக்கிறது. ஏனென்றால், வீட்டில் யாராவது ஒருவர் இருந்து பார்த்து கொள்ளும் நம்பிக்கையை செக்யூரிட்டி கேமராக்கள் கொடுக்கின்றன.

ஆரம்பத்தில் செக்யூரிட்டி கேமராக்களை பராமரிப்பது எளிதாக இருக்கவில்லை. ஆனால், இப்போது, நிலைமையே மாறிவிட்டது. மழை, வெயில் காலங்களை தாக்கக்கூடிய வகையிலும், பேட்டரி போட்டு பயன்படுத்தும் ஆப்ஷன்களிலும் அவுட்டோர் செக்யூரிட்டி கேமராக்கள் வந்துவிட்டன. இதனால், வாங்கி மாட்டினால் போதும் பயன்படுத்திவிடலாம் என்ற நிலை வந்துவிட்டது.
இருப்பினும், இந்த கேமராக்கள் விலை அதிகமாக இருக்கும் என்று பலர் அதை வாங்குவதில் தயக்கம் காட்டுகின்றனர். ஆனால், சியோமி நிறுவனம் பட்ஜெட்டில் பட்டையை கிளப்பும் அவுட்டோர் செக்யூரிட்டி கேமராக்களை கொடுத்து விற்பனையை அதிகரித்து வருகிறது. இப்போது, சியோமி அவுட்டோர் கேமரா பிடபுள்யூ300 மாடலை களமிறக்கி இருக்கிறது.
சியோமி அவுட்டோர் கேமரா பிடபுள்யூ300 அம்சங்கள் (Xiaomi Outdoor Camera BW300 Specifications): இந்த அவுட்டோர் கேமராவில் 2K ஹை-டெபினிஷன் மற்றும் ஃபுல் கலர் விஷன் சப்போர்ட் வருகிறது. ஆகவே, மொபைலில் பார்ப்பதை போலவே கிளியராக கண்காணிக்கலாம். 130 டிகிரி வரையில் பீல்ட் கவரேஜ் கிடைக்கும். 3 எம்பி கேமரா வருகிறது.

இந்த கேமராவில் ஸ்மார்ட் ஃபுல்-கலர் நைட் விஷன் (Smart full-colour night vision) சப்போர்ட் உள்ளது. ஆகவே, இரவு நேரங்களிலும் கிளியர் ரெக்கார்டிங் கிடைக்கும். அதேபோல ஹை-பவர் இன்பிராரெட் மற்றும் எல்இடி லைட் சப்போர்ட் வருகிறது. மேலும், பிளாக் அண்ட் ஒயிட் மோடும் உள்ளது. இதன் மூலம் இரவில் பிரைட் வியூ கிடைக்கும்.
ஏஐ பவர் மோஷன் கேப்ச்சர் டிராக்கிங் (AI-power Motion Capture Tracking) சப்போர்ட் வருகிறது. ஆகவே, இந்த அவுட்டோர் கேமராவுக்கு முன்னால், யாரேனும் நடந்தாலோ, அசைந்தாலோ அதை டிராக் செய்து வீடியோ ரெக்கார்டிங் செய்து கொடுக்கும். இந்த மாடலானது, மழை, வெயில், பனி போன்ற அனைத்து வெதர்களையும் தாங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆகவே, IP67 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistance) வருகிறது. இந்த சியோமி அவுட்டோர் கேமரா பிடபுள்யூ300 மாடலுக்கு 4900mAh சூப்பர் லார்ஜ் பேட்டரி (Super-large Battery) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால் 180 நாட்களுக்கு பேக்கப் பயன்படுத்தலாம். ஆகவே, 6 மாதங்களுக்கு எந்தவொரு பேட்டரி பேக்கப்பும் தேவைப்படாது.
இதுபோக 5W சோலார் பேனல் ஆப்ஷனும் இந்த சியோமி அவுட்டோர் கேமரா பிடபுள்யூ300 மாடலில் வருகிறது. ஆகவே, தொடர்ந்து எலக்ட்ரிசிட்டி கிடைக்காத இடங்களிலும் இந்த அவுட்டோர் கேமராவை தாராளமாக பயன்படுத்த முடியும். கூகுள் ஹோம் (Google Home) மற்றும் அலெக்சா (Alexa) சப்போர்ட் கொண்டிருக்கிறது.
ஸ்மார்ட்போன் மூலம் ரியல் டைம் பிக்சர்கள், வீடியோக்களை பார்த்து கொள்ளலாம். அதேபோல மோஷன் டிடெக்சன், வைக்கிள் டிடெக்சன் போன்றவற்றின் போது நோட்டிபிகேஷன்களையும் பார்த்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், டூ-வே ஆடியோ கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. இதன் மூலம் வார்னிங் அல்லது தகவல்களை கேமரா முன் இருப்பவர்களிடம் தெரிவிக்கலாம்.
இப்படி ஒட்டுமொத்த பீச்சர்களையும் இந்த சியோமி அவுட்டோர் கேமரா பிடபுள்யூ300 மாடல் கொண்டிருக்கிறது. இப்போது, சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் குளோபல் வெளியீடு வரும் வாரங்களில் நடக்க இருக்கிறது. ஆகவே, இந்தியாவில் விரைவில் எதிர்பார்க்கலாம். இதன் விலை ரூ.5,428ஆக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








