Home
Gadgets

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி.!

சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட பல சாதனங்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவவொரு சாதனமும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருவதால் அதிகளவு விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் இந்நிறுவனம் விரைவில் ஒரு அசத்தலான ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

சியோமி ஒஎல்இடி விஷன் ஸ்மார்ட் டிவி

சியோமி ஒஎல்இடி விஷன் ஸ்மார்ட் டிவி

அதாவது வெளிவந்த தகவலின்படி சியோமி நிறுவனம் விரைவில் ஒஎல்டிஇ விஷன் டிவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாகஇந்த ஸ்மார்ட் டிவி தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்நிறுவனம் அறிமுகம்செய்ய உள்ள புதிய டிவியின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

55-இன்ச் ஒஎல்இடி பேனலுடன் வரும்.

சியோமி விரைவில் அறிமுகம் செய்ய உள்ள புதிய டிவி ஆனது 55-இன்ச் ஒஎல்இடி பேனலுடன் வரும். பின்பு இந்த சாதனம் 4கே டிஸ்பிளே ஆதரவைக் கொண்டுள்ளதால் சிறந்த திரை அனுபவம் கொடுக்கும் என்றே கூறலாம். அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஆண்ட்ராய்டு 11

டால்பி விஷன் IQ, ஃபிலிம்மேக்கர் மோட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல். மேலும்
ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த சியோமி ஒஎல்இடி விஷன் ஸ்மார்ட் டிவி.

DTS-X மற்றும் Dolby Atmos உடன் 30W

குறிப்பாக DTS-X மற்றும் Dolby Atmos உடன் 30W ஸ்பீக்கர் வசதியைக் கொண்டுள்ளது இந்த சியோமி ஒஎல்இடி விஷன் ஸ்மார்ட் டிவி. எனவே இது அதிகவே ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் தியேட்டரில் இருக்கும் அதே ஆடியோஅனுபவத்தை பெறமுடியும்.

 புதிய ரெட்மி ஸ்மா

இதுதவிர Google Assistant ஆதரவு, Patchwall UI போன்ற பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சியோமி ஸ்மார்ட் டிவி மாடல். அதேபோல் இந்த புதிய சியோமி டிவியின் விலை சற்று உயர்வாக இருக்கும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த பிப்ரவரி மாதம் ரெட்மி தனது புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்43 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டுவந்தது,அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

 ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்43

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்43

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்43 மாடல் ஆனது 43-இன்ச் 4கே டிஸ்பிளே ஆதரவுடன் வெளிவந்துள்து. பின்பு 3840 × 2160 பிக்சல் தீர்மானம், எச்டிஆர் ஆதரவு, டால்பி விஷன் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட் டிவி. இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி ஆனது 30 வாட் ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி ஆடியோ வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்தஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்43 மாடல் ஆனது

ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்43 மாடல் ஆனது சமீபத்திய பேட்ச்வால் 4 UI வசதியுடன் ஆண்ட்ராய்டு டிவி 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்43 மாடல் ஆனது குவாட்-கோர் மீடியாடெக் சிப்செட் உடன் Mali G52 GPU ஆதரவும் கொண்டுள்ளது. பின்பு 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

 எச்டிஎம்ஐ ஸ்லாட், யுஎஸ்பி போர்ட்,

இரண்டு எச்டிஎம்ஐ ஸ்லாட், யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட் டிவி கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கும் மிக அருமையாக பயன்படும். ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ்43 மாடலின் விலை ரூ.28,999-ஆக உள்ளது

Best Mobiles in India

English summary
Xiaomi OLED Vision TV May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X