இனி வீட்டில் இருந்தே வருமானம் தான்: xiaomi அறிவித்த அட்டகாச சாதனம்!

|

வீட்டில் இருந்தபடியே வருமானம் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை பல நிறுவனங்கள் அறிவித்து வருகிறது. இதற்கு லேப்டாப் என்பது பிரதான தேவையாக இருக்கிறது. அப்படி லேப்டாப் வாங்க திட்டமிட்டால் உங்களுக்கு இது சரியான தேர்வாக இருக்கும்.

சியோமி அறிமுகம் செய்த லேப்டாப் மற்றும் டிவி

சியோமி அறிமுகம் செய்த லேப்டாப் மற்றும் டிவி

Xiaomi நிறுவனம் சியோமி ஸ்மார்ட் டிவி சீரிஸ் மற்றும் சியோமி நோட்புக் ப்ரோவை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் Xiaomi Smart TV ரூ.28,999 எனவும் சியோமி நோட்புக் ப்ரோ ரூ.69,999 எனவும் அறிமுகம் செய்யப்பட்டது.

லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்டிவி

லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்டிவி

Xiaomi நிறுவனம் இன்று (செவ்வாய்கிழமை) இரண்டு புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தியது. அது ஸ்மார்ட்டிவி மற்றும் லேப்டாப் ஆகும்.

இதில் லேப்டாப் ஆனது 120Hz ரெஃப்ரஷிங் ரேட், 12-வது ஜென் இன்டெல் கோர் ப்ராசசர்கள் மற்றும் 2.5K டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. அதேபோல்

4K சினிமா தர அனுபவத்தை விரும்பும் பயனர்களுக்கு சியோமியின் ஸ்மார்ட்டிவி எக்ஸ் சீரிஸ் ஒரு விருந்தாக இருக்கும். லேப்டாப் விலை ரூ.69,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Xiaomi Notebook Pro 120G லேப்டாப்

Xiaomi Notebook Pro 120G லேப்டாப்

Xiaomi Notebook Pro 120G இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய சியோமி நோட்புக் ஆனது ஏர்-பிட்டிங் அம்சத்துடன் வெளியாகி இருக்கிறது.

இந்த Xiaomi Notebook Pro சீரிஸ் இல் இரண்டு மாடல்கள் இடம்பெற்றுள்ளது.

அது Xiaomi Notebook Pro 120G மற்றும் Pro 120 ஆகும். இந்த லேப்டாப் இந்தியாவில் 120Hz ரெஃப்ரஷிங் ரேட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விண்டோஸ் ஆதரவு

சியோமி நோட்புக் ப்ரோ 120G லேப்டாப் ஆனது தனித்துவமான அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Xiaomi Notebook Pro 120G மற்றும் Pro 120 ஆகிய இரண்டும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் இந்தியாவில் வெளியாகி இருக்கிறது. PlayUnmute ஆதரவோடு இந்த லேப்டாப் அறிமுகமாகி இருக்கிறது.

இந்த லேப்டாப்கள் விண்டோஸ் ஆதரவு மடிக்கணினிகளாக வெளியாகி இருக்கிறது. சரி லேப்டாப் மாடலில் 120 என குறிப்பிட என்ன காரணம் என்ற கேள்வி வரலாம்.

120Hz டிஸ்ப்ளே லேப்டாப்

120Hz டிஸ்ப்ளே லேப்டாப்

120 என குறிப்பிட காரணம் சியோமி இந்த லேப்டாப் டிஸ்ப்ளேவில் 120Hz என ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவை வழங்கி இருக்கிறது.

ஸ்மார்ட்போன் திரைக்கு 120Hz ஆதரவு என்பது இயல்பு. லேப்டாப் டிஸ்ப்ளேக்கு 120Hz ஆதரவு என்பது மிகவும் அரிதான ஒன்று.

Xiaomi Notebook Pro 120G ஆனது பிரத்யேக NVIDIA கிராஃபிக்ஸ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் மற்றொரு மாடல் Intel UHD கிராஃபிக்ஸ் கார்ட் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

செப்டம்பர் 20 முதல் இந்த லேப்டாப்கள் விற்பனைக்கு கிடைக்கும்.

லேப்டாப் மாடல்களின் விலை

லேப்டாப் மாடல்களின் விலை

Xiaomi நோட்புக் ப்ரோ ஆனது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த லேப்டாப் 12-வது ஜென் இன்டெல் கோர் i5 செயலியை கொண்டிருக்கிறது.

Intel UHD கிராஃபிக்ஸ் மாறுபாட்டின் விலை ரூ.69,999 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல் NVIDIA GeForce MX550 மாறுபாட்டின் விலை ரூ.74,999 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இது சில்வர் வண்ணம் என்ற ஒற்றை வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது.

Xiaomi நோட்புக் ப்ரோ: சிறப்பம்சங்கள்

Xiaomi நோட்புக் ப்ரோ: சிறப்பம்சங்கள்

Xiaomi Notebook Pro 120 இன் தனித்துவமான அம்சம், அதன் 14 இன்ச் 2.5K ரெசல்யூஷன் டிஸ்ப்ளே ஆகும். இந்த லேப்டாப்பும் 120Hz ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் 100% sRGB வண்ண வரம்பு இதில் உள்ளது.

இந்த லேப்டாப் ஆனது விண்டோஸ் 11 ஓஎஸ் மூலம் இயங்குகிறது. 16ஜிபி ஆதரவுடன் கிடைக்கிறது இந்த லேப்டாப்.

12வது ஜெனரல் இன்டெல் கோர் i5-12450H செயலி இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் Intel UHD கிராபிக்ஸ் தரத்துடன் கிடைக்கிறது.

1 x டைப்-சி போர்ட், x Type-A USB 3.1 Gen 1, 1 x HDMI 2.0 4கே தெளிவுத்திறன், 1 காம்போ ஆடியோ ஜாக், வைஃபை 6 மற்றும் ப்ளூடூத் 5.2 உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகள் இதில் இருக்கிறது.

56Whr பேட்டரி, 100W சார்ஜர்

56Whr பேட்டரி, 100W சார்ஜர்

இந்த இரண்டு லேப்டாப்களும் 2W ஸ்பீக்கர்களைக் கொண்டிருக்கிறது. 56Whr பேட்டரி மூலம் இது ஆதரிக்கப்படுகிறது. 100W டைப்-சி சார்ஜருடன் இந்த லேப்டாப் கிடைக்கிறது.

இதன்மூலம் 35 நிமிடங்களில் பேட்டரியை 50 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு லேப்டாப் மாடல்களு்ம செப்டம்பர் 20 முதல் விற்பனைக்கு வரும். Amazon, Mi.com உள்ளிட்ட பிற ஸ்டோர்களில் இந்த லேப்டாப் வாங்குவதற்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
xiaomi Notebook Pro Launched in India With 100W Charger

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X