சிங்கம் களம் இறங்கிடுச்சு.. மீண்டும் இந்தியாவிற்கு வரும் Xiaomi லேப்டாப்கள்?
சீன தொழில்நுட்ப நிறுவனமான ஷாவ்மீ (Xiaomi), இந்திய சந்தையில் பல புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. முன்னதாக இந்த பட்டியலில் - 2 புதிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் 1 புதிய டேப்லெட் ஆகியவைகள் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது ஒரு சுவாரசியமான அப்டேட் கிடைத்துள்ளது.
அது என்னவென்றால் - ஷாவ்மீ நிறுவனம் இந்திய சந்தையில் ஒரு புதிய லேப்டாப் மாடலையும் அறிமுகம் செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏன் சுவாரசியமான விஷயம் என்றால் - சில ஆண்டுகளுக்கு முன்பே, ஷாவ்மீ நிறுவனம் இந்தியாவில் அதன் லேப்டாப்களை விற்பனை செய்வதை நிறுத்தி விட்டது. ஷாவ்மீயின் இந்த முடிவுக்கு - லேப்டாப் பிரிவில் ஏற்பட்ட கடுமையான போட்டி காரணமாக இருக்கலாம் அல்லது இந்த பிரிவில் போதுமான வருமானம் இல்லாமல் போய் இருக்கலாம் - இப்போது அது மேட்டர் அல்ல!

மேட்டர் என்னவென்றால் - ஷாவ்மீ நிறுவனம் இந்தியாவில் ஒரு புதிய லேப்டாப் மாடலை அறிமுகப்படுத்துவதில் பணியாற்றி வருவதாக ஷாவ்மீ நிறுவனத்தின் நிர்வாகி உறுதிப்படுத்தி உள்ளார். இப்போதைக்கு அறிமுகம் செய்யப்படப்போவது ஒரு லேப்டாப் என்பதை வெளிப்படையாக உணர்த்தும் எந்த குறிப்பும் இல்லை. ஏனெனில் இது மற்றொரு டேப்லெட்டாக கூட இருக்கலாம்.
இதற்கெல்லாம் காரணம் - ஷாவ்மீ நிறுவனம் ஆனது எக்ஸ் (X) தளத்தில் டேப்லெட் வகையை மறுவரையறை செய்துள்ளதாக டீஸ் செய்தது தான். இது பெரும்பாலும் ஒரு டேப்லெட்டாக இருக்கவே வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் என்ன அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பதை சரியாக குறிப்பிடாததால், அது என்னவாக வேண்டுமானலும் இருக்கலாம்.
டேப்லெட் ஆக இருந்தால் என்ன மாடல் வரும்? அது ஷாவ்மீ பேட் 8 (Xiaomi Pad 8) மாடலாக இருக்கலாம். இந்த டேப்லெட் ஏற்கனவே கடந்த செப்டம்பர் 2025 இல் சீனாவில் அறிமுகமாகி விட்டது. ஆக புதிய ஸ்மார்ட்போன்களின் க்ளோபல் லான்ச்சை தொடர்ந்து, ஷாவ்மீயின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் பிரீமியம் டேப்லெட்டும் உலகளாவிய அறிமுகத்தை காணும் என்பது போல் தெரிகிறது.
இதுகுறித்த சமூக ஊடக பதிவில், ஷாவ்மீ நிறுவனம் ஆனது ஸ்லிம் ஆன, லைட் ஆன மற்றும் பிளாட் ஆன பிரேம் டிசைனை கொண்ட டேப்லெட்டின் வருகையை டீஸ் செய்துள்ளது. அதே நேரத்தில், ஷாவ்மீ இந்தியாவின் சந்தைப்படுத்தல் மற்றும் பிஆர் இணை இயக்குநர், ஒரு டிவி, ஸ்மார்ட்போன் ஐகான்கள் மற்றும் ஒரு டேப்லெட் உள்ளிட்ட தொடர்ச்சியான எமோஜிகளை பகிர்ந்து கொண்டார். ஆக இந்தியாவில் பல வகையான தயாரிப்புகளின் வெளியீடு நெருக்கமாக உள்ளதை புரிந்துகொள்ள முடிகிறது.
ஷாவ்மீ 17 சீரீஸ் எப்போது அறிமுகமாகும்? ஷாவ்மீ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மைக்ரோசைட் ஆனது ஷாவ்மீ 17 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி அன்று உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் என்கிறது. எந்தெந்த மாடல்கள் அறிமுகமாகும் என்பதை ஷாவ்மீ நிறுவனம் வெளியிடவில்லை என்றாலும், டீஸர் படத்தில் ஷாவ்மீ 17 அல்ட்ரா மாடலை தெளிவாக பார்க்க முடிகிறது
ஆக அறிவிக்கப்பட்டுள்ள தேதியில் - ஷாவ்மீ நிறுவனம் குறிப்பிட்ட சர்வதேச சந்தைகளில் ஷாவ்மீ 17 (Xiaomi 17) மற்றும் ஷாவ்மீ 17 அல்ட்ரா (Xiaomi 17 Ultra) ஆகிய 2 மாடல்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் இவ்விரு மாடல்களுமே ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகி விட்டன.
என்ன விலைக்கு வரலாம்? ஷவமே நிறுவனம் இவ்விரு ஸ்மார்ட்போன்களின் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை அறிவிக்கவில்லை என்றாலும், ஷாவ்மீ 17 ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.80,000 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் ஷாவ்மீ 17 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.1,25,000 ஆக இருக்கலாம்.


Click it and Unblock the Notifications








